Saturday, February 10, 2024

அடபோலி வாழ்க்கையடா இதுபொய் புனைந்த வேடமடா

*நாம் எப்பொழுதும் மோதலில் இருப்பதால் எதிர்ப்பைக் கட்டியெழுப்பியுள்ளோம்*. 

*போராட்டம், துன்பம், பதட்டம், முரண்பாடு, குழப்பம் இல்லாத ஒரு தருணம் கூட நமக்கு இல்லை. இந்த குழப்பத்தில் இருந்து, இந்த துக்கத்தில் இருந்து, இந்த பற்றாக்குறையில் இருந்து, இந்த வறுமையில் இருந்து தப்பிக்க, நாம் சுவர்களை எழுப்பி, இந்த சுவர்களுக்குப் பின்னால் பாதுகாப்பு எடுத்துக் கொள்கிறோம்*.

*இந்த சுவர்கள் கருத்துகள், கோட்பாடுகள்; அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவை வெறும் விளக்கங்களும் சொற்களும் மட்டுமே - அவற்றில் உண்மை இல்லை*.

*அவை பிம்பங்கள்; சின்னங்கள். சின்னங்கள் என்பது வெறும் நிழல்கள்*. 

*ஆனால், நிழலுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, ஒருவர் தன் பாதுகாப்பு அரணை விட்டு, அடைக்கலம் என்று தான் கருதுவதை விட்டு, எதிர்ப்பு சுவர்களை விட்டு வெளியேற வேண்டும். முகமூடிகள், பாசாங்குதனங்கள் இங்கு அதிகம்… அவை கூடாது*.
••••
 யார் கவிதை என தெரியல
#முகமூடி
போலி வாழ்க்கையடா இது 
பொய் புனைந்த வேடமடா  
அடகாலிப் பாண்டமதில்
காற்று வந்து சேர்ந்ததுமே
காலைக் கையை ஆட்டுகின்ற 
போலி  வாழ்க்கையடா 
இதுபொய் புனைந்த வேடமடா

முகமூடியற்ற மனிதர் இங்கில்லை
முகத்திரையற்ற பேச்சும் அவர்க்கில்லை
மறைவாக மனதிற்குள்
வக்கிரச் சிந்தனைகள்
நிறைவாக உதட்டினிலோ
சிரிப்போடு பொய்யுரைகள்
போலி வாழ்க்கையடா  
இதுபொய் புனைந்த வேடமடா

பண்பட்ட மனிதரைப் போல்
பாவனைகள் காட்டுகின்றார் ஏதோகண்கட்டு வித்தையைப் போல்
காரியமாற்றுகின்றார்



வாழ்க வளமுடன்..

#ksrpost
10-2-2024.
#வாழ்வியல் #அரசியல்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...