Saturday, February 3, 2024

*நாம் ஒற்றுமை பற்றிய அறிவார்ந்த கோட்பாடை கொண்டுள்ளோம், ஆனால் அறிவையும் உணர்வையும் வெவ்வேறு பிரிவுகளில் வைத்திருக்கிறோம்; எனவே மனிதனின் அசாதாரண ஒற்றுமையை நாம் ஒருபோதும் அனுபவிப்பதில்லை*….



‘மனிதன் ரொம்ப
பழமையான
உலோகம்தான்.

காலம்தான் 
அவனை 
புதிது,புதிதாக
வார்க்கிறது’. 
~ ஜெயகாந்தன் 

ஆகச் சிறந்த அற்புதமான வாழ்வியல் தத்துவம்..! "வாழ்வில் எதை இழந்தாலும் நீ கவலைப்படாதே உனக்கு அனுபவம் மிஞ்சும்" என்பார்கள். அந்த  அனுபவங்களின் வெளிப்பாடுதான் வாழ்வியல் தத்துவங்களாக  மிளிர்கின்றன!

ஒருநாள் விடுப்பு வேண்டும்
எனக்கு

துரத்தும் துயரங்களிலிருந்து
உறக்கமற்ற இரவுகளிலிருந்து 
அலுப்பூட்டும் தனிமைகளிலிருந்து 
தொடர்ந்திடும் சாபங்களிலிருந்து 
பாடாய்ப்படுத்தும் பிணிகளிலிருந்து
உயிர்க்கொல்லும் துரோகங்களிலிருந்து
களைப்பாக்கும் பொறுப்புகளிலிருந்து 
சங்கடப்படுத்தும் நன்றிக்கடன்களிலிருந்து 
அழுத்தும் பணிச்சுமைகளிலிருந்து
புரிதலில்லா உறவுகளிலிருந்து 
ஒருநாள் விடுப்பு வேண்டும்
எனக்கு

ஒருநாளில் 
இங்கு எதுவும் மாறிவிடாதென்பது 
தெரியும்தான் 
ஆயினும் 
முதுகில் கனக்கும் 
சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவைத்துவிட்டு 
சற்றே நான் ஆசுவாசப்பட 
எனக்கொரு நாள் மட்டும் விடுப்பு 
வேண்டும் 

பின்னும்
நான் எனும் அடையாளங்கள் 
துறந்து
யாரோ போல 
எங்கேனும் நான் தொலைந்து 
மீள்வதற்கு
ஒரே ஒருநாளேனும் 
விடுப்பு வேண்டும்
எனக்கு
அவ்வளவே
-ரிஸ்கா முக்தார் Riska Mukthar

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
3-2-2024.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...