Tuesday, February 20, 2024

இன்றைய அரசியல்

#இன்றையஅரசியல் 
————————————-
கடந்த இரண்டு மூன்று நாட்களாக அரசியல் புள்ளிகள் என தங்களை அழைத்து வா‌ய் ஒ‌லி கொ‌ள்ளு‌ம் பல தரப்பினர் என்னைச் சந்திக்க வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? என்று கேட்கிறார்கள். அடுத்த கேள்வி எவ்வளவு பணம் இருக்கிறது? இப்போது நான் எந்த அரசியல் கட்சிலும் இல்லை.
இந்தக் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ஆகப் பணம் இருந்தால் மட்டும் தான் தேர்தலைச் சந்திக்க முடியும். கொள்கை கோட்பாடு  என ஒரு  ஆட்சிமன்றத்திற்கு அதன் வழியே மக்களுக்கான நலன்களைநிறைவேற்றுவதற்கு அரசியல் ஆர்வம் உள்ள ஒரு மனிதரை தன் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களை பணத்தை வைத்து மட்டும் தான் அரசியல் களம் முடிவு செய்ய முடியும் என்றால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

அப்படி பணத்தால் தான் தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வர முடியும் என்றால் தனிப்பட்ட முறையில் ஒரு சுதந்திரச்சிந்தனையாளராக அரசியல் பார்வையாளராக விமர்சகராக அரசியலில் தவறு காணும் இடத்தில்  எதையும் தட்டிக் கேட்கும் உரிமையுடன் இருப்பதே சாலச் சிறந்தது.

கொள்கைப் பிடிப்போடு மக்கள் நலம் சார்ந்த கோட்பாட்டு வரைவுகள் அதற்கான அறிவுத்திறன் தொலைநோக்குப் பார்வைகள் விஞ்ஞானமும் அரசும் ஆகிய எதிர்கால முறைகள் அதற்கான அரசியல் விருப்ப உறுதிகள் சனநாயக மாண்புகள்
எதுவும் தேவையில்லாமல் எல்லாம்  பணத்திற்கு கீழ் வந்து விட்ட பிறகுஎதைப் பேசுவதிலும் பலன் இல்லை. காசு-மது-மாது-வாரிசு என்பதை கொண்டு வியாபார அரசியலும் நள்ளிரவு 5 ஸ்டார் விடுதி விருந்துகள் என ……
அதன் முடிவுகள் என்றால் அது அரசியலும் இல்லை பொதுவாழ்வு என்பதும் அல்ல

 நேற்று வரை தமிழக நலன் என சொன்னவர் இன்று தன் மகன் வாரிசு அரசியல் நலனில் கடும் பாடுகளை எடுக்கிறார் . என்ன முரண்பாடு⁉️

இன்று  பணம் பணத்தைத் தான் சம்பாதிக்கும். குணம் எனும் குன்றேறி நிற்பவருக்கு இங்குள்ள தளத்தில் பணி எதைவும் இல்லை.

நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு முகமூடியும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. நம்மில் பெரும்பாலோருக்கு இவை பற்றித் தெரியாது; பல்வேறு தாக்கங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டு, முகமூடிகள் கட்டளையிடுவதைப் பொறுத்து செயல்படுகிறோம். 

எனவே நாம் இறக்கும் வரை முரண்பாடான வாழ்க்கை வாழ்கிறோம்.

#இன்றையஅரசியல் 
#தமிழகஅரசியல் 
#todayspoltics 

(Pic- taken 1976 during my student politics days @ JNU -New Delhi )

#ksrpost
20-2-2024.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...