Monday, February 19, 2024

#தமிழ்தாத்தா உவேசா...

உ.வே.சா. பற்றி எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்...

+++

இவர் தாம் அறிந்த இலக்கிய விஷயங்களை அச்சில் வெளியிடும்வரை அடக்கமாக வைப்பாராயினர். தாம் செய்துவரும் தொண்டுகளிலும் அடக்கத்தையே கைக்கொண்டனர். இவர் இல்லத்திலுள்ள சுவடி நிலையத்தைக் கண்டுகளிக்கும் பேறுகூடக் கவி ரவீந்திரநாதர் ஒரு சிலரே பெற்றுள்ளனர். பிறர் கண்களில்படும்படியாக நூல் ஆராய்ச்சி செய்வதை அறவே விட்டு விட்டனர். அடக்கமாக, பிறரால் காண முடியாதபடி, தனியாக அமைந்த ஓர் அறையில் தாமும் தமது சிஷ்யர்களுமிருந்து நூற் பரிசோதனை செய்து வரலாயினர். ஆகவே பெரும்பாலும் இன்ன காலத்தில் இன்ன நூல் வெளிவரும் என்பது இவர் சிஷ்யர்களுக்கன்றி ஏனையோர்களுக்குத் தெரியமாட்டாது. சிஷ்யர்களும் இந்த அடக்கத்தையே கையாண்டு வந்தனர். ஏட்டுச் சுவடிகளேயன்றி இவர்கள் படித்து வந்த அச்சுப் புத்தகங்களைக்கூட இரவல் வாங்க முடியாது…













இங்கனமே, பிரதிகள் தேடிப் பண்டை நூல்களைப் பதிப்பிடுவதில் முயன்றுவரும் அறிஞர்களுக்குப் பிரதிகளை எளிதில் கிடைப்பதா ? இல்லை. ஐயருக்கு இந்த நல்லூழும் விதிக்கப்படவில்லை. இதனால் ஒருவருக்கும் இவர் தம்மிடமுள்ள பிரதிகளைக் கொடுத்ததில்லை என்பது என் கருத்தல்ல. எனக்குச் சில பிரதிகள் உதவியிருக்கிறார்கள் என்பதை நன்றியுடன் பாராட்டுகிறேன். நானும் இவர்களுக்குப் பிரதிகள் உதவியுள்ளேன். கேட்போர் ததியையும் நோக்கத்தின் தூய்மையையும் மாத்திரம் கருதி இவர் பிரதிகள் உதவுவதில்லை. விலக்க முடியாத நிர்பந்தம் ஏற்பட்டால்தான் இவர் உதவுவர். அவ்வாறு தரும் பிரதிகளும் பெரும்பாலும் பயனற்றனவாகவே இருக்கும். தாம் பல ஆண்டுகளாக அரிதின் தேடி வைத்த பொருளை ஒருவர் கேட்டவுடனே கொடுத்துவிட எளிதில் மனம் வருமா ? ஆனால், தாம் உதவாதது மாத்திரமே யன்றி, பிற பேரறிஞர்களும் நூலைப் பதிப்பிடுவோர்க்கு உதவுதல் கூடாது என்று இவர் கடிந்துரைத்ததை நான் நன்கு அறிவேன். கம்பர்விலாசம் இராஜகோபாலையங்கார் அகநானூற்றைப் பதிப்பிட எடுத்துக்கொண்ட பொழுது, அவருக்கு ஸேது ஸம்ஸ்தான மகாவித்வான் ரா. ராகவையங்கார் பிரதிகள் கொடுத்தும் பிறவாறும் உதவக்கூடாது என்று இவர் தடை செய்தனர். அகநானூற்றை ஐயர் தாமே பதிப்பிடக் கருதியிருந்தனர். ஒருவேளை, இக்கருத்து இவரைக் கடுமையுள்ளத்தராகச் செய்திருக்கலாம். எனினும் இவ்வகையான மனப்பான்மைகள் ஐயருக்கு இருந்தமை தமிழ் மக்களது துர்பாக்கியமே.

