Thursday, February 29, 2024

*லா கஃபே* #*The Law Cafe* *சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல்*

#*லா கஃபே* #*The Law Cafe* 
*சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல்*
*Ban drug & powder cartel mafia, along with the smugglers, distributors*..

••••••
எதை மனதில் வைத்து இந்த போதை பொருள் விற்பனைக் கும்பல் லா கஃபே என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் பார்ட்னர். இதற்குப் பின்னாடி ஆனவர்கள் எல்லாம் யார் என்று விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.

 தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் ஒரு சங்கம் ஆரம்பித்தால் இந்தப் பெயரைச் சூட்டிக் கொள்ளலாம் தவறில்லை.

 போதைப் பொருளைக் கடத்தியும் விற்கும் ஒரு கும்பல் பொதுவெளியில் இப்படி ஒரு இந்தியப் பொது சட்டத்தின் பெயரால் law cafe என்று பெயர் வைப்பது எவ்வளவு பெரிய தவறு.

 காவல்துறை அதைத் தடை செய்து கடுமையாக  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  வேடிக்கை என்றோ fun என்றோ எடுத்துக் கொண்டு இந்த தான்தோன்றித் தனத்தை எல்லாம் விளையாட்டாய்க் கூட  அனுமதிக்கக் கூடாது.

 உண்மையில்  இது சட்டத்தையும் வழக்கறிஞர்களையும் அவமதிப்பதாகும். கடும் கண்டனங்கள்.

#ksrpost
29-2-2024.


*Leap day #*Former Prime Miniter Morarji Desai brithday

#*Leapday* 
#*Former Prime Miniter Morarji Desai brithday* (29 February 1896)
————————————
Today, February 29, 2024, we are celebrating Leap Day, which is a rare and special occasion that occurs only once every four years. During this day, an extra day is added to the year, making it 366 days long instead of the usual 365. This phenomenon usually occurs in most years that are evenly divisible by four, such as 2020, 2024, 2028, and so on.
Leap Day came about as a result of the Julian calendar, which was used way back in 46 BCE. The Julian calendar did not account for the fact that it takes the Earth a bit more than 365 days to complete its journey around the Sun. By adding an extra day, we help make up for this extra time, which helps to keep our calendar in sync with the Earth's orbit. Without Leap Day, our seasons would slowly start shifting, getting earlier and earlier each year, which could mess things up.
Morarji Ranchhodji Desai brith day leap day (29 February 1896 – 10 April 1995) was an Indian independence activist and politician who served as the 4th Prime Minister of India between 1977 and 1979 leading the government formed by the Janata Party. During his long career in politics, he held many important posts in government such as Chief Minister of Bombay State, Home Minister, Finance Minister and 2nd Deputy Prime Minister of India.
Morarji Desai.
#ksrpost
29-2-2024.


#*தாயைபார்க்கமுடியாதசாந்தன்*! #*அமீரைவிசாரிக்கணும்* -

#*தாயைபார்க்கமுடியாதசாந்தன்*! 
#*அமீரைவிசாரிக்கணும்* - 
KS Radhakrishnan Interview | Jaffer Sadiq | DMK 

#ksradhakrishnan #jaffersadiq #directorameer #ameer #dmk #mkstalin #santhan #cubetamil #cubemedia 

https://youtu.be/ttUoAUXRmZQ?si=RIAzFhOIDDCQi1Rb


#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
29-2-2024.

Tuesday, February 27, 2024

தமிழகத்தில் போதை பொருட்கள்….

தனக்கும் போதை வழக்கில் சிக்கியிருக்கும் ஜப்பார் சாதிக்கிற்கும் தயாரிப்பாளர் - இயக்குனர் என்ற உறவு தான் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்த அறிக்கைய ஓன்று வெளியிட்டுள்ளீர்கள்.

நீங்களும் ஜப்பார் சாதிக்கும் இனைந்து உயர்தர (4am cafe & kitchen) மற்றும் The Law Cafe உணவகத்தை திறந்திற்களே அதை ஏன் அறிக்கையில் மறைத்து உள்ளீர்கள்?கடைத்திறப்பு விழா மேடையில் பேசும் போது "வாய்நிறைய நன்பர் ஜாப்பர்" நன்பர் ஜாப்பர் என சொன்ன நீங்கள் ஏன் திடிரென அவரை நேற்று வெளியிட்ட அறிக்கையில் "தயாரிப்பாளர் ஜாப்பர் என அழைக்கிறார்கள்?

கடைத்திறப்பு விழாவிற்கு வந்த விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன் அனைவரும் கடையை நீங்களும் ஜாப்பரும் இனைந்து தான் தொடங்கியுள்ளீகள் என கூறி வாழ்த்துக்கள் சொல்கிறார்களே?

அறிக்கையின் 7ஆவது பத்தியில் சட்டவிரோத செயல்களில் ஈடுப்படும் யாராருடன் இனைந்து பனியாற்ற போவதில்லை என சொல்யுள்ளீர்களே... அதாவது நீங்கள் "இறைவன் மிக பெரியவன்" படத்திலிருந்து விலகிக் கொள்ள உள்ளீர்களா?

அப்போ உங்கள் "மாயவலை" படத்தின் தயாரிப்பாளர் "ஜாப்பர் சாதிக்" ஆச்சே அதை என்ன பன்ன போரீங்க?

எனக்கும் - சாதிக்கிற்கும் தயாரிப்பாளர் இயக்குனர் உறவு மட்டுமல்ல Business Partners கூட என சொல்ல மறுப்பது Sorry மறைப்பது ஏன்?

ஏதோ வக்கீலிடம் Legal அட்வைஸ் கேட்டுளிர்கள் அவர்கள் எழுதி கொடுத்ததை அறிக்கையை வெளியிட்டு உள்ளீர்கள் அது உங்கள மேலும் சிக்கலில் சிக்கவைக்கும் என நீங்கள் யோசிக்கவில்லையா?

அனைவருக்கும் தெரிந்த உண்மையான நீங்களும் - ஜாப்பர் சாதிக்கும் Business Partners என்பதை மறப்பது ஏன்?

புலனாய்வு அமைப்புகள் இவையெல்லாம் எளிதாக மோப்பம் பிடிக்கும் என்பதை கூட Legal Team தங்களுக்கு ஆலோசனை வழங்க வில்லையா?

இரும்பு வியாபாரம் யாருடன் ஜப்பார் வியாபாரம் நடத்தினர்?
யாருக்கு எம்பி பதவி பெற என்ன திறை மறைவு பணிகள் நடந்தன? என பலர் சொல்கின்றனர்… இது உண்மையா

*புலனாய்வு அமைப்புகள் தேச நலன் - இளைஞர் நலன் கருத்தில் கொண்டு உரிய விசாரணை வேண்டும்.
#Drug #drugsmuggling
#smuggling #Amir

தமிழக தன்நல அரசியல்….

#ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இருப்பேன் என்றார்…
பிறகு இல்லை என்றார்.

பின்,இமயமலை சென்றார்
அயோத்தி சென்றார்
சசிகலாவின் புதிய வீட்டுக்கு சென்றார்
கலைஞர் சமாதிக்கும் சென்றார்.. அதை தாஜ் மகால் என்றார்.
இதுவரை இப்படியாக,தான் ஒரு நல்ல நடிகர் என காட்டி விட்டார். 

இதில்,இன்னொரு சேதி; ஒடிசா முதலமைச்சர் · பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரான நவீன் பட்நாயகின் நடவடிக்கையை பாரீர்…..

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தன் தந்தை பிஜூ பட்நாயக்கின் -  பூரியில்  ஸ்வர்க்துவாரில் -,1997 ல் அமைத்த  நினைவிடத்தை - சமாதியை அகற்ற உத்தவிட்டார். 

அவரின் நினைவு  கல்லில் வாழ்வதை  விட மக்களின் மனதில் வாழ்ந்தால் போதும் என கருத்து தெரிவித்துள்ளார்!! 

மக்களின் இறுதி சடங்கினை நடத்த ஸுவர்கதுவாரில் குறைந்த இடமே இருப்பதால் அச்சமாதி அகற்றப்பட்டதாம். 

அந்த மாநிலத்தில் நாம் சினிமா போஸ்டர்களே பார்க்க முடியாது. 

கோயில்கள் மட்டும் அங்கே பிரமாண்டம் இல்லை. பட்நாயக் வம்சத்தினரின் மனதும் பிரமாண்டம்!! 

கர்நாடக காரன் காவிரியில மேகேதாட் அணை கட்டுறான், ஆந்திரா காரன் பாலாறுல 23 வது தடுப்பு அணை கட்டுறான், கேரளா  காரன்  முல்லை பெரியாறில்  குறுக்கே அணை  கட்டுகிறான்  இவங்க அதைப்பத்தி எந்த கவலையும் இல்லாம கல்லறை கட்டி படையல், சப்பல் கட்டை அடித்து சாமி கும்பிட்டு இருக்காங்க பகுத்தறிவை போதிக்கும்  விடியல், மணல் - போதை பொருள் மாடல்.
#பட்நாயக் #ஒடிசா
#patnaik #odhisa

#*தேர்தல் கூட்டணிகள்*

#*தேர்தல் கூட்டணி*
*திமுகவில் துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு பின் மூத்த தலைவர்களுக்கு பஞ்சம் வந்துள்ளது*-
KS Radhakrishnan 

#ksradhakrishnan #ksr #tamilnadupoltics 
#*tamilnaduelectionalliance* #admk #dmk #Kalaignar #stalin  #vaiko #kanimozhi #seeman #savukkumedia #savukkuonline #savukkunews #தேர்தல்கூட்டணி

youtu.be/IGih-XsijAc?si…

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
27-2-2024.

Monday, February 26, 2024

Today, 26-2-2024 evening @Auroville

Today, 26-2-2024 evening @Auroville

#*எனது சுவடு பகுதி 55* கேஎஸ்ஆர்

#*எனது சுவடு பகுதி 55*
———————————
#ksradhakrishnan, #indiragandhi, #Stalin, #politics, #kamarajar,  #mgr, #kamarajar #kalaignar #karunanidhi #kamarajar #kaamarajhistoryintamil #kamarajaruntoldstory #kamarajarmovie #nedumaran 

#KSRVOICE
#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்வாய்ஸ் youtu.be/bfwnsLDXbic?si…

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
25-2-2024.

