Saturday, December 7, 2019

டிகேசி #கல்கி #மாமல்லபுரம் #பொன்னியின்_செல்வன், #சிவகாமியின்_சபதம்

#டிகேசி #கல்கி #மாமல்லபுரம்
#பொன்னியின்_செல்வன், 
#சிவகாமியின்_சபதம்
———————————————-
மிகச்சிறந்த  இரு  நாவல்களான #பொன்னியின்_செல்வன், 
#சிவகாமியின்_சபதம் ஆகியவற்றிற்கு தூண்டுகோலே கவிதை வரிகள்தான். வாணர் குலத்தைப் பற்றிய வெண்பா ஒன்றை டி.கே.சி சொல்லக் கேட்டு, வந்தியத்தேவன் உருவானான். பொன்னியின் செல்வன் உருவெடுத்தது. மாமல்லபுரம் கடற்கரையில் நிலவொளியில் நண்பர்கள் டி.கே.சியும், கல்கியும் வேறுசிலரும் பேசிக் கொண்டிருக்கையில், விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு முன்பு விட்ட குறை வந்து தொட்டாச்சு என்ற தாயுமானவர் வரிகளுக்கு டி.கே.சி விரிவான விளக்க உரை வழங்க அதைக் கேட்க, கேட்க, கல்கியின் மனத்திரையில் பல்லவர் கால கடல்மல்லைக் காட்சிகள் ஒலி ஒளிச் சித்திரமாக விரிந்து வளர்ந்தன. இதனை அவரே குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

#ksrpost
7-12-2019.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...