#திருப்பாவை
#கோதைமொழி 09.மார்கழி
‘ *மாமாயன் மாதவன் வைகுந்தன்* *என்றென்று*
*நாமம் பலவும் நவின்று*
*ஏல்-ஓர் எம் பாவாய்* ’
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரியத்,
தூபம் கமழத், துயிலணை மேல் கண் வளரும்,
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ் திறவாய்!
மாமீர், அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்!
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய = தூய்மையான மணி மாடம் உள்ள வீடு! அதில் வரிசையா விளக்குகள் கண் சிமிட்டுகின்றன!
தூபம் கமழத் = அகிற் புகை, சாம்பிராணிப் புகை, என்று தூபம் வீடு பரவிக் கிடக்க
துயிலணை மேல் கண் வளரும் மாமான் மகளே = நல்ல திம்மென்ற கட்டில் மேல் தூங்குற மாமன் மகள்!
மணிக் கதவம் தாழ் திறவாய் = மணிகள் தொங்கும் கதவின் தாழ் திறவாய்!
உம் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? = உங்க பொண்ணு என்ன ஊமையா? இல்லை செவிடா? எத்தனை முறை எழுப்ப?
அனந்தலோ? = சோர்வோ?
இதைப் படிப்பால் வரும் செருக்குச் சோர்வோ? என்றும் பொருள் கொள்வார்கள் பெரியோர்கள்! ஏதோ பல மந்திரங்களையும், புராணங்களையும், ஜபதபங்களையும் படித்து விட்டதாலேயே இறைவனை அளந்து விடலாம் என்ற ஒரு தீங்கில்லாச் செருக்கு! ஞானச் செருக்கு!
உலகு அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்! இதயத்தில் கொள்ளத் தான் முடியும்!
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ? = யாராச்சும் மந்திரிச்சி கிந்திரிச்சி விட்டுட்டாங்களோ இந்தப் பொண்ணை?
* மாமாயன் = மா+மாயன் = மாமகளுடன் கூடிய மாயோன் என்னும் தமிழ்க் கடவுள்!
* மாதவன் = மா+தவன் = அன்னை-பிதா!
நம் தவத்தின் பயன் என்ன? தவத்தின் பயனே அவன் தான்! அதனால் அவன் தவன்! அவளோடு கூடி, மா+தவன்!
* வைகுந்தன் = நம்முடைய வைகுந்த வீட்டுக்குத் தலைவன்!
என்றென்று "நாமம் பலவும்" நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்! = இப்படி பெருமாளை விடத் தித்திப்பான அவன் நாமங்கள் பலவற்றையும் சொல்லுவோம்! சொல்லுவோம்!
நல்வகையாலே நமோ நாராயணா என்று "நாமம் பல" பரவி
பல்வகையாலே பவித்திரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே!
அப்பாவும் "நாமம் பல பரவி"-ன்னு நாம சங்கீர்த்தனம் பாடுறாரு; பொண்ணும் "நாமம் பலவும் நவின்று"-ன்னு நாம சங்கீர்த்தனம் செய்கின்றாள்!
#திருப்பாவை
#கோதைமொழி
No comments:
Post a Comment