Sunday, February 25, 2024

இயற்கையின் நீதி….🔥

எத்தனை எதிர்வினைகள்….
பல நேரங்களில் பல மனிதர்களின் எதிர் செயல்கள்
எனக்கு வழியா இல்லை⁉️


மக்கள் முன் திமுக இக்கேள்விகளுக்கான விடைகளை வழங்க வேண்டும்.

போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று சூளுரைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போதைப்பொருள் கடத்தல்  ஆசாமிக்கு பதவி கொடுத்து திமுக-வில் வைத்திருந்ததின் நோக்கம் என்ன?  

கலைஞருக்கு நெருக்கமான என் போன்ற பலர் திமுக எதிர்கட்சியாக இருந்த நிலையில், பல ஆண்டுகள் உழைத்தவர்களும் உண்டு. என் நீக்கம்  இயற்கையின் நீதி ஸ்டாலின் மற்றும்அவரை சாந்தவர்களை கேள்விகளை ஒரு நாள் கேட்கும்.
****
திரைப்படத்தில் போதை பொருள் கடத்தின கதை எத்தனையோ பார்த்து இருக்கேன்,  

 டெல்லியில் போதை மருந்து  விற்பனை…போதை பொருள் கடத்தல் கும்பலே   மக்களுக்கு திரைப்படம் தயாரித்து இப்போ தாண்டா  பார்க்கிறேன்.. 
திமுகவில் கலைஞருக்கு நெருக்மாக இருந்த நான் 2021 வரை திமுகவில் இப்படியான நபர்களை பார்த்தது இல்லை.
இவர்கள் கபி ( கலைஞரின் பின் ஸ்டாலின் குடும்ப)திமுக. ‘நல்ல சீராக’ என்பது இப்படிதான் இன்றைய அரசியல்.

தமிழ் நாட்டில் பஞ்சு மிட்டாய் தடை.
சொன்ன மதுவிலக்கு இல்லை…

அமைச்சருக்கு நெருக்கமாக இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சினாலும், முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்து போதைப் பொருள் கடத்தினாலும் உலகின் நினைத்துப் பார்க்கமுடியாத கொடூர தண்டனை வழங்கப்படுவதை நினைத்து மனம் பதைக்கிறது. திருடர்கள் மாடலில்., சாரி. வேறேதோ மாடலில் மனசாட்சியே இல்லாமல் நடவடிக்கைகள் பாய்கிறது...

ஆமாம். கட்சிய விட்.....டே........ நீக்கிடறாங்க !!!••••

படர்க்கைப் பலர்பால் வினைமுற்றாக இருக்கனும்..  தமிழ் மொழிநடை…

••••

Only for showing nothing to do 

இன்றைய திமுக#dmkfailsSaturday, February 24, 2024

*நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் ரூ.700 கோடிக்கு கனிமவளக் கொள்ளை!*

#*நெல்லையில்பினாமிகல் குவாரிகள்*  | *கலெக்டரை மிரட்டி*| *700கோடி கல்குவாரிஊழல்* | 
*மாடல் விடியா திமுக ஆட்சியின் பதில் என்ன*⁉️

*அறப்போர் இயக்கத்தின் ஆதாரங்களைக் கொண்டு உடனடியாக வெளிப்படையான விசாரணை அரசு நடத்த வேண்டும்!*

நெல்லை மாவட்டத்தில் உள்ள 54 கல்குவாரிகளில், ‘அரசியல் வியாபார பெரும் புள்ளிகள்’, அரசு உயர் அதிகாரிகள் துணையுடன் நடந்த சட்டவிரோத கனிமவளக் கொள்ளை குறித்தும், அதன்மூலம் நடைபெற்ற சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமான ஊழல் முறைகேடுகள் குறித்தும் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ள ஆதாரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தினை தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனராக இருந்த நிர்மல்ராஜ் ஐஏஎஸ் அவர்கள், மாவட்டத்தில் செயல்படும் 54 கல் குவாரிகளில், முறைகேடாக இயங்கிய 53 கல் குவாரிகளில் 281 சதவீதத்திற்கும் அதிகமாக சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளை நடைபெற்று இருப்பதை கண்டறிந்தார். அதன் அடிப்படையில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ் அவர்கள், 53 கல்குவாரிகளையும்  தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். மேலும்,  சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட 24 குவாரிகளுக்கு ரூ.262 கோடியை சேரன்மகாதேவி  துணை ஆட்சியர் அபராதமாக விதித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சட்டவிரோத கல்வாரிகளுக்கு எதிராக நேர்மையாக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் நிர்மல் ராஜ்  ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்கள் சேரன்மகாதேவி துணை ஆட்சியரால் 24 சட்டவிரோத  குவாரிகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட 262 கோடியை, 14 கோடியாகக் குறைத்தும், அந்த அபராதத் தொகையை மாதத் தவணையில் செலுத்தவும் கல்குவாரி உரிமையாளர்களுக்கு சலுகை வழங்கினார். மட்டுமின்றி, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், அதிகமான முறையில் தோண்டப்பட்ட சட்டவிரோத  கல்குவாரிகள் மீண்டும் செயல்படும் வகையில், மூடப்பட்ட கல் குவாரிகளை செயல்படவும் அனுமதி வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. 

கல்குவாரிகள் தொடர்பான இந்த சங்கிலி தொடர் மாற்றங்கள், நேர்மையான முறையில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள்,  சட்ட விரோத கல் குவாரிகள் மீண்டும் செயல்படுவதற்கான அனுமதிகள் ஆகிய இவை அனைத்தும்,  ஆட்சியாளர்களுக்கும், கனிமவளக் கொள்ளை மூலம் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்குமான தொடர்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சட்டவிரோத கல் குவாரிகளால் இயற்கை வளங்கள் சுரண்டல் மட்டுமின்றி, அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் இழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு  என ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு உண்மையான மக்கள் நலன் அரசாக இருக்குமானால் இத்தகைய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகளின் செயல்பாட்டை  தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். ஆனால், இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது ஆளும் கட்சியின் தொடர்பில் உள்ள பெரும்புள்ளிகள் என்பதால், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் இந்த அரசு ஊழல் முறைகேட்டிற்கு துணை போய்க்கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் செயல்படும் கல்குவாரிகளில் பல அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக  அதிகாரவர்க்க துணையுடன் இயங்கி வருகின்றன. மேலும், அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் ஒப்பந்தத்தை மீறி அதிக அளவில் கனிம வளங்களை வெட்டி கோடிக்கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன.

அண்டை மாநிலமான கேரளாவில் மணல், பாறைகள் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இயற்கை கனிம வளங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு நேர் மாறாக தமிழ்நாட்டில் மணல் குவாரிகள், கல் குவாரிகள் எவ்வித தடையும், வரைமுறையும் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன. பிடுங்கியது வரை லாபம் என்ற கணக்கில் குவாரி உரிமையாளர்கள் ஆட்சியாளர்களின் துணையுடன் இயற்கை வளங்களை வெட்டிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை வளங்களை பாதுகாக்கும் கேரள மாநிலத்திற்கு இருக்கும் அக்கறையில் சிறிதுகூட தமிழக அரசுக்கு இல்லை என்பது வேதனையளிக்கிறது.

ஆகவே, அறப்போர் இயக்கம் வைத்திருக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, நெல்லை மாவட்டம் உள்பட தமிழக முழுவதும் செயல்படும் கல்குவாரிகள் குறித்து வெளிப்படையான ஆய்வுகளை நடத்தி, சட்ட விரோதமாக செயல்படும்  கல்குவாரிகள் மீது விசாரணை நடத்தவேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கல் குவாரிகளுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

#பழைய பொருட்களுடன் மலர்ந்தஎன்நினைவுகள் | @ksrvoice

#பழைய பொருட்களுடன்
மலர்ந்தஎன்நினைவுகள் | @ksrvoice

#oldthings #oldthingsarecool #oldthingsfound, #cycle, #bicycle, #radio, #pen, #oldpennib, #pennib,  #pathalakarandi, #oldisgold #old 

 / @ksrvoice  
 
#KSRVOICE
#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்வாய்ஸ் 

https://youtu.be/3adzSnJhNuI?si=BTS7vA-1ToB2IuUr

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-2-2024.

Friday, February 23, 2024

#*எனது சுவடு பகுதி-54* #*சென்னை கடற்கரையில் காமராஜர் சிலை*

#*எனது சுவடு பகுதி-54*
———————————-
‘’*Our greatest experiences are our quietest moments*.’’

#*சென்னை கடற்கரையில் காமராஜர் சிலை*

#ksradhakrishnan, #indiragandhi, #Stalin, #politics, #kamarajar,  #mgr, #kamarajar #kalaignar #karunanidhi #kamarajar #kaamarajhistoryintamil #kamarajaruntoldstory #kamarajarmovie #nedumaran 

#KSRVOICE
#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்வாய்ஸ் 

https://youtu.be/nb0JQsQFrIM?si=tUq2VvAmWz1GB6XV

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
23-2-2024.

Every civilization carries….

#*Every civilization carries the seeds of its own destruction, and the same cycle shows in them all. The Republic is born, flourishes, decays into plutocracy, and is captured by the shoemaker whom the mercenaries and millionaires make into a king. The people invent their oppressors, and the oppressors serve the function for which they are invented*. 

-*MarkTwain*

 #americanliterature #literaturelover

#*ChandraShekhar, who served as the eighth Prime Minister of India*

#*ChandraShekhar, who served as the eighth Prime Minister of India*, took charge at a difficult moment in India's history. The VP Singh government had just fallen in the aftermath of the post-Mandal Commission agitations and, from November 1990 to June 1991, Chandra Shekhar headed a minority government of a breakaway faction of the Janata Dal with outside support from the Congress as a stop-gap arrangement to delay elections. Crucially, the Indian economy was in a shambles, with his government having to authorize the mortgaging of gold to avoid default of payment. Making matters worse, Rajiv Gandhi pulled the rug from under its feet, leading to its fall in just six months, before his assassination in May 1991 that further plunged the country into uncertainty in the exacting general election season.Chandra Shekhar's time in office was short but critical in laying the ground for the PV Narsimha Rao government and liberalization of the economy that would take place later that year. This book looks at the pivotal role that the strongman from Ballia, Uttar Pradesh, played in the transition of power at a decisive juncture and the lessons his tenure holds for the India of today.

