Wednesday, December 18, 2019

*#சிவகாசியும், #காலண்டர்_தொழிலும்.*

*#சிவகாசியும், #காலண்டர்_தொழிலும்.*
------------------------------
சிவகாசியில் இப்போது காலண்டர் சீசன். சமீபத்தில் அங்கு சென்றபோது, காலண்டர் அடிக்கும் நண்பரின் அச்சகத்திற்கு சென்றிருந்தேன். முன்புபோல அந்த தொழில் இல்லாமல் மந்தமாக இருந்தது.
ஏற்கனவே பட்டாசு, தீப்பெட்டித் தொழில் இங்கே படுத்துவிட்டது. இந்தியா முழுவதும் இங்கிருந்து காலண்டர் அடித்து அனுப்புவது வாடிக்கை. தினக் காலண்டர், மாதக் காலண்டர்,மேஜை காலண்டர்,டைரி, வாழ்த்து அட்டைகள் என்று விதவிதமாக அடிக்கப்படும். கொண்டைய ராஜ் போன்ற ஓவியர்களின் படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்தகால காலண்டர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். ‘கலண்டே’ என்ற லத்தீன் சொல்லே காலண்டர் என்று அழைக்கப்படுகிறது. எகிப்தில் தான் முதன்முதலாக காலண்டர் பயன்படுத்தப்பட்டது. அங்கு அறுவடை நாளும், நைல் நதியில் வெள்ளம் வருவது குறித்தும் கணக்கிடப்பட்டதை அடிப்படையாக கொண்டு தான் காலண்டர் உருவானது. 365 நாட்களை 12 மாதங்களாக சந்திரனுடைய முழுநிலவை வைத்தே கால அளவுகளை ஆதிகாலத்தில் கணக்கிடப்பட்டது. 
இந்தியாவிலேயே காலண்டர் தயாரிப்பில் 70 சதவீதம் சிவகாசியிலேயே நடக்கிறது. குறிப்பாக பெண்கள் அதிகமாக இந்த காலண்டர் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். 1997 முதல் 2017 வரை இதற்கு மத்திய அரசு வரிவிலக்கும் அளித்திருந்தது. தற்போது இதற்கும் ஜி.எஸ்.டி உண்டு. பேப்பர் விலை உயர்வு, பணியாளர் கூலி உயர்வு, அட்டை விலை உயர்வு என்று நாளுக்கு நாள் காலண்டரின் மூலப்பொருட்களின் விலை உயர்வு அதிகரித்துக் கொண்டு வருகிறது. 



குடிசைத் தொழிலாக இருக்கும் இந்த தொழிலுக்கு 1997இல் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, காலண்டர் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று வரிவிலக்கும் அளித்தார். தற்போதுள்ள சூழலில் காலண்டர் தயாரிப்பு பணிகள் லாபகரமாக இல்லாமல் மந்தமாகிவிட்டது. சுமார் 1 லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இதனால் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் சிவகாசி வட்டாரத்தில் உள்ளது. இதை மத்திய, மாநில அரசுகள் கவனித்து இந்த தொழிலை பாதுகாக்க வேண்டும்.

#சிவகாசி #காலண்டர்_தொழில்
#Sivakasi_Calender_Works
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
18-12-2019.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...