Wednesday, February 7, 2024

#*கனிமொழிக்கு ஒரேநாடு ஒரேதேர்தல் கலைஞர் ஆதரித்த வரலாறு திமுகவுக்கு உண்டு என்ற வரலாறு தெரியமா*⁉️

#*கனிமொழிக்கு
ஒரேநாடு ஒரேதேர்தல்
கலைஞர் ஆதரித்த வரலாறு திமுகவுக்கு உண்டு என்ற வரலாறு தெரியமா*⁉️
————————————
திமுக எம் பி யும் ஒரு காலத்தில் நாடாளுமன்ற ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர்களால் செல்லமாக கலைஞர் மகள் என்கிற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி அவர்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை என்பது மாதிரி புரட்சிகரமாகப் பிரகடனம் இட்டுள்ளார்.

கனிமொழியின் அரசியல் வரலாற்றைத் திரும்பி பார்த்தோமேயானால் 2007 சூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக  முதல் முதலில் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.இரண்டாவது முறையாக 2013இல் மீண்டும் மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் 2019 ஆம் ஆண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போது வரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்து வருகிறார். ஆக 2000 த்திற்குப் பிறகு வந்த அவருக்கு அரசியலில் வாரிசு அடிப்படையில்  தங்கத்தட்டில் பதவி அளிக்கப்படுகிறது.

ஆகவே அதற்கு முன்பாக நடந்த அரசியல்  வரலாறு துல்லிதமாக அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த வகையில் கனிமொழிக்கு கொடுக்கப்பட்ட அரசியல் வாய்ப்பு என்பது திமுகவின் ஒரு செல்ல பரிசு தான்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முறையில் ஒரு தேசம் எவற்றை அடிப்படையாக வைத்து முடிவு செய்தது என்பதற்கான ஆதாரங்களோ விவரங்களோ அவருக்கு தெரியாது. அப்படி பதவிக்கு வந்தவர் யாராவது சொல்வதைக் கேட்டு எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கான்ஸ்டியூசன் ஆப் இந்தியா எத்தனை பரிணாமங்களை எத்தனை பிளவுகளை எத்தனை இணைப்புகளை எத்தனை அந்நிய ஆட்சிகளைக் கடந்து ஒருங்கிணைந்து ஒரு தேசமானது என்பதை அவர் வாசிக்க வேண்டும்.

அத்தனை மாநிலங்களையும் உள்ளடக்கி மொழி வாரித் தேசியங்களை மாநில எல்லைகளாக வகைப்படுத்தி உருவான இந்தியன் கான்ஸ்டிடியூஷன் பிற்காலத்தில் சர்வதேச நாடாக  வலிமை அடைந்ததுஅதன் கூட்டணி ஆன கொள்கைகளால் தான் என்பதை அவருக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு 1952 57 1962 மற்றும் 1967 தேர்தல் கள் வரை இந்தியா ஒரே நாடு ஒரே தேசம் ஒரே தேர்தல் என்கிற முறையில் தான் நாடாளுமன்றம் கண்டது என்பதையும் உலக நாடுகள் அதிசயமாக எப்படி இத்தனை கலாச்சார இன மத பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி மேலும் 100 கோடி மக்கள் உடைய ஒரு ஜனநாயக நாடு தேர்தலை சந்தித்து ஜனநாயக ஆட்சி முறையை அமைக்கிறது என்று வியந்து பாராட்டியதையெல்லாம் அவர் படித்திருக்க வேண்டும்.

ஏன் அவரது தந்தையும் கூட தனது நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முறையை ஆதரித்து பேசி உள்ளார். அவரின் பேசிய காணொளி காட்சி இதோ…அதை பார்த்து,வாசித்தாவது கனிமொழி தன் எதிர்கால அரசியலை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.இது குறித்து கலைஞர் இந்திரா காந்திக்கு எழுதிவிட்டு டில்லியில் சந்தித்தார். சிறுபிள்ளைத்தனமாக வரலாறு தெரியாமல் அரசியலையும் அதன் தத்துவங்களையும் வாசிக்காமல் அவற்றின் நடைமுறை எப்படி தொடர்ந்து வந்திருக்கிறது என்பதை அறியாமல் புத்திசாலித்தனமாக பேசுவது
அவருக்கு பொருந்துவதில்லை அவர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

2005 திற்கு மேல்  அரசியலுக்கு வந்து மக்களைச் சந்திக்கிறேன் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்கிற திமுக பெருங்குடும்ப பின்னணியின் செல்லக் குழந்தையாக இருப்பது கொடுப்பினைதான். அரசியலுக்கு யாரும் வரலாம் அதில் தடை இல்லை. ஆனால் வரலாற்றில் பல தலைமுறைகளைக் கண்ட இந்திய அரசியலை தன் தந்தையின் எழுத்துக்களில் இருந்தாவது முறையாகக் கனிமொழி அவர்கள் கற்க வேண்டும்.

#ஒரேநாடுஒரேதேர்தல்
#OneNationOneElection
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
7-2-2024#*கனிமொழிக்கு*
*ஒரேநாடு ஒரேதேர்தல்

7-2-2024

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...