Monday, December 23, 2019

"தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் - 23"

இன்று விவசாயிகள் தினம். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.. இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என பாரதியும் , வள்ளுவப் பெருந்தகை *உழவு* க்கு அதிகாரம் அளித்து 10 குறள்களை எழுதி வைத்திருந்தாலும் அதில் பிரதானமானது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.//

உழவுக்கு வள்ளுவர் தனி அதிகாரம் அளித்தாலும் இதுவரை உழவர்கள் யாரும் அதிகாரத்திற்கு வரவில்லை.
இதுவரை தமிழகத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 45 விவசாய உயிர்களுக்கும், ஒட்டுமொத்த இந்தியாவில் கடன் தொல்லை, பொய்த்த விவசாயம், இன்னபிற காரணங்களால் தற்கொலைக்கு பலியான 5லட்சம் உயிர்களுக்கும் இன்றைய தினத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு.
நாம் சோற்றில் கை வைக்க நித்தமும் சேற்றில் கை வைக்கும் விவசாயிகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
23-12-2019.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...