Friday, December 20, 2019

#ஈழத்_தமிழர்களுக்கு_இரட்டை #குடியுரிமை.....#சரியா?

#ஈழத்_தமிழர்களுக்கு_இரட்டை #குடியுரிமை.....#சரியா?
———————————————-
எடப்பாடி பழனிச்சாமி நேற்று புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் கலந்துக் கொண்ட உத்தமர் காந்தியாரின் 150வது கொண்டாட்டத்தைக் குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்துப் பேசியது சரியான நிலைப்பாடு இல்லை. 

ஈழத்தில் இருந்து 1980களில் வந்த அகதிகள் இந்தியாவில் பிரஜா உரிமையோடு தங்க விரும்பினால் அவசியம் இந்திய அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் மத்திய அரசு, ஈழ அகதிகள்  இலங்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால் தங்கிய கட்டணம் (staying charges) மத்திய அரசு வசூலிக்காமல் அவர்களை எளிமையாகவும் நிம்மதியாகவும் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் இந்திய குரியுரிமையோ அல்லது அவர்கள் நாட்டிற்கு திரும்ப விரும்பினால் அதற்கேற்றவாறு இந்திய அரசு கடமையாற்ற வேண்டும். இந்த நிலைதான் சரியானதேயொழிய இரட்டைக் குடியுரிமை என்பது மேலும் சிக்கலை உருவாக்கும். இரட்டைக் குடியுரிமை மிகுந்த ஆபத்தானது. எவ்வாறெனில் இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்கள் இந்தியா இரட்டை குடியுரிமை அளிக்கும் பட்சத்தில் சிக்கலை உறுவாக்கி வெகு எளிதாக அவர்கள் நாட்டுக்குள் அனுமதி மறுக்க வாய்ப்புண்டு.

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை என்பது இங்கிருந்து இடம் பெயர்ந்து வேறு ஒரு நாட்டில் பணியில் இருந்துக் கொண்டு தன்னுடைய நாட்டில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும், இந்தியா நாட்டின் பிரஜையாக இருக்க வேண்டும் என்பவருக்கானது என்ற நிலைப்பாடு உண்டு. ஆனால் இரட்டைக் குடியுரிமை மேற்சொன்னது போன்ற ஆபத்துக்களை விளைவிக்க கூடும் என்பதில்;இது போன்ற விஷயத்தில் சரியான புரிதல் இல்லாமல் இருப்பது தவறு. இந்த விஷயத்தில் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் அல்லது அவர்களை அவர்தம் நாட்டிற்கே திரும்பச் செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படி நடக்கும்  அவர்களுடைய மக்கள் தொகை குறையாமல் இருக்கும். இல்லையெனில் நாம் அடிப்படை வாதமாக வைக்கும் ஈழ மண்னின் மைந்தர்கள்,பூர்விக நாடு (traditional homeland) போன்ற விஷயங்கள் அடிபட்டு போகும். ஏற்கனவே குறைந்து வரும் மக்கள் தொகையை நாம் கவனிக்க வேண்டும் இல்லையேல் இது வேறு விதமான சிக்கல்களுக்கு வழிவகை செய்துவிடும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.12.2019

#ஈழத்_தமிழர்களுக்கு
#இரட்டை_குடியுரிமை..

#ksrposts
#ksrpostings

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...