#Theeighth_PrimeMinister_ChandraShekhar

#ksrpost
23-2-2024.


Thursday, February 22, 2024

#*இருத்தலுக்கு மாறானபழியான, பிழையான வினைகள் வேண்டாம்*.————————————
நீங்கள் தான் எதிர்காலத்தை வடிவமைக்கும் சந்ததியினர் எனஅரசியல்வாதிகளிட
மிருந்து, கல்வியாளர்களிடமிருநந்து, பெற்றோர்களிடமிருந்து மற்றும் பொதுமக்களிடமிருந்து நீங்கள் நிச்சயமாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள் என நான் கூறுகிறேன்.

ஆனால் உங்களை ஒரு புதிய தலைமுறை என அவர்கள் கூறும்போது, அவர்கள் உண்மையில் அந்த அர்த்தத்தில் கூறவில்லை, ஏனெனில் அவர்கள்  சமூகத்தின் பழைய வடிவமைப்போடு நீங்கள் ஒத்துப்போவதை உறுதிபடுத்துகிறார்கள். 

அவர்கள் நீங்கள் ஒரு புதிய,
 வித்தியாசமான மனிதராக இருப்பதை  அவர்கள் உண்மையில் விரும்பவில்லை. அவர்கள் நீங்கள் இயந்திரத்தனமாக இருப்பதை, பாரம்பரியத்துடன் பொருந்தி இருப்பதை, ஒத்துப்போவதை, நம்பிக்கை கொள்வதை, ( மனோரீதியான விஷயங்களில்) அதிகாரங்களை ஏற்பதை விரும்புகிறார்கள் .

அப்படி இருந்தும், நீங்கள் உங்களை பயத்திலிருந்து விடுவித்து இருப்பீர்கள் என்றால்,    தத்துவார்த்தமாக அல்ல, சீர்மையாக அல்ல (Not ideally), வெறுமனே வெளிப்புறமாக அல்ல மாறாக நிஜமாகவே, மனதுக்குள்ளாக, ஆழமாக, அப்போது நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதராக இருப்பீர்கள். 

அப்போது நீங்கள் வருங்கால தலைமுறையாக ஆவீர்கள்.

 வயதானவர்கள் எல்லாம் பயம் நிறைந்தவர்கள் - மரணபயம், வேலையை இழந்து விடுவோமோ என்ற பயம், மக்கள் தவறாக விமரிசிப்பார்களோ என்ற பயம்.

அவர்கள் முழுவதுமாகப் பயத்தின் பிடியில் இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் கடவுள்கள், அவர்களின் திருமறைகள், அவர்களின் பூஜைகள் எல்லாம் பயத்தின் களத்தினுள்
 களத்திற்கு உட்பட்டதாகும். 

ஆகவே மனம் விசித்திரமாகத் திரிக்கப்பட்டுள்ளது, திசைதிருப்பப் பட்டுள்ளது.

அப்படிப்பட்ட மனதால் நேராகச் சிந்திக்க இயலாது, தர்க்கரீதியாக, விவேகமாக, ஆரோக்கியமாக காரணகாரியத்தை அறியமுடியாது, ஏனெனில் அது பயத்தில் வேரூன்றி உள்ளது.

பழையத் தலைமுறையைக் கவனியுங்கள், அது அனைத்தையும் பற்றியும் எவ்வளவு பயம் கொண்டுள்ளது எனக் காண்பீர்கள் - மரணத்தைப்பற்றி, நோய் பற்றி, தற்போதைய சம்பிரதாயங்களுக்கு எதிராகப் போவதுபற்றி, வித்தியாசமாக இருப்பது பற்றி, புதியவராக இருப்பது பற்றி...

உயர்ந்து நிற்கும் மரங்கள் எல்லாம்,  என்றோ ஒரு நாள் நிலத்தில் விதையாய் விழுந்தவையே!  இருத்தலுக்கு மாறான பழியான -பிழையான வினைகள் வேண்டாம்.

#வாழ்வியல்
#ksrpost
22-2-2024.

Wednesday, February 21, 2024

*Nani Palkhivala-Fali Nariman*

*Nani Palkhivala-Fali Nariman*
••••
Nani Palkhivala who represented Indira Gandhi before the vacation bench of Krishna Iyer J in the Raj Narain Case withdrew from the brief when emergency was declared.   Fali Nariman similarly resigned as ASG when Indira proclaimed Emergency!  A generation of lawyers with spine!#ksrpost
21-2-2024.


வாழ்க்கை

#*வாழ்க்கை* 
———————-
உங்கள் கணிப்புகள், உங்கள் அச்சங்கள், உங்கள் அதிகாரங்கள், உங்கள் சுயநலங்கள் இவை அனைத்தும் புரிதலுக்கு தடையாக இருக்கிறது.

நீங்கள் என்னுடன் உடன்படுவதை நான் விரும்பவில்லை.

நீங்கள் என்னைப் பின்தொடர்வதை நான் விரும்பவில்லை.

நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

அறிவு அவசியம்; வாழ்க்கையில் அதற்கென்று வரையறுக்கப்பட்ட இடம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த வரம்பு நம் வாழ்நாள் முழுவதையும் விழுங்கி விடுகிறது.

எனவே, கற்றலுக்கான இடமில்லாமல் போகிறது.

நமது வாழ்வாதாரத்தை சம்பாதிப்பதில் நாம் மிகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம். அது இயந்திரத்தனமான சிந்தனையின் அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொள்கிறது. அதனால், நாம், நாளின் முடிவில் சோர்வடைந்து விடுகிறோம்; எனவே நமக்கு தூண்டுதல் தேவைப்படுகிறது.

பொழுதுபோக்கின் மூலம் இந்த சோர்விலிருந்து மீள்கிறோம் - அது மதமோ அல்லது வேறு எதுவோ.

இதுதான் மனிதர்களின் வாழ்க்கையாக உள்ளது.

மனிதர்கள் தங்கள் நேரத்தையும், ஆற்றல்களையும், வாழ்கையையும் முழுமையாக கோரும் ஒரு சமூகத்தை உருவாக்கியுள்ளனர். எனவே, கற்றுக்கொள்வதற்கு ஓய்வு இல்லை.

அதனால் வாழ்க்கை இயந்திரமயமாகிறது; கிட்டத்தட்ட அர்த்தமற்றதாக ஆகிறது.

ஓய்வு என்பது மனம் எதிலும் ஈடுபடாத ஒரு காலம். இது கவனிப்புக்கான காலம்.

ஆக்கிரமிக்கப்படாத மனம் மட்டுமே கவனிக்க முடியும்.

இந்த கவனிப்புதான் கற்றல் என்னும் இயக்கம்.

இது மனதை இயந்திரத்தனத்திலிருந்து விடுவிக்கிறது.

நம்மிடம் நிறைய முகமூடிகள் உள்ளன. நாம் அவற்றை எளிதாக அணிந்து, நம் சொந்த மனம் மற்றும் இதயத்தின் தனியுரிமையில் மட்டுமே அவற்றை கழற்றுகிறோம். 

மற்றும் நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் - ஒருவர் தீவிரமாக அல்லது விழிப்புடன் கவனித்தால் - பல்வேறு முகமூடிகள் உள்ளன. 

நண்பர்களுடன், நாம் ஒரு முகமூடியை அணிவோம்; குடும்பத்தின் நெருக்கத்தில் நமக்கு மற்றொரு முகமூடி உள்ளது. நாம் தனியாக இருக்கும்போது - ​​​​எப்போதாவது தனியாக இருந்தால் - முற்றிலும் மாறுபட்ட முகமூடியைப் அணிகிறோம். 

நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு முகமூடியும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. நம்மில் பெரும்பாலோருக்கு இவை பற்றித் தெரியாது; பல்வேறு தாக்கங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டு, முகமூடிகள் கட்டளையிடுவதைப் பொறுத்து செயல்படுகிறோம். 

எனவே நாம் வாழ்வில் இறுதி வரை முரண்பாடான வாழ்க்கை வாழ்கிறோம்.

•••
• பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் நடக்கும் ஓட்டப்பந்தயம்.வாழ்க்கை என்பது ஒட்டப்பந்தயமா?

 இன்பங்களும் துன்பங்களும் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது இன்பம் மட்டும் துன்பமா?

• சிலர் இங்கு பாசத்துக்காக ஏங்குகின்றனர்

• சிலர் பணத்திற்காக ஏங்குகின்றனர்.

• சிலர் பதவி, பொன், பொருள் ஆகியவதிற்காக ஏங்குகின்றனர்.

• சிலர் உடுத்த உடை இன்றி ஏங்குகின்றனர்.

• சிலர் உண்ண உணவின்றி ஏங்குகின்றனர்.

இப்படி ஏங்கி ஏங்கியே சிலரின் வாழ்கை முடிந்து விடுகின்றது. வாழ்கை என்பது ஏக்கமா?

• பணக்காரனோ பணம் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுகிறான்.

• ஏழையோ பணமே தம்மிடம் இல்லை என்று பணத்தை தேடி ஓடுகிறான்…

வாழ்கை என்பது பணமா?

• சிலர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று ஓடுகின்றனர். வாழ்க்கை என்பது சாதனை செய்வதா?

• சிலர் வாழ்க்கைக்கு நல்ல கல்வி, அறிவு வேண்டும்(அவசியம் ) என்கின்றனர். வாழ்க்கை என்பது கல்வியும் அறிவும் மட்டும் தான?

• சிலர் மீது நம்பிக்கை வைத்தே ஏமாந்து போகின்றோம் நம்மில் சிலர். வாழ்கை என்பது ஏமாற்றமா?

• சென்றவர்களை எண்ணியே மனமுடைந்து கண்ணீர் விடுகின்றோம். வாழ்க்கை என்பது கண்ணீர் வடிப்பது மட்டும்தானா?

• இங்கு நாம் சந்திக்கும் ஒவ்வருவரும் நமக்கு ஒரு பாடத்தினை காப்பிக்கின்றனர். வாழ்க்கை என்பது பாடம் கற்பதா?

• சிலர் கனவுகளை துரத்தி செல்ல இயலாமல் இருக்கின்றனர். வாழ்க்கை என்பது கனவு மட்டும் தான?

ஓடி ஆடி முடித்த பின்பு இங்கு ஓய்வெடுக்க மிஞ்சுவது கல்லறையே !!

• இருபதிலும் வாழ்க்கையை தொலைத்தவர் இங்கு உண்டு, அறுபதிலும் இங்கு வாழ்க்கையை பெற்றவரும் உண்டு…

கல்லறையிலும் இங்கு புதைந்த வாழ்க்கையை தேடுபவர் யாரோ !

#வாழ்க்கை  #lifecoaching

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
21-2-2024.


கடந்த 136 ஆண்டுக்கால காங்கிரஸ் வரலாற்றில் நான்கு தேர்தல்கள்தான் நடந்துள்ளன. தற்போது நடந்திருப்பது ஐந்தாவது தேர்தல்.” தமிழ்நாடு காங்கிரஸ்

https://www.vikatan.com/government-and-politics/the-history-of-congress-party-presidential-elections?fbclid=IwAR2YouOc_DhZsU-EBkizjct79_DYxYAkWsI1juNMdpeC2t0PIm7er0mtsM0_aem_AUu0w0tvJ2O2ULOyZ7Dk84L2i6Pt3TdLh0QedhAXgg7RdboiG43wULohm6veQ_mggWo

காங்கிரஸ் கட்சி இதுவரை கடந்து வந்த தலைவர் தேர்தல்கள்! - ஒரு ரவுண்ட்அப்-  தமிழ்நாடு காங்கிரஸ்


*மனிதநேய பண்பாளர் சைதை துரைசாமி*

*மனிதநேய பண்பாளர்  சைதை  துரைசாமி*
————————————
முன்னாள் சென்னை மாநகர மேயரும், கட்சி கடந்து பலரிடம் அன்பு பாராட்டுவருமான மனித நேய அறக்கட்டளை நிறுவனரான நண்பர் திரு. சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமியின் உடல் சிந்துவின் சட்லஜ் நதியில் இருந்து எட்டு  நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கிறது.

சென்னைக்கு வெற்றியில் உடல் கொண்டுவரப் பட்டபோது அவ்வளவு கூட்டம் திரண்டு அஞ்சலி செலுத்தியிருக்கிறது.

அப்போது நான் சென்னையில்
 இல்லாத நிலையில் அன்று என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

 கடுந்துயரத்தைச் சந்தித்த சைதை துரைசாமியைச் சில நாட்கள் கழித்துச் சந்திக்கலாம் என்றிருந்தேன்.

நேற்று 20-2-2024  நண்பர்கள் குமார்,கல்கி ப்ரியன், மணா, அனீஸ்  என சிலருடன் தி.நகரில் உள்ள வீட்டில் சந்தித்தேன்.

மகன் வெற்றியைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்த விதம் அவரது அளப்பரிய பாசத்தைக் காட்டியது. உருக்கமாகவும் இருந்தது.

பேச்சின் நிறைவில் எம்.ஜி.ஆர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கை சில காலம் கடந்து நிறைவேறியதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

 மனித நேய அறக்கட்டளை மூலம் படித்துத் தற்போது நாடு முழுக்கப் பரவியிருக்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் தந்தையைப் போலத் தன்னைப் பாவித்து ஆறுதல் படுத்தியதைப் பகிர்ந்துவிட்டு " அவர்கள் எல்லாம் எனக்கு மகன்கள் தானே. இன்னும் மகனின் நினைவாகப் பலவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.

பெரும் இழப்புக்குப் பிறகும் அவரிடம் வெளிப்பட்ட நம்பிக்கை முக்கியமானதாகத் தெரிந்தது. 20 நிமிடங்கள் அவர் பேசியது நமக்கே தைரியம் தந்தது

எந்தப் பெற்றோருக்கும் இம்மாதிரியான துக்கம் நிகழ்ந்திருக்கக் 
கூடாது.இதை போலவே சென்னை பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகனை துன்டு துன்டாக வெட்டிய அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த சம்பங்கள் எப்படி பெற்றோரை பாதிக்கும். ஊழ் இப்படி இருக்கு.

பண்பாளர்  சைதை  துரைசாமிக்கு இப்படி ரணமா? இயற்கையின் நீதி எங்கே? அறம் எங்கே?

காலம் நண்பரை அவரின் நல்ல மனது ஆற்றுப்படுத்தட்டும்!

#சைதை_சா_துரைசாமி

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-2-2024.


#*Fali S.Nariman*

#*Fali S.Nariman* 
••••
Eminent jurist and a veteran senior advocate of the Supreme Court, Fali S Nariman, passed away at 95 in Delhi on Wednesday. As a distinguished constitutional lawyer, Fali S Nariman has contributed to several landmark cases, An important chapter in Indian justice system ended. He is involved in many important cases. He argued once my PIL regarding national rivers linking issues and on behalf of KA on Cauvery issue, when KA govt refused to follow SC order, he refused to further argue for KA. My condolences….

 #RIPFaliSNariman

#ksrpost
21-2-2024.


Tuesday, February 20, 2024

*மாதர் குல நாயகி* *பார்வதி கிருஷ்ணன்* *ParvathiKrishnan*

*மாதர் குல நாயகி* *பார்வதி கிருஷ்ணன்* 
*ParvathiKrishnan*
————————————
குமாரமங்கலம் ஜமீன்தாரrன டாக்டர் பி. சுப்பராயன் சென்னை ராஜ்யப் பிரதமராக இருந்தவர்.நேரு மந்திரிசபையில் -  ராஜாஜி மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர். பம்பாயில் கவர்னராகவும் பணியாற்றி உள்ளார். Parvathi Krishnan (15 March 1919 – 20 February 2014) was an Indian politician from the Communist Party of India.She was a three time former Member of Parliament representing Coimbatore Lok Sabha constituency and Rajya Sabha member. She was the daughter of former Madras Presidency Premier P. Subbarayan.

 காஷ்மீர் சரஸ்வத் பிராமண குடும்பத்தைச் சார்ந்த ரங்கராவ் ஏழைகளுக்காக வாதாடிய வழக்கறிஞர். இவரது இரண்டாவது மகள் ராதாபாய் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். வாய்ப்புகள் ஏற்படும் போதெல்லாம் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதோடு மேடைகளில் பெண்களின் முன்னேற்றம் குறித்து பல சொற்பொழிவுகள் செய்தவர். ராதா பாயின் கட்டுரைகளைப் படித்தும் சொற்பொழிவுகளைக் கேட்டும் அவரோடு அறிமுகம் செய்துகொண்டு காதல் வயப்பட்டார் பி சுப்பராயன். இவர்கள் இருவருக்கும் காதல் கைகூடி 1912 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பி.சுப்பராயன், ராதாபாய் இணையரின் கடைசிப் பெண் குழந்தைதான் பார்வதி.

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பரமசிவம் குமாரமங்கலம்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தலைவராக விளங்கிய கோபால் குமாரமங்கலம், இந்திராகாந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம் ஆகியோரின் அன்புத் தங்கை தான் பார்வதி.

 1938இல் இங்கிலாந்தில்பார்வதி படித்துக்கொண்டிருந்த  காலம் தொடங்கி பெருமையோ, ஆடம்பரமோ இன்றி தன்னடக்கம் மிக்க ஒரு மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கி வந்த அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது அங்கே படித்துக் கொண்டிருந்த என் கே கிருஷ்ணன் என்பவரை 1938 முதல் முதலாக சந்தித்தார்.1939 பாரிஸில் நடந்த பாசிச எதிர்ப்பு மாநாட்டின்போது இருவரும் காதலர்கள் ஆகினர். இந்தியா திரும்பிய பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். 1942 டிசம்பர் 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அந்தத்  திருமணம் எவ்வித ஆடம்பரமுமின்றி  ஏ.எஸ்.ஆர். சாரி, ஏ.எஸ். வைத்யா, பார்வதியின் அண்ணன் மோகன் குமாரமங்கலம் சாட்சிகளுடன் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.திருமணப் பதிவுக்கட்டணம் செலுத்த போதுமான பணமின்றி, பற்றாக்குறை பணத்தை மோகன் குமாரமங்கலமிருந்து பெற்றுச் செலுத்தியதாக  என். கே. கிருஷ்ணன் கூறுகிறார் தனது சுயசரிதையான நம்பிக்கை ஒளி என்ற நூலில். திருமண விருந்திற்கு ஐஸ்கிரீம், டீ வழங்கப்பட்டன. 5 பேர்கள் மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டனர் திருமணத்திற்கு மறுநாள் இருவரும் கட்சி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் புரோகிதராக டாக்டர் கங்காதர் அதிகாரி இருந்தார். ராஜ் பவனில் பொதுஅறையில் கூட்டம் நடந்தபோது மணமக்களின் உறுதியேற்பிற்குப் பிறகு வந்திருந்த அனைவருக்கும் டீயும் பிஸ்கட்டும் வழங்கப்பட்டன. வெகு எளிமையான  திருமணம் அல்லவா இது. பொதுச் செயலாளராக இருந்த பி.சி. ஜோஷியின் முன் முயற்சியால் அமைக்கப்பட்ட மத்திய பாடல் குழு மற்றும் கதைப்பாடல் குழு ஆகியவற்றின் நிர்வாகியாக பார்வதி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இலண்டனில் தன்னோடு  அறிமுகமாகியிருந்த பால்ராஜ் சஹானி, தமயந்தி ஆகியோரோடு நன்கு பழகி  கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குக் கொண்டு வந்தார்.

1952 ஜூனில்  நீலகிரி நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி வேட்பாளராக நின்று வெற்றியை நழுவ விட்டார்.1954 ஏப்ரலில் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை நாடாளுமன்றத் தொகுதியில் கட்சி வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். 1974 இல் நடந்த கோவை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1977ல்  கோவை நாடளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன்பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்டக் குழுவிலும், தமிழ்மாநிலக் குழுவிலும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல் புரிந்தார். கட்சிப்பணி ஆற்றுவதில் இறுதிவரை சளைக்காமல் வாழ்ந்த மாதர் குலத்திலகம் தோழர் பார்வதி கிருஷ்ணனின் நினைவு நாள் இன்று.(20.02.2014 - 20.02.202l) 1970களில் நான் இஸ்கஸ்  அமைப்பில் பொறுப்பில் இருந்த  போது சிபிஐ தலைவர்கள் கோவில்பட்டி சோ. அழகர்சாமி எம்எல்ஏ, மூத்த வழக்கறிஞர் என். டி. வானமாமலை மூலம்  அறிமுகம், பழக்கம் எனக்கு ஏற்பட்டது.

#பார்வதிகிருஷ்ணன் 
#ParvathiKrishnan

#ksrpost
20-2-2024.


இன்றைய அரசியல்

#இன்றையஅரசியல் 
————————————-
கடந்த இரண்டு மூன்று நாட்களாக அரசியல் புள்ளிகள் என தங்களை அழைத்து வா‌ய் ஒ‌லி கொ‌ள்ளு‌ம் பல தரப்பினர் என்னைச் சந்திக்க வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? என்று கேட்கிறார்கள். அடுத்த கேள்வி எவ்வளவு பணம் இருக்கிறது? இப்போது நான் எந்த அரசியல் கட்சிலும் இல்லை.
இந்தக் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ஆகப் பணம் இருந்தால் மட்டும் தான் தேர்தலைச் சந்திக்க முடியும். கொள்கை கோட்பாடு  என ஒரு  ஆட்சிமன்றத்திற்கு அதன் வழியே மக்களுக்கான நலன்களைநிறைவேற்றுவதற்கு அரசியல் ஆர்வம் உள்ள ஒரு மனிதரை தன் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களை பணத்தை வைத்து மட்டும் தான் அரசியல் களம் முடிவு செய்ய முடியும் என்றால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

அப்படி பணத்தால் தான் தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வர முடியும் என்றால் தனிப்பட்ட முறையில் ஒரு சுதந்திரச்சிந்தனையாளராக அரசியல் பார்வையாளராக விமர்சகராக அரசியலில் தவறு காணும் இடத்தில்  எதையும் தட்டிக் கேட்கும் உரிமையுடன் இருப்பதே சாலச் சிறந்தது.

கொள்கைப் பிடிப்போடு மக்கள் நலம் சார்ந்த கோட்பாட்டு வரைவுகள் அதற்கான அறிவுத்திறன் தொலைநோக்குப் பார்வைகள் விஞ்ஞானமும் அரசும் ஆகிய எதிர்கால முறைகள் அதற்கான அரசியல் விருப்ப உறுதிகள் சனநாயக மாண்புகள்
எதுவும் தேவையில்லாமல் எல்லாம்  பணத்திற்கு கீழ் வந்து விட்ட பிறகுஎதைப் பேசுவதிலும் பலன் இல்லை. காசு-மது-மாது-வாரிசு என்பதை கொண்டு வியாபார அரசியலும் நள்ளிரவு 5 ஸ்டார் விடுதி விருந்துகள் என ……
அதன் முடிவுகள் என்றால் அது அரசியலும் இல்லை பொதுவாழ்வு என்பதும் அல்ல

 நேற்று வரை தமிழக நலன் என சொன்னவர் இன்று தன் மகன் வாரிசு அரசியல் நலனில் கடும் பாடுகளை எடுக்கிறார் . என்ன முரண்பாடு⁉️

இன்று  பணம் பணத்தைத் தான் சம்பாதிக்கும். குணம் எனும் குன்றேறி நிற்பவருக்கு இங்குள்ள தளத்தில் பணி எதைவும் இல்லை.

நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு முகமூடியும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. நம்மில் பெரும்பாலோருக்கு இவை பற்றித் தெரியாது; பல்வேறு தாக்கங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டு, முகமூடிகள் கட்டளையிடுவதைப் பொறுத்து செயல்படுகிறோம். 

எனவே நாம் இறக்கும் வரை முரண்பாடான வாழ்க்கை வாழ்கிறோம்.

#இன்றையஅரசியல் 
#தமிழகஅரசியல் 
#todayspoltics 

(Pic- taken 1976 during my student politics days @ JNU -New Delhi )

#ksrpost
20-2-2024.


Monday, February 19, 2024

#தமிழ்தாத்தா உவேசா...

உ.வே.சா. பற்றி எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்...

+++

இவர் தாம் அறிந்த இலக்கிய விஷயங்களை அச்சில் வெளியிடும்வரை அடக்கமாக வைப்பாராயினர். தாம் செய்துவரும் தொண்டுகளிலும் அடக்கத்தையே கைக்கொண்டனர். இவர் இல்லத்திலுள்ள சுவடி நிலையத்தைக் கண்டுகளிக்கும் பேறுகூடக் கவி ரவீந்திரநாதர் ஒரு சிலரே பெற்றுள்ளனர். பிறர் கண்களில்படும்படியாக நூல் ஆராய்ச்சி செய்வதை அறவே விட்டு விட்டனர். அடக்கமாக, பிறரால் காண முடியாதபடி, தனியாக அமைந்த ஓர் அறையில் தாமும் தமது சிஷ்யர்களுமிருந்து நூற் பரிசோதனை செய்து வரலாயினர். ஆகவே பெரும்பாலும் இன்ன காலத்தில் இன்ன நூல் வெளிவரும் என்பது இவர் சிஷ்யர்களுக்கன்றி ஏனையோர்களுக்குத் தெரியமாட்டாது. சிஷ்யர்களும் இந்த அடக்கத்தையே கையாண்டு வந்தனர். ஏட்டுச் சுவடிகளேயன்றி இவர்கள் படித்து வந்த அச்சுப் புத்தகங்களைக்கூட இரவல் வாங்க முடியாது…

இங்கனமே, பிரதிகள் தேடிப் பண்டை நூல்களைப் பதிப்பிடுவதில் முயன்றுவரும் அறிஞர்களுக்குப் பிரதிகளை எளிதில் கிடைப்பதா ? இல்லை. ஐயருக்கு இந்த நல்லூழும் விதிக்கப்படவில்லை. இதனால் ஒருவருக்கும் இவர் தம்மிடமுள்ள பிரதிகளைக் கொடுத்ததில்லை என்பது என் கருத்தல்ல. எனக்குச் சில பிரதிகள் உதவியிருக்கிறார்கள் என்பதை நன்றியுடன் பாராட்டுகிறேன். நானும் இவர்களுக்குப் பிரதிகள் உதவியுள்ளேன். கேட்போர் ததியையும் நோக்கத்தின் தூய்மையையும் மாத்திரம் கருதி இவர் பிரதிகள் உதவுவதில்லை. விலக்க முடியாத நிர்பந்தம் ஏற்பட்டால்தான் இவர் உதவுவர். அவ்வாறு தரும் பிரதிகளும் பெரும்பாலும் பயனற்றனவாகவே இருக்கும். தாம் பல ஆண்டுகளாக அரிதின் தேடி வைத்த பொருளை ஒருவர் கேட்டவுடனே கொடுத்துவிட எளிதில் மனம் வருமா ? ஆனால், தாம் உதவாதது மாத்திரமே யன்றி, பிற பேரறிஞர்களும் நூலைப் பதிப்பிடுவோர்க்கு உதவுதல் கூடாது என்று இவர் கடிந்துரைத்ததை நான் நன்கு அறிவேன். கம்பர்விலாசம் இராஜகோபாலையங்கார் அகநானூற்றைப் பதிப்பிட எடுத்துக்கொண்ட பொழுது, அவருக்கு ஸேது ஸம்ஸ்தான மகாவித்வான் ரா. ராகவையங்கார் பிரதிகள் கொடுத்தும் பிறவாறும் உதவக்கூடாது என்று இவர் தடை செய்தனர். அகநானூற்றை ஐயர் தாமே பதிப்பிடக் கருதியிருந்தனர். ஒருவேளை, இக்கருத்து இவரைக் கடுமையுள்ளத்தராகச் செய்திருக்கலாம். எனினும் இவ்வகையான மனப்பான்மைகள் ஐயருக்கு இருந்தமை தமிழ் மக்களது துர்பாக்கியமே.

+++

நம்மிடையே இருக்கும் திறன் மிக்க பார்ப்பனரல்லாத இலக்கிய விமர்சகர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் நூறாண்டு கடந்த பின்னரும், தேசியவாதிகளின் சத்சங்கத்தில் இணைந்து, உ.வே.சா. புகழ்பாடும் சங்கத்தில் சேர்ந்து, பன்னிசைத்து கொண்டிருப்பதால்,  விமர்சனப் பார்வையுடைய எவரும், எஸ். வையாபுரிப் பிள்ளை என்ன கூறியுள்ளார் என்பதை அறிந்துகொள்வது நல்லது. அத்தோடு நிற்காமல் முன்சென்று சிந்திப்பதற்கும் நிறைய விசயங்கள் உள்ளன.
••••••


தமிழ் தாத்தா தான் நமக்கு.
சும்மா மரபு வழி வந்த தாத்தா கிடையாது.
நடையாக நடந்திருக்கிறார் கிராமம் கிராமமாக..
அங்கே ஒரு வீட்டில் யாப்பருங்கல காரிகை இருக்கிறதாம்.
இங்கே இன்னொரு புறத்தில் சீவக சிந்தாமணியாம்..
வேறொரு புறத்தில் வீரசோழியம் ஓலை சுவடிகளாம்...
நூறு இடங்களில் அலைந்தால் பதிற்று பத்தில் ஒரு பத்து....
இப்படி சேகரித்தார் ஏடுகளை..

பண்டைய தமிழர்கள் யாத்து வைத்த அரும் பெரும் நூல்களை....
கரையானுக்கு தீனியாக கொடுத்தவர் சில ஆயிரம் பேர்..
ஓடுகிற ஆற்றில் விட்டு புனல் வதம் செய்தவர்கள் பல ஆயிரவர்...
எவருக்கும் கொடுக்க மாட்டேன், போ என்று பரணில் போட்டு வைத்த பாவிகள் வேறு இருந்தார்கள்.

இவ்வளவு இடையூறுகளோடு போராடி ஏடுகள் தேடி...
கிடைத்த ஏடுகளில் பிழை திருத்தி...
தகுதியற்றவைகளை புறந்தள்ளி...
இப்படியாக அரும் பாடுகள் ஆயிரம் பட்டு தான் தமிழ் தாத்தா ஆனார்  உ. வே. சாமிநாதைய்யர்...

இருந் தமிழே! உன்னால் இருந்தேன்.
இமையோர் விருந்தமிழ்தம் தந்தாலும் வேண்டேன்....
இது அவர் திரட்டிய குப்பைகளில் கிடைத்த ஒரு கோமேதகம்...

சேகரித்து
உண்மை தன்மை அறிந்து
பிழைகள் திருத்தி
பல அறிஞர்களை நாடி விளங்காத பகுதிகளில் விளக்கம் பெற்று..
ஒழுங்கு செய்து..
சொந்த காசை போட்டு பதிப்பித்து..
அம்மவோ!

இன்று நாம் படிக்கும் சங்க தமிழ் முதல் கம்ப ராமாயணம் வரை..
அவர் திரட்டி தந்த செல்வம்..
தமிழர்கள் நாம் ஒன்றும் அவருக்கு உரிய அந்த சிறப்பை கொடுத்தோமா? எனில்
இல்லை என்பதே உண்மை...

தமிழ் தாத்தா,
அவரது ஆசிரியர் #மகாவித்வான்மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
கல்லூரியில் ஐயர் அவர்களும் அவரின் மாணாக்கர்களும்..
அப்புறம் திரு. #மேலகரம்_ஸ்ரீசுப்பிரமணியதேசிகர்...

Sunday, February 18, 2024

Red river

*Red River*

Wonderful to have @sombatabyal in the store last week as he signed copies of his new novel #RedRiver, that tells the story of three families torn apart by history and violence in Assam. 

About the novel -

A FAST-PACED NOVEL ABOUT THREE BOYS WHO GROW UP IN THE EARLY YEARS OF MILITANCY IN ASSAM AND TAKE DIFFERENT PATHS INTO ADULTHOOD AND LOVE.

A sprawling novel set in the north-east of India, this is a lyrical exploration of male friendships and love—a man's love for a woman and a more militant love for community and nation. The action moves from Guwahati to Dhaka, Bhutan and London, surging and quietening as we encounter characters and situations so close to the bone that it's hard to step away till the last word has been read.

@context_books 
@sombatabyal 
@westland_books

#ksrpost
18-2-2024.


#*நாவலர் இரா.நெடுஞ்செழியன்* #*விருதுநகர் செந்தில்குமார்நாடார் கல்லூரி* … #*காசி பெனாரஸ் இந்துசர்வகலாசாலை*

#*நாவலர் இரா.நெடுஞ்செழியன்* 
#*விருதுநகர் செந்தில்குமார்நாடார்
கல்லூரி* …
#*காசி பெனாரஸ் இந்துசர்வகலாசாலை*
————————————
ஒரு முறை, 1990 இல் விருதுநகரில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு  பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்த ஜெயித்த அண்ணன் பெ.சீனிவாசனும் நானும் அருப்புக்கோட்டையில் ஒரு திருமணத்திற்கு செல்லும் போது வழியில் விருதுநகர் செந்தில் குமார் நாடார் கல்லூரியில் கல்லூரி முதல்வரைச் சந்திப்பதாக இருந்தது.

நாங்கள் நேரில் சென்ற போது வரவேற்ற கல்லூரி முதல்வர் ஒரு சுவாரசியமான சம்பவத்தை சொன்னார். நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் தனது பட்டயப் படிப்பிற்கு பின்பு கல்லூரி ஆசிரியர் வேலைக்கு முதன்முதலாக எங்கள் கல்லூரித் தமிழ் துறைக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தார் என்று சொல்ல எங்களது பேச்சு தொடர்ந்தது.

ஏனோ செந்தில்குமார் நாடார் கல்லூரியில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை . அதற்குப் பிறகு மதுரை தியாகராசர் கல்லூரிக்கும் முறையாக விண்ணப்பம் அனுப்பி இருந்தார். அங்கும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் காலம் அவரைக் கோபுரத்தில் பின்னாட்களில் தூக்கி  அமர வைத்தது.

அதற்குப் பிறகு பல கல்லூரிகள் அவரை வேலைக்கு வற்புறுத்தி அழைத்த போதும் மறுத்து ஒதுக்கி வைத்தார். வடக்கே காசி,பெனாரஸ் இந்து சர்வகலா சாலையில் கூட தமிழ் துறையில் பணிபுரிய அவருக்கு அழைப்பு வந்தது அதற்கு நாவலர் இணங்கவில்லை.

மதுரை கருமுத்து தியாகராச செட்டியார் தனது தமிழ்நாடு இதழில்  ஆசிரியராக பணிபுரிய அழைத்தபோதும் அதை நாவலர் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்.

அண்ணாவின் அழைப்பின் பேரில் கட்சிப் பணிகளில் அவர் ஈடுபட்டு சிறை சென்று கொண்டிருந்த அவரை அவரது துணைவியார் தயவுசெய்து சிறை செல்லாத மாதிரியான ஏதேனும் ஒரு தொழிலை மேற்கொள்ளுங்கள் என்று வற்புறுத்திய போதும் இணங்கவில்லை. பல்துறையைச் சேர்ந்தவர்கள் அவரை அவரின் தகுதி கருதி பல்வேறு வகையான வேலைகளுக்கு நியமனம் செய்து அழைத்தபோதும் தன்குறித்த எந்த வகையான முடிவாக இருந்தாலும் அது அண்ணாவின்  ஒப்புதலின் பேரில்தான் நடக்கும் என்று முடிவாகச் சொல்லி விட்டார்.

இதுகுறித்து அண்ணாவிடம் அணுகியபோது அண்ணா “தம்பி நாவலர் நெடுஞ்செழியன் என்னிடத்தில் இருப்பது ஜெயிலிலும்  மிஞ்சிய நேரத்தில் ரயிலிலும் இருப்பதற்காகவே ஒழிய தொட்டிலை ஆட்டுவதற்கும் வட்டிலில் போடுவதை சாப்பிடுவதற்குமாக அல்ல”
என்று சொல்லி எல்லோரையும் வியக்க வைத்ததோடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

அத்தகையத் தலைவர்கள் மக்கள் பணியாற்றியதை  அதற்காகத் தங்கள் சொந்த நலன்களைக் கருதாத பாங்கினை  நினைத்துப் பார்க்கிறேன்.

#நாவலர்_இராநெடுஞ்செழியன் 
#விருதுநகர்_செந்தில்குமார்நாடார்_கல்லூரி …
#காசி_பெனாரஸ்_இந்துசர்வகலாசாலை

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்.
18-2-2024.


Saturday, February 17, 2024

*இந்தியில் பெயர் வைப்பது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் நடந்திருக்கிறது. 18 ஆண்டுகள் மத்திய மந்திரியாக திமுகவினர் இருந்தனர் . அப்போது இதற்கு வாய் திறக்கவில்ல.

*இந்தியில் பெயர் வைப்பது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் நடந்திருக்கிறது.  
18 ஆண்டுகள் மத்திய மந்திரியாக திமுகவினர் இருந்தனர் . அப்போது இதற்கு வாய் திறக்கவில்ல.இப்படி நிலமை இருக்கு கனிமொழி  பேசுகிறார்* தனது மதுவிலக்கு பேச்சியை போல⁉️
*உ-ம் இந்திரா ஆவாஸ் யோஜனா. இது மாற வேண்டுமானால் மத்திய அரசின் அலுவல் மொழி மாற வேண்டும் அதைச் செய்ய திமுக முயன்றதுண்டா*? குறைந்த பட்சம் இந்திக் கூட்டணியின் செயல் திட்டங்களில் அதை இடம் பெறச் செய்யும் திராணியாவது  இவர்களுக்கு உண்டா? நிதீஷ் பேச்சை மறுக்காமல் வாயை மூடிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.

கனிமொழியின் தமிழ் மொழி அபத்தங்களும் இந்திய தேசிய நாடாளுமன்றமும்.

மத்திய அரசின் திட்டங்கள் எங்களுக்குப் புரியாத மொழியில் இருக்கிறது என்று தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்கள் மொழிதான்  மத்திய மாநில உறவுகளில் இணக்கம் காண முடியாப் பிரச்சினையாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

நான் கேட்கிறேன் சுதந்திரத்திற்கு பிறகு 1967 ஆட்சிக்கு வந்த இந்த திமுக குடும்பத்தில் கடந்த 50 வருடங்களாக மத்திய மாநில அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்று வந்த நிலையில் அதாவது மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று உரிமைகளைக் குறிப்பாக  கேட்டபோது இந்த மொழிப் பிரச்சனைகள் இடைஞ்சலாக இல்லையா கனிமொழி அவர்களே? இல்லை நான் கேட்கிறேன் மாறன் குடும்பம் உள்ளிட்ட திமுகவிற்கு ஹிந்தி தெரியாதா? உங்கள் குடும்பங்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை கொண்டகின்றனர்.

டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே மொழிதான் பிரச்சனையா?
உங்களது பேச்சு அபத்தமாக இருக்கிறது!

இல்லை பிஜேபி தவிர டெல்லியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே பிரச்சினையைத் தான் தொடர்ந்து கிளப்புவீர்களா?

எத்தனை முறை டெல்லிக்கு திமுக காவடி தூக்கி இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதா?

அது மாநில உரிமைகளுக்காகத் தான் என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் அதை எந்த மொழியில் கேட்டுப் பெற்றீர்கள்?

ஆங்கிலத்திலா? தமிழிலா?

இருமொழிக் கொள்கையா? மும்மொழிக்கொள்கையா?

பிரிட்டிஷார் ஆண்டபோது இரு மொழி கொள்கையை ஏற்றுக்கொள்வீர்கள்.

இந்திய தேசியம்  ஒருமைப்பாடு கண்டபோது மட்டும் ஹிந்தியை மறுப்பீர்கள்.

தமிழ்நாட்டில் நீங்கள் தமிழ் பேசுவது மாதிரி வடநாட்டில் பல மாநிலங்களில் மக்கள் இந்தியைப் பேசுகிறார்கள்.

ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தில் பல்வேறு மொழிகளைப் பேசி நீங்கள் உங்கள் கோரிக்கைகளை குறிப்பாக தமிழில் பேசி முன் வைக்கவில்லையா?

அதற்கான மொழிபெயர்ப்புக் கருவிகள் அங்கு இல்லையா?
பிறகு எப்படி நீங்கள் உங்கள் உரிமைகளைத்தமிழ்நாட்டிற்கு கேட்டு எந்த மொழியில் பெறுகிறீர்கள்.

நான் கேட்பது நீங்கள் இந்தியில் பேசவில்லை என்பதால் அங்கு உங்களது உரிமைகள் மறுக்கப்படுகிறதா? இல்லை அதற்கான கோரிக்கைகளை ஒருவேளை நீங்கள் ஆங்கிலத்திலோ தமிழிலோ பேசினாலும் பரிசீலிக்கப்படுகிறதா இல்லை நீங்கள் பேசுவது புரியவில்லை என்று நாடாளுமன்ற அவையில் ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்ட எம்பிக்கள் மறுக்கிறார்களா?

மொழி எதுவாயினும் கோரிக்கைகள் நலன்கள் திட்டங்கள் யாவும் கடந்த 75 ஆண்டுகளாக பல மாநில மொழிகள் வழியே மத்திய அரசு பல யோஜனா திட்டங்களை இந்தியா முழுக்க நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறது. அது தமிழ்நாட்டை விதிவிலக்காகக் கருத வில்லை. உங்கள் மனச்சான்றைத் தொட்டு சொல்லுங்கள் வடநாட்டில் திமுகவிற்கு செல்வாக்கை உண்டு பண்ணுவதில் உங்களது பங்கு என்று எதுவும் இல்லையா?

திமுகவின் குடும்ப உறுப்பினர்கள் இந்தியா முழுக்க எங்கெங்கெல்லாம் அல்லது இந்தியாவிற்கு வெளியே கூட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது நீங்கள் அறியாததா?

எடுத்தேன் கவிழ்தேன்  என்கிற மாதிரி எதையாவது பேசி குட்டையைக் குழப்ப வேண்டாம்.
கலைஞரின் மகள் என்று நிலையில் லிப்டில் உயரலாம். நாங்கள பாடிகற்ள் ஏறி வரவே ஆயிரம் தடைகள்…
உங்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி எம்பி வேட்பு மனு மறுமுறையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஜாலியாக இருங்கள்.

தனிமையில் அமர்ந்து நீங்கள் என்ன பேசி இருக்கிறீர்கள் என்பதை யோசியுங்கள் உங்களுக்கே விளங்கும்!

#ksrpost
17-2-2024.
#மேகேதாட் #Mekedatu #காவேரி

#*முதல்வர் ஸ்டாலின் அவர்களே*,

மேகேதாட் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடகா அரசு …  என செய்தி……
தடுத்து நிறுத்துங்கள்…
காங்கிரஸ் உங்கள் தோழமை..
சித்தராமையா சென்னை வந்து அறிவாலயத்தில் தங்களை சந்தித்த போதும், அவர் கர்நாடக முதல்வர் பதவி ஏற்ற போதும் ஆரத் தழுவி பாசம் காட்டி தாங்களுக்கு மேகேதாட்அணை சிக்கலை தமிழக நலன் கருதி முதல்வர் என்ற நிலையில் எளிதில் தீர்க்கலாம்.. 


"உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடகா அரசின் செயல்பாடுகளை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறதா? என  கேள்வி உங்களிடம் வினா வரும்.

தங்கள் அன்பு சகோதரர் ராகுல் காந்தியிடம்
திராவிட பெருவெளியில் இந்த சிக்கலை தமிழகத்தின் நலன் கருதி தீர்க்க வேண்டிய கடமை உங்கள் தரப்பில் உள்ளது. நீங்கள தமிழகத்தின் விடியல் -திராவிட மாடல் அரசின் முதலமைச்சர்.

#மேகேதாட் #Mekedatu #காவேரி #Cauvery
#ksrpost
16-2-2024

Friday, February 16, 2024

#*திமுகநடிக்கும் தமிழக உரிமைகள் மீட்க போராட்டம்*

#*திமுகநடிக்கும்
தமிழக உரிமைகள் மீட்க போராட்டம்* 
————————————
மாநில அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பதில்லை
என்று தமிழக அரசு குற்றம் சாட்டி மாநில உரிமைகள்  மீட்க மாவட்ட தலைநகரில் போராட்டம் என திமுக அறிவிப்பு… 

ஜனதா ஆட்சியில் 1977-79 வரை பின், பல்வேறு வகையான கூட்டணிகளில் 18 ஆண்டுகள் மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்று வந்த திமுக அப்போது எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தது.அதிக மத்திய அமைச்சர்களை கூட்டணியிடம் கேட்டுப் பெற்ற கட்சி திமுக.சேது சமுத்திர திட்டம் ஆகட்டும் சேலை இரும்பாலை  கட்சத் தீவை கைவிட்டது பல்வேறு நதிநீர்த் தாவாக்கள் எல்லாவற்றையும் தாங்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கும்போதே நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இப்போது வந்து உரிமைகள் கேட்டு முறையிடுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு சமமாகும்.

இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாநிலம் என்றும்  அது திராவிட மாடலில் விளைந்தது என்றும்  உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்யும் திமுக அரசு அதற்கான அனைத்து ஊடகங்களையும் தங்களது அபரிமித செல்வாக்கால் கையில் வைத்திருக்கிறது. உண்மையில் சுதந்திரம் பெற்ற காலத்திற்கு  முன்பாகவும் பின் பாகுவும் தமிழகத்தை ஆளுமை செய்த ஒவ்வொரு முதல்வர்கள்மற்றும் சிந்தனையாளர்கள் பொருளாதார விற்பன்னர்கள் வணிகர்கள் தொழிலாளர்கள் வங்கிகள் உற்பத்திகள் விளைச்சல்கள் மக்களின் உழைப்பு போன்ற யாவற்றின் ஊடான முயற்சியுமே தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தது என்பதை இவர்கள் வசதியாக மறக்கடிக்க பார்க்கிறார்கள்.

தமிழக வளர்ச்சியையும் உரிமைகளையும் இந்திய ஒருமைப் பாட்டின் கீழ் பெற்ற காலங்களை திமுக மறந்து போயிருக்கலாம். அவர்கள் பிரச்சாரத்தால் ஆட்சியை மட்டுமே பல கவர்ச்சிகரமான அம்சங்களை வைத்துப் பிடித்தார்கள். ஆனால் வளர்ச்சி என்பது மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பால் தான் கிடைத்தது என்பதை மறந்து விடக்கூடாது. எதோ தமிழ்நாடு குறைகளே இல்லாத மாநிலம் போல் இவர்கள் கடும் பிரச்சாரம் செய்கிறார்கள். மதுவினாலும் கடன்களினாலும் நாளும் தமிழக குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருப்ப
தைப் பார்க்க தவறுகிறார்கள்.
வேலைவாய்ப்பற்ற புதிய இளம் தலைமுறைகளின் நடத்தைகள் பற்றிய அக்கறையும் இவர்களுக்கு இல்லை.
அரசுடன் இணைந்த பொது வேலை திட்டம் என்பது பரவலாக்கப்படவில்லை. அது அரச விசுவாசிகளின் அந்தப் புரம் ஆகிவிட்டது.

இனக்கலாச்சார வேற்றுமைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு அதன் முரண்பாட்டில் தங்களது குடும்ப அரசியலை வளர்த்துக் கொண்ட இவர்கள் தமிழக சுற்றி உள்ள அண்டை மாநிலங்களுக்கு (கேரளா கர்நாடக ஆந்திரா)காவேரி போன்ற இந்த நீண்ட கால உரிமைகளைப் பரிந்துரைப்பார்களா?இல்லை இந்த ஐந்து ஆண்டு காலத்தில் இருக்கும் பிரச்சனைகளையும் திமுகவின் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்களா?

சமூக நீதி பேசும் குடும்ப பரம்பரை கொத்தடிமைகள்...

மக்களிடம் செல் மக்களோடு வாழ் - என இவர்கள் சொல்வது வேடிக்கை.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-2-2024.

#*விஜய்அரசியல்* #*Actor Vijay poltics*

#*விஜய்அரசியல்* #*Actor Vijay poltics*

#Minnambalam #ksradhakrishnan #KSRadhakrishnanInterview #vijay #suriya #udhayanidhistalin #dmk #mkstalin #admk #bjp #election2024 #election #loksabhaelection2024 #parliamentelection2024 #parliament #மின்னம்பலம் 

சூர்யாவுக்கு துணிச்சல் இருந்தால் விஜய் போல அரசியலுக்கு வரட்டும்... | KS Radhakrishnan Interview 

https://youtu.be/NDnG9MLETKU?si=KM4ChTcsGYRS1L0y

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-2-2024.

Thursday, February 15, 2024

ElectoralBondsBonds - தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை

#தேர்தல்பத்திரம் மூலம் பாஜக மட்டுமல்ல, காங்கிரஸ், திமுகவும் தான் பணம் பெற்றுள்ளது…

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கட்சிகள்
தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நன்கொடை

பாஜக=  ரூ. 6,559 கோடி
காங்கிரஸ்=ரூ. 1,122 கோடி
திரிணாமூல்= ரூ.1,092 கோடி
திமுக = ரூ.616 கோடி
அதிமுக= ரூ. 6 கோடி

BJP got 52% of its Electoral donations from Electoral Bonds. (5271.9751 cr)

Congress got 61.54% of it's donations from Electoral Bonds. (952.2955 cr)

TMC got 93.27% of it's donations from Electoral Bonds. 
DMK got 90.703% of its donations via Bonds.Donation thru Electoral bond as % of Total donation 

52%      BJP
63%      Congress
93%      TMC
90%      DMK
90%      BJD
80%      TRS
72%       YSRCP

#ElectoralBondsBonds

#ksrpost
15-2-2024.

Wednesday, February 14, 2024

*Aryama Sundaram -CPR* -*DMK*

*Aryama Sundaram -CPR* -*DMK*
————————————
*Justice N Anand Venkatesh of MadrasHighCourt begins hearing former TN Minister V Senthilbalaji's bail plea. Senior Counsel C Aryama Sundaram argues for him*.

Aryama Sundaram is grandson of C. P. Ramasamy Iyer. CPR was lawyer, administrator and politician who served as the Advocate-General of Madras Presidency from 1920 to 1923, Law member of the Executive council of the Governor of Madras from 1923 to 1928, Law member of the Executive Council of the Viceroy of India from 1931 to 1936 and the Diwan of Travancore from 1936 to 1947. From 1 July 1954 to 2 July 1956, he served as the Vice Chancellor of Banaras Hindu University. From 26 January 1955, CPR also served as a Vice Chancellor of Annamalai University, thereby becoming the first Indian to function as Vice Chancellor of two universities at the same time.
In 1953, CPR. was appointed member of the Press Commission of India. Two years later, CPR. toured China as the leader of an Indian universities delegation. CPR  served as a member of the University Grants Commission. CPR was heavily criticised by then Justice Party, present Dravidian political groups. His grandson appearing for this corrupt Senthil Balaji who is in DMK.

#ksrpost
14-2-2024.


தமிழ் மொழியின் சிறப்புகளில் சில

தமிழ் மொழியின் சிறப்புகளில் 
சில உங்களின் பார்வைக்கு... 

ஐநா சபையின் முகப்பு வாசலில் எழுதப்பட்ட ஒரே ஒரு வாக்கியம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 

ரஷ்யாவில் உள்ள lumbha யூனிவர்சிட்டி வாசலிலும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்று மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. 

சீனாவில் தமிழ் வானொலி சேவை இந்திய நேரப்படி 7 30 லிருந்து 8 30 வரை தினமும் நடைபெறுகிறது . 

அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா எனும் அருங்காட்சியகத்தின் வாசலில் "கற்றது கை மண் அளவு" என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது.  

ஜப்பானிய பல்கலைக்கழகத்தின் வாசலில் சங்கத் தமிழின் பாடல் வரிகளை எழுதி வைத்துள்ளனர். 

ஜெருசலேம் நகரில் ஒலிவ மலையில் இயேசு போதித்த வழிபாட்டு கருத்துக்களை 68 மொழிகளில் எழுதி வைத்துள்ளனர் .அதில் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம்பெற்றுள்ளது.   

நயகரா நீர்வீழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்கும் வரவேற்பு பலகையில் உலகில் உள்ள ஆறு மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது அதில் ஒன்று தமிழ்! 

அமெரிக்கா செவ்வாய்க்கு பயணிர்-4        என்ற விண்கலத்தை அனுப்பியது செவ்வாயில் மனிதன் வாழ்ந்தால் அவன் புரிந்து கொள்ள ஒரு CD யும் இணைத்து அனுப்பியது அதில் அனுப்பிய ஐந்து மொழிகளில் ஒன்று தமிழ் . 

அமெரிக்காவின் செனகல் நாட்டில் தாக்கர் பல்கலைக் கழகம் தமிழைச் செவ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளது. 

பிரிட்டனில் 2 பல்கலைக்கழகத்தில் 
தமிழ் கற்பிக்கப்படுகிறது. 

ஜெர்மனியிலுள்ள Kolon university யில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள்  அங்குள்ள நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. 

இந்திய மொழிகளில் பைபிள் 
தமிழில்தான் முதன் முதலில் யாழ் ஆறுமுக நாவலரின் முன் எடுப்பில் எழுதப்பட்டது.


#*வலி;மையானவரின் வலிமிகுந்த வரிகள்*.

#*வலி'மையானவரின்
வலிமிகுந்த வரிகள்*.
————————————
என்னிடம் பெரிதாய்
முகமூடிகள் 
இருந்ததில்லை 

அதனால் ஏற்பட்ட
இழப்புகள்
கொஞ்சம் அதிகம்

இருந்த புன்னகை
முகமூடியையும்
பயன்படுத்தி 
பழசாக போய்விட்டது 

இனி 
தேவையில்லையென்று
 தோன்றுகிறது 

இப்பொழுது 
எனக்கே எனக்கான 
ஒரே ஒரு முகமூடி 

இயல்பாக 
சுதந்திரமாக இருக்க….
- யார் வரிகள் என தெரியல…எங்கோ வாசித்தது….

•••
பாதைகள் எப்போதும் வெற்றியை தீர்மானிப்பதில்ல:அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சி தான் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்.

நீங்கள் முன்னேறும் நேரம் பார்த்து முட்களைப் பாதையில் வீச பலர் வருவார்கள்; அதைக் கண்டு மிரளாது உங்கள் பயணத்தைத் தொடர்ந்தால் இலக்கை அடையலாம்.

ஒவ்வொரு பிரச்சனையும் சாலையில் உள்ள சிகப்பு விளக்கைப்போல,சிறிது நேரம் காத்திருந்து அது பச்சை நிறமாக மாறிய பிறகு செல்வதைப் போலத்தான் வாழ்க்கை.

வாழ்க்கை பிரச்சினைகள் மட்டுமே கொடுப்பதில்லை; பிரச்சினைகளைக் கடந்து செல்லும் வழியையும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது கவனத்துடன் கையாளுங்கள். வெற்றி நிச்சயம்.....

சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.

அயர்ந்து தூங்கினாலும் கச்சிதமாய் எழுப்பி விடுகிறது ஏதேனும் ஒரு கவலை.

எண்ணத்தில் என்னத்தையாவது போட்டு உலப்பிக்கொண்டே இருப்பவர்களுக்கு கவலையில் இருந்து விடுதலை கிடைப்பதில்லை.

எல்லாம் சரியாகிவிடும் என்ற வரி தான் பலரின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாட்களையும் நம்பிக்கையோடு நகர்த்துகிறது.

சோதனைகளை தாண்டிய சாதனை சிறகுகள் வந்தனிக்கிறது.. பெருமிதம் கொள்கிறது.. அந்த வெற்றிகளில் வெற்றி நிறைந்திருக்கும்…....

#வாழ்வியல்சிந்தனைகள்
#lifecoaching 
#வலி
#மையானவரின்_வலிமிகுந்த_வரிகள்

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
14-2-2024.


Tuesday, February 13, 2024

How Can Political Party Occupy Land Allotted To High Court? : Supreme Court Shocked At #ArvindKejriwal's AAP Party Office In Delhi HC's Land

'How Can Political Party Occupy Land Allotted To High Court? : Supreme Court Shocked At #ArvindKejriwal's AAP Party Office In Delhi HC's Land

"We are not asking for judges' bungalow or something...we are asking for public amenities. And a political party is sitting tight on that! Why did you allot it to the High Court then? Tell us when are you going to give unencumbered possession to the High Court. This has to come to an end. The High Court is going to use it for the citizens and the residents of Delhi. Tell us what you are doing" -CJI DY Chandrachud.

#SupremeCourtofIndia #SupremeCourt #AAP #Delhi


சம்சாரிகளை வஞ்சம் செய்யும் திமுக ஆட்சி….. இவர்கள் டில்லி விவசாய போராட்த்தை ஆதரிக்கிறார்கள்.. இது இவர்களின் நியாயம்⁉️

டில்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசும் இவர்கள்; தமிழகத்தில்
 திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது, பரந்தூரில் வளத்தூர், தண்டலம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், உள்ளிட்ட 13 கிராமங்கள் விவசாயிகள் போராட்டம் என சம்சாரிகளை வஞ்சம் செய்யும் திமுக ஆட்சி…..
இவர்கள் டில்லி விவசாய போராட்த்தை ஆதரிக்கிறார்கள்.. இது இவர்களின் நியாயம்⁉️


*நேற்று(12-2-2024)சட்டமன்ற தலைவர் அப்பாவு நையாண்டி அசட்டுத்தனமாக தேசிய கீதத்தை, ஜனகணமனகண….. என கேலி செய்யும் தொனியில் சொல்லி இருக்கிறார் என அவரின் பாவனைகள் மூலம் தெரிகிறது*.ஆளுநர் மீது சபை உரிமை மீறல் தீர்மானம்  …சரி 

சில கேள்விகள் நம்மில் விடை இல்லாமல் இருக்கின்றன. தமிழக ஆளுநர் ரவி அவர்கள் சபை தொடங்குவதற்கு முன்பாகவும் சபை முடியும் நேரத்திலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று  சொல்லியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

என் பார்வையிலும் இந்த முடிவு சரி இல்லை என்று தான் சொல்ல முடியும். மாறாக ஆளுநர் அவர்கள் முதலில் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தான் முறை என்று சொல்லி இருக்க வேண்டும்.

பெரும் சர்ச்சைகளுக்கும் விவாதத்திற்கும் இடையே ஆளுநர் அவர்கள் சபையை விட்டு வெளியேறிப் போகும்போது சட்டமன்ற தலைவர் அப்பாவு ஜனகணமனகண என்று கிண்டல் தொனியில் சிரித்தவாறு நையாண்டி செய்கிறார்.

ஆளுநரை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் இந்திய ஒருமைப்பாட்டின் தேசிய கீதத்தை அவர் அவமதிப்பது எப்படிச் சரியாகும். அதுவும் அரசியல் அமைப்பு ரீதியாக ஒரு சட்டப்பேரவைத் தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது மக்களாட்சி மன்றத்தையே அவமதிப்பதாகும்.
இவை கேள்விக்கு உள்ளாகின்றன.

சட்டமன்ற தலைவரின் இந்தக் நையாண்டி தேசிய அவமதிப்பு வழக்கிற்கு கீழ் வரும் என்பதை கூட அவர் அறியாமல் அசட்டுத்தனமாக  தேசிய கீதத்தை, ஜனகணமனகண என சொல்லி கேலி செய்து இருக்கிறார். பதவியின் போது உறுதிமொழி எடுப்பதற்கு இது முரணானது ஆகாதா?

இப்படித்தான் மத்திய மாநில உறவுகளில் சில கேள்விகள் விடை இல்லாமலே சென்று கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி யோசிக்க கூடிய பற்றற்ற தலைவர்கள் விடைபெற்று போய்விட்டார்கள்.
#ksrpost
13-2-2024.

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு  The beauty of village.  The beauty Of nature  Love of everything  village #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost  20-6...