+++

நம்மிடையே இருக்கும் திறன் மிக்க பார்ப்பனரல்லாத இலக்கிய விமர்சகர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் நூறாண்டு கடந்த பின்னரும், தேசியவாதிகளின் சத்சங்கத்தில் இணைந்து, உ.வே.சா. புகழ்பாடும் சங்கத்தில் சேர்ந்து, பன்னிசைத்து கொண்டிருப்பதால்,  விமர்சனப் பார்வையுடைய எவரும், எஸ். வையாபுரிப் பிள்ளை என்ன கூறியுள்ளார் என்பதை அறிந்துகொள்வது நல்லது. அத்தோடு நிற்காமல் முன்சென்று சிந்திப்பதற்கும் நிறைய விசயங்கள் உள்ளன.
••••••


தமிழ் தாத்தா தான் நமக்கு.
சும்மா மரபு வழி வந்த தாத்தா கிடையாது.
நடையாக நடந்திருக்கிறார் கிராமம் கிராமமாக..
அங்கே ஒரு வீட்டில் யாப்பருங்கல காரிகை இருக்கிறதாம்.
இங்கே இன்னொரு புறத்தில் சீவக சிந்தாமணியாம்..
வேறொரு புறத்தில் வீரசோழியம் ஓலை சுவடிகளாம்...
நூறு இடங்களில் அலைந்தால் பதிற்று பத்தில் ஒரு பத்து....
இப்படி சேகரித்தார் ஏடுகளை..

பண்டைய தமிழர்கள் யாத்து வைத்த அரும் பெரும் நூல்களை....
கரையானுக்கு தீனியாக கொடுத்தவர் சில ஆயிரம் பேர்..
ஓடுகிற ஆற்றில் விட்டு புனல் வதம் செய்தவர்கள் பல ஆயிரவர்...
எவருக்கும் கொடுக்க மாட்டேன், போ என்று பரணில் போட்டு வைத்த பாவிகள் வேறு இருந்தார்கள்.

இவ்வளவு இடையூறுகளோடு போராடி ஏடுகள் தேடி...
கிடைத்த ஏடுகளில் பிழை திருத்தி...
தகுதியற்றவைகளை புறந்தள்ளி...
இப்படியாக அரும் பாடுகள் ஆயிரம் பட்டு தான் தமிழ் தாத்தா ஆனார்  உ. வே. சாமிநாதைய்யர்...

இருந் தமிழே! உன்னால் இருந்தேன்.
இமையோர் விருந்தமிழ்தம் தந்தாலும் வேண்டேன்....
இது அவர் திரட்டிய குப்பைகளில் கிடைத்த ஒரு கோமேதகம்...

சேகரித்து
உண்மை தன்மை அறிந்து
பிழைகள் திருத்தி
பல அறிஞர்களை நாடி விளங்காத பகுதிகளில் விளக்கம் பெற்று..
ஒழுங்கு செய்து..
சொந்த காசை போட்டு பதிப்பித்து..
அம்மவோ!

இன்று நாம் படிக்கும் சங்க தமிழ் முதல் கம்ப ராமாயணம் வரை..
அவர் திரட்டி தந்த செல்வம்..
தமிழர்கள் நாம் ஒன்றும் அவருக்கு உரிய அந்த சிறப்பை கொடுத்தோமா? எனில்
இல்லை என்பதே உண்மை...

தமிழ் தாத்தா,
அவரது ஆசிரியர் #மகாவித்வான்மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
கல்லூரியில் ஐயர் அவர்களும் அவரின் மாணாக்கர்களும்..
அப்புறம் திரு. #மேலகரம்_ஸ்ரீசுப்பிரமணியதேசிகர்...

No comments:

Post a Comment

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...