Wednesday, February 21, 2024

*மனிதநேய பண்பாளர் சைதை துரைசாமி*

*மனிதநேய பண்பாளர்  சைதை  துரைசாமி*
————————————
முன்னாள் சென்னை மாநகர மேயரும், கட்சி கடந்து பலரிடம் அன்பு பாராட்டுவருமான மனித நேய அறக்கட்டளை நிறுவனரான நண்பர் திரு. சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமியின் உடல் சிந்துவின் சட்லஜ் நதியில் இருந்து எட்டு  நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கிறது.

சென்னைக்கு வெற்றியில் உடல் கொண்டுவரப் பட்டபோது அவ்வளவு கூட்டம் திரண்டு அஞ்சலி செலுத்தியிருக்கிறது.

அப்போது நான் சென்னையில்
 இல்லாத நிலையில் அன்று என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

 கடுந்துயரத்தைச் சந்தித்த சைதை துரைசாமியைச் சில நாட்கள் கழித்துச் சந்திக்கலாம் என்றிருந்தேன்.

நேற்று 20-2-2024  நண்பர்கள் குமார்,கல்கி ப்ரியன், மணா, அனீஸ்  என சிலருடன் தி.நகரில் உள்ள வீட்டில் சந்தித்தேன்.

மகன் வெற்றியைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்த விதம் அவரது அளப்பரிய பாசத்தைக் காட்டியது. உருக்கமாகவும் இருந்தது.

பேச்சின் நிறைவில் எம்.ஜி.ஆர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கை சில காலம் கடந்து நிறைவேறியதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

 மனித நேய அறக்கட்டளை மூலம் படித்துத் தற்போது நாடு முழுக்கப் பரவியிருக்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் தந்தையைப் போலத் தன்னைப் பாவித்து ஆறுதல் படுத்தியதைப் பகிர்ந்துவிட்டு " அவர்கள் எல்லாம் எனக்கு மகன்கள் தானே. இன்னும் மகனின் நினைவாகப் பலவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.

பெரும் இழப்புக்குப் பிறகும் அவரிடம் வெளிப்பட்ட நம்பிக்கை முக்கியமானதாகத் தெரிந்தது. 20 நிமிடங்கள் அவர் பேசியது நமக்கே தைரியம் தந்தது

எந்தப் பெற்றோருக்கும் இம்மாதிரியான துக்கம் நிகழ்ந்திருக்கக் 
கூடாது.இதை போலவே சென்னை பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகனை துன்டு துன்டாக வெட்டிய அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த சம்பங்கள் எப்படி பெற்றோரை பாதிக்கும். ஊழ் இப்படி இருக்கு.

பண்பாளர்  சைதை  துரைசாமிக்கு இப்படி ரணமா? இயற்கையின் நீதி எங்கே? அறம் எங்கே?

காலம் நண்பரை அவரின் நல்ல மனது ஆற்றுப்படுத்தட்டும்!

#சைதை_சா_துரைசாமி

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-2-2024.


No comments:

Post a Comment

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...