Thursday, February 8, 2024

*கேரள ஆதரவு ஸ்டாலின் திராவிட மாடல் - விடியா ஆட்சியில் முல்லைப்பெரியாறு, ஆழியாறுபரம்பிக்குளம் போன்ற 10 நதிகளை தீர சிக்கல்கள பற்றிய தீர்வுகள், கண்ணகிகோட்டம் என இன்னும் முடிவுக்கு வரவில்லையே*. ⁉️

*கேரள ஆதரவு ஸ்டாலின் திராவிட மாடல் - விடியா ஆட்சியில்
முல்லைப்பெரியாறு, ஆழியாறுபரம்பிக்குளம் போன்ற 10 நதிகளை தீர சிக்கல்கள பற்றிய தீர்வுகள், கண்ணகிகோட்டம் என இன்னும் முடிவுக்கு
வரவில்லையே*. ⁉️
————————————-
நிதிப்பகிர்வில் மத்திய அரசு வஞ்சிக்கிறது என கூறி கேரள அமைச்சரவை இன்று டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர்

கேரள முதல்வர் பினராய் விஜயன் இடதுசாரிகள் தலைவர்கள் சீதாராமச்சூரி டி ராஜா உள்ளிட்டோர் வந்துள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். சரிதான்…

அப்படியே,
தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையே நீர் பங்கீடு விவகாரங்களில் #நெய்யாறு,#முல்லைப்பெரியாறு, #ஆழியாறுபரம்பிக்குளம் போன்ற 10 நதிகளை தீர சிக்கல்கள பற்றிய தீர்வுகள், #கண்ணகிகோட்டம் என இன்னும் முடிவுக்கு வரவில்லை. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய கொடுக்கக்கூடிய நீர் ஆதாரங்களை முற்றிலுமாக மறுத்து விட்டுப் பதிலாக குதிரை குப்புறத் தள்ளியது மாதிரி
ஏராளமான இறைச்சி மருந்து கழிவுகளையும் #கேரளகுப்பைகளையும் கொண்டு வந்து தமிழக எல்லைகளில் கொட்டி விட்டு போகும் கேரள அரசின் பல செயல்பாடுகளை நிறுத்தச் சொல்லி முதலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டாமா?

#ksrpost
8-2-2034.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...