#உத்தமர்_காந்திகே_இந்தநிலையா....
----------------------------------
#சத்திய_சோதனை
அண்ணா சாலை என்று தற்போது வழங்கி வரும் மவுண்ட் ரோடு. தற்போது அண்ணா சிலை இருக்கும் இடத்தில் மக்களின் வசதிக்காக பூமிக்குக் கீழே ஒரு பொதுக்கழிப்பறை இருந்தது. அந்த இடத்தில் இரவு 12 மணியளவில் சில சமூகவிரோதிகள் குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டிருந்தனர். இதை அறிந்த காவலர்கள் அவர்களை கைதுசெய்து அன்றைய மவுண்ட் ரோடில் ஸ்பென்சர் கம்பெனிக்கு எதிரேயுள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதில் ஒருவர் கூறியது, ‘‘என்பெயர் ஹரிலால், தந்தையின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த்.” அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், “மகாத்மா காந்தியின் மகனா நீ” என்று கேட்டனர். அவன் ஆமாம் என்று கூறினான். காவல்துறையினர் “நீ இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டனர். அதற்கு அவன் கூறிய பதில், “அந்த
மனிதர் என்னை ஏமாற்றிவிட்டார். இங்கிலாந்திற்கு அனுப்பி பாரிஸ்டர் படிப்பு படிக்க ஏற்பாடு செய்வதாகப் சொன்னார்,ஆனால் அதுபோல் செய்யவில்லை. ” காவல்துறையினர் என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கிக் கொண்டிருந்தனர். மேலதிகாரிகளிடம் செய்தியைச் சொல்லிக் கேட்டனர். விடியும் வரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்து காலையில் ஆணையர் (கமிஷனர்) அலுவலகத்திற்கு கூட்டி வரும்படிச் சொன்னார்கள். ஆணையர் அவரது டில்லிக்கு வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இறுதிவரையில் காந்தியடிகள்
அவருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தான் இருந்தார். சில சமயங்களில் கஸ்தூரிபாயைப் பார்க்க ஹரிலால் செல்வார். கஸ்தூரிபாய் அவரை கட்டிக் காண்டு மிகவும் அழுது, “அந்தப் பிடிவாதக்காரரை மாற்ற முடியாது, நீ ஏதாவது வழியில் நல்ல வேலையில் இருந்து பிழைத்துக் கொள்” என்று கூறி அனுப்பி வைப்பார்.
No comments:
Post a Comment