#துணை_பிரதமர் #துணைமுதல்வர்
#Deputy PrimeMinister
#Deputy ChiefMinister
#துணை என்பது இணையானது_அல்ல
—————————————————————
இன்றைய 25-7-2023,தினமணியில் எனது பத்தி….
(துணை முதல்வர் பதவி குறித்து அரசமைப்பு சாசனம் ஒன்றும்சொல்லவில்லை
-கே.எஸ். இராதா கிருஷ்ணன்.)
மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார்பதவியேற்றுள்ளார் என்ற செய்தி உண்மையில் அரசமைப்புச்சாசன ரீதியாக செல்லுபடியாகுமா என்ற கேள்வியைஎழுப்பியுள்ளது.
துணை முதல்வர் பதவிக்கு சட்டத்தில் இடமிருக்கிறதோஇல்லையோ, நாட்டில் தற்போது 12 மாநிலங்களில் துணைமுதல்வர்கள் உள்ளனர்: கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார், சத்தீஸ்கரில் டி.எஸ்.சிங்தியோ, பீகார் மற்றும் ஹரியானாவில்முறையே தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் துஷ்யந்த் சவுதாலா, உ.பி.யில் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், இமாச்சல பிரதேசத்தில் முகேஷ் அக்னிஹோத்ரி. வடகிழக்கில்நான்கு மாநிலங்களில் துணை முதல்வர்கள் ஆகியோர்உள்ளனர். ஆந்திரா முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன்ரெட்டிக்கு ஐந்து துணை முதல்வர்கள் உள்ளனர்.
ஒரு மாநிலத்தில் துணை முதல்வர் தேவையைஉருவாக்குகின்ற அரசியல் சூழல்கள் என்ன?
உண்மையில், துணை முதல்வர் நியமனம் என்பது ஒருவகையான அரசியல் சமரசம். கூட்டணி ஆட்சிஇருக்கும்போதோ அல்லது மிகப்பெரிய தேர்தல் வெற்றியைப்பெற்ற தலைவர் இல்லாதபோதோ, கூட்டணிக் கட்சிகளின்ஆதரவுக்கு ஈடாக வழங்கும் சலுகை துணைமுதல்வர் பதவி.அதிருப்திக் குரல்களை அடக்குவதற்காக கூட்டணிக் கட்சிஅல்லது ஆளும் கட்சியின் தலைவர் ஒருவருக்குதுணைமுதல்வர் பதவி வழங்கப்படுகிறது.
சமீபத்தில், சத்தீஸ்கர் மாநில அமைச்சர் டி.எஸ்.சிங்தியோ, முதல்வர் பூபேஷ் பாகெலுடனான கருத்து வேறுபாடுகளைகளைய, சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களேஉள்ள நிலையில், அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
சட்டம் என்ன சொல்கிறது?
அரசியலமைப்புச் சட்டத்தின் 163(1) பிரிவின்படி, "ஆளுநரின்செயல்பாடுகளை செயல்படுத்துவதில் அவருக்கு உதவவும்ஆலோசனை வழங்கவும் முதலமைச்சரைத் தலைவராகக்கொண்ட அமைச்சரவை இருக்க வேண்டும்". பிரிவு 163 அல்லது பிரிவு 164 ("அமைச்சர்கள் தொடர்பான பிறவிதிகள்"), அதன் உட்பிரிவு (1) "முதலமைச்சர் ஆளுநரால்நியமிக்கப்பட வேண்டும், மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின்ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்" என்று மட்டுமே சொல்கிறது. ஆனால் அது துணைமுதலமைச்சர் பதவி பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
நடைமுறையில், ஒரு துணை முதல்வர் கேபினட்அமைச்சருக்கு (மாநிலத்தில்) சமமான நிலையில்கருதப்படுகிறார். ஒரு கேபினட் அமைச்சருக்கு இணையானசம்பளம் மற்றும் சலுகைகளை துணை முதல்வர்அனுபவிக்கிறார்.
துணை முதல்வர் பதவி வரலாறு
இந்தியாவின் முதல் துணை முதல்வர் அவுரங்காபாத்தைச்சேர்ந்த உயர்சாதி ராஜபுத்திர தலைவரான அனுக்ரா நாராயண்சின்ஹா. மாநிலத்தின் முதல் முதல்வர் டாக்டர் ஸ்ரீகிருஷ்ணசிங்கிற்குப் (சின்ஹா) பிறