"ஜெய் ஹிந்த் " என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை உருவாக்கியவர் 1941ல் ஆபித் ஹசன் சப்ரானி எனும் இஸ்லாமியர்....
"இங்குலாப் ஜிந்தாபாத்" எனும் சொல்லை உருவாக்கியவர் ஹஸ்ரத் மொஹானி.
"மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும் மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர் அஸீமுல்லா கான்.
மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும் (QUIT INDIA) "குய்ட் இந்தியா" எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும், 1942ல் பம்பாய் மேயருமாயிருந்த யூசுப் மெஹர் அலி.
"சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர் முஹம்மது இக்பால்
சுதந்திர போராட்ட வீரர்களை உற்சாகத்தின் எல்லை வரை கொண்டு சென்ற, இன்றும் கேட்கும்போது நம்மை இந்தியனென்று கர்வம் கொள்ளச்செய்யும் "சர்பரோஷ் கி தமன்னா" என்கிற தேசபக்தி பாடலை 1921ல் எழுதியது உருது கவிஞர் பிஸ்மில் அஸ்மாதி.
No comments:
Post a Comment