Sunday, February 4, 2024

#*ஜெட்ஏர்வேஸ்* *நரேஷ்கோயல் நிலை*❓



————————————
இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ்  நிறுவனம் விமான துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அதாவது  உள்ளூர் தொழில் முதலீட்டு வாய்ப்பில் பேர்பெற்ற நிறுவனம்.  இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் தொடங்கி கடந்த 26 ஆண்டுகளாக நன்றாகச் செயல்படுத்தி வந்தார்.‌ வங்கி கடன் பெற்று நடத்தி வந்தாலும்  சிறப்பான நிர்வாகத்திற்காக மக்களிடையே செல்வாக்கு பெற்றும் இந்த நிறுவனம் விளங்கியது. 

அமலாக்க துறை மற்றும் கடன்களைத் திருப்பி செலுத்தாத நடவடிக்கைகளுக்காக நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவர் கண்ணீர் மல்க நீதிமன்றத்தில் “என்னைத்தயவு செய்து சாகடித்துக் கொன்று விடுங்கள்” என்று கையெடுத்து கும்பிட்டு அழுவதை பார்த்த போது மனம் கலங்கித் தான் போனது.

சட்ட புறம்பாகபண பரிவர்தனை,தொழில் நடத்துவதற்காக வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தவில்லை. அல்லது செலுத்த முடியவில்லை. பல்வேறு போட்டி நிறுவனங்கள் வேறு அவரை தொழில் செய்ய விடாமல் சூழ்ச்சி செய்கிறார்கள். இதற்கு இடையே நேர்மையான  அவரது மனம் துடிதுடித்து போன காட்சியை அந்த நீதிமன்றத்தில் பார்க்க முடிந்தது. 

இப்படியான நிதி  நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் சிக்கித் திணறியதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் கடந்த 2019 ஏப்ரல் மாதத்துடன் செயல்பாட்டை நிறுத்தி கொண்டது.
இந்தப் பின் காலனியச் சூழலில் இந்தியாவின் உள்ளூர் தொழிலதிபர்கள் பன்னாட்டு  போட்டி நிறுவனங்களுக்கு இடையே சிக்கி  எவ்வாறு தன்னிலை இழந்து பரிதவிக்கிறார்கள்  என்பதற்கு  ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிபர் கோயல் ஒரு சாட்சி!

 A special PMLA court here on Saturday remanded Jet Airways founder Naresh Goyal in the Enforcement Directorate’s (ED) custody till September 11 in an alleged case of fraud of Rs 538 crore, registered on a complaint filed by Canara Bank.

Goyal (74) was arrested by the Central agency on Friday night under the Prevention of Money Laundering Act (PMLA) following a long session of questioning at its office here. He was produced before the court on Saturday.

The money laundering case stems from a First Information Report registered by the Central Bureau of Investigation (CBI) against Jet Airways, Goyal, his wife Anita and some former executives of his defunct airline.

The FIR was registered on the bank’s complaint alleging that it sanctioned credit limits and loans to Jet Airways (India) Ltd to the tune of Rs 848.86 crore, of which Rs 538.62 crore is outstanding. JIL diverted funds to its subsidiaries, it alleged. 

இன்றைய அரசியல்வாதிகள் ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு  எல்லாம் நேர் வினை இருந்தால் மட்டுமே….  குற்றம் என்றால் ஊழ், தண்டனை என நேர் கொள்ள வேண்டியதுதான்…..

#ஜெட்ஏர்வேஸ்
#நரேஷ்கோயல்
#Jetairways_goyal

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
4-2-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...