Friday, December 20, 2019

உள்ளாட்சி_தேர்தல் #கிராமப்புறங்களில்

#உள்ளாட்சி_தேர்தல் #கிராமப்புறங்களில் நடக்கவிருக்கிறது. அதுகுறித்தான செய்திகளை பார்க்கும்போது வேதனையாக இருக்கின்றது. உள்ளாட்சி தேர்தலுக்கான பதவிகளுக்கு ஏலம் போடுவதும், சாதி ரீதியிலான தகுதியில்லாமல் இருப்பவர்கள் அந்த உள்ளாட்சி பதவிகளுக்கு வருவதும், மனிதக் கொலைகளும் அதுமட்டுமில்லாமல் ஆவணங்களை திருத்துவதும், தேர்தல் ஆவணங்களை திருடுவதும் என பலவகையான குழப்பங்கள் நடக்கின்றன. 

ஜனநாயகத்தின் அடிப்படை உள்ளாட்சி தேர்தல்.  உத்தமர்  காந்தி அதை கிராம ராஜ்ஜியம் என்றார். கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரத்தில் நகர அரசுகள் என்ற அடிப்படையின் கீழிருந்து தான் ஜனநாயகம் பிறந்தது.  

இப்படியான ஒரு கிராம ஊராட்சி, அந்த கிராமத்தை வலுப்படுத்தவும் வள்ர்ச்சிபெறவும் தகுதியான நேர்மையான நல்ல ஆளுமைகளை தேர்தல் மூலம் தேர்ந்தெப்பதே அடிப்படையாகும். இதையெல்லாம் விட்டுவிட்டு நடக்கின்ற கூத்தைப் பார்த்தால் பஞ்சாயத்து ராஜின் நோக்கமே நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் தான் ஏற்படுகிறது. கிராமங்களைப் பற்றியும் அதன் புனிதத்தை பற்றியும் பூமிதானங்களுக்கு தலைவராக இருந்த வினோபா கூறுவது வருமாறு.

கிராமப்புறங்கள்,கிராமபூமிதானம் குறித்து‘ஒரு மாநிலத்திற்குள் ஒரு மாநிலம்’என்ற ஆட்சேபனைக்கு, வினோபாவின் பதில்:

“ஒரு மாதுளையில் உள்ள ஒவ்வொரு விதையும் சுயாதீனமாக இருப்பது போல, அங்கேயும் ஒரு மாநிலத்திற்குள் வெவ்வேறு மாநிலங்கள் இருக்கலாம். அந்த பழத்தில், விதைகள் வெவ்வேறு கலங்களில் இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றாக மாதுளை ஒரு பழத்தை உருவாக்குகிறது. இதேபோல், ஒவ்வொரு கிராமமும் ஒரு சுதந்திர மாநிலமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்; அங்கே அத்தகைய மாநிலங்களின் திரள்கள் இருக்கும், மேலும் இதுபோன்ற அனைத்து திரள்களும் உண்டாக்கும் அமைப்புதான் 'உலக அரசு' - இதுதான் நாங்கள் நினைக்கும் கட்டமைப்பு.”

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.12.2019
#கிராம_ராஜ்ஜியம்
#ksrposts
#ksrpostings


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...