Tuesday, February 13, 2024

*நேற்று(12-2-2024)சட்டமன்ற தலைவர் அப்பாவு நையாண்டி அசட்டுத்தனமாக தேசிய கீதத்தை, ஜனகணமனகண….. என கேலி செய்யும் தொனியில் சொல்லி இருக்கிறார் என அவரின் பாவனைகள் மூலம் தெரிகிறது*.



ஆளுநர் மீது சபை உரிமை மீறல் தீர்மானம்  …சரி 

சில கேள்விகள் நம்மில் விடை இல்லாமல் இருக்கின்றன. தமிழக ஆளுநர் ரவி அவர்கள் சபை தொடங்குவதற்கு முன்பாகவும் சபை முடியும் நேரத்திலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று  சொல்லியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

என் பார்வையிலும் இந்த முடிவு சரி இல்லை என்று தான் சொல்ல முடியும். மாறாக ஆளுநர் அவர்கள் முதலில் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தான் முறை என்று சொல்லி இருக்க வேண்டும்.

பெரும் சர்ச்சைகளுக்கும் விவாதத்திற்கும் இடையே ஆளுநர் அவர்கள் சபையை விட்டு வெளியேறிப் போகும்போது சட்டமன்ற தலைவர் அப்பாவு ஜனகணமனகண என்று கிண்டல் தொனியில் சிரித்தவாறு நையாண்டி செய்கிறார்.

ஆளுநரை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் இந்திய ஒருமைப்பாட்டின் தேசிய கீதத்தை அவர் அவமதிப்பது எப்படிச் சரியாகும். அதுவும் அரசியல் அமைப்பு ரீதியாக ஒரு சட்டப்பேரவைத் தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது மக்களாட்சி மன்றத்தையே அவமதிப்பதாகும்.
இவை கேள்விக்கு உள்ளாகின்றன.

சட்டமன்ற தலைவரின் இந்தக் நையாண்டி தேசிய அவமதிப்பு வழக்கிற்கு கீழ் வரும் என்பதை கூட அவர் அறியாமல் அசட்டுத்தனமாக  தேசிய கீதத்தை, ஜனகணமனகண என சொல்லி கேலி செய்து இருக்கிறார். பதவியின் போது உறுதிமொழி எடுப்பதற்கு இது முரணானது ஆகாதா?

இப்படித்தான் மத்திய மாநில உறவுகளில் சில கேள்விகள் விடை இல்லாமலே சென்று கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி யோசிக்க கூடிய பற்றற்ற தலைவர்கள் விடைபெற்று போய்விட்டார்கள்.
#ksrpost
13-2-2024.

No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...