Thursday, February 1, 2024

ஓமந்தூரார் பொதுவாழ்வின் அடையாளம். நேர்மை கொண்ட தைரிய சீலர். முதல்வர்களின் முதல்வர். விவசாய முதல்வர்

*இன்று  சத்திய சீலர் ஓமந்தூரார் பிறந்தநாள்*! 




இவர் 1895 பிப்ரவரி 1 ஆம் தேதி தென் ஆற்காடு மாவட்டத்தில் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தார். அவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்  காங்கிரசின் முக்கிய புள்ளி. அவர் 23 மார்ச் 1947 முதல் 6 ஏப்ரல் 1949 வரை மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரதமராகப் பணியாற்றினார். ராமசுவாமி ரெட்டியார் 23 மார்ச் 1947 அன்று சென்னையின் முதல்வர் அல்லது பிரதமரானார் மற்றும் 6 ஏப்ரல் 1949 வரை ஆட்சியில் இருந்தார். அவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அங்கீகாரம் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் தலித்துகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட இந்துக்களுக்கு இந்துக் கோயில்களுக்குள் நுழைவதற்கான முழு மற்றும் முழுமையான உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இது 11 மே 1947 அன்று கவர்னரால் அங்கீகரிக்கப்பட்டு 1947 இன் மெட்ராஸ் சட்டம் 5 ஆக நிறைவேற்றப்பட்டது. 1947 ஆம் ஆண்டின் தேவதாசி அர்ப்பணிப்பு ஒழிப்பு சட்டம் பல இந்து கோவில்களில் நடைமுறையில் இருந்த தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவருடைய பதவிக்காலத்தில்தான் இந்தியா இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
••
1948 ஆம் வருடம் அக்டோபர் மாதத்துடன் சென்னை மாகாணம் பூராவும் பூரண மதுவிலக்கு அமுலுக்கு வருகிறது. அதன் மூலமாக சர்க்காருக்கு வருடம் ஒன்றுக்கு ரூபாய் 17 கோடி நட்டம் ஏற்படும். இம் மாகாணத்தின்  சராசரி  ஆண்டு வருமானம் 48 கோடி ரூபாய் என்றால், ஆண்டு வருவாயில் கிட்டத்தட்ட பாதி தொகையை மதுவிலக்கை அமுல்படுத்துவதற்காக இழக்க நேரிடும். மேலும் மதுவிலக்கை அமுலில் கொண்டு வருவதற்கு வருடம் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று கோடி ரூபாய் செலவாகும். இருப்பினும் அரசாங்கத்திற்கு ஏற்படும் இந்த வருவாய் இழப்பை விட மக்களின் உடல்நலம் முக்கியம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மக்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் மதுவை ஒழிப்பதில் மறு கருத்துக்கு இடமில்லை. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் எனக்கு இல்லை! 
 -சென்னை மாகாண சட்ட சபையில் ஓமந்தூரார் பேசியது- 1948. ( ஓமந்தூரார் எழுத்தும் - கருத்தும் என்ற நூலில். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு - 1950 )

இவரின் ஆட்சியில்;
* சமூக நீதிக்கு அரசு உத்தரவு.
*தமிழ் பயிற்சி மொழி, 
*தமிழ் கலைகளஞ்சியம் - எட்டு தொகுதிகள்.
*ஆலய பிரவேசம்
என இவரின் பங்களிப்ப பல உண்டு.

#ஓமந்தூரார்_129
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
1-2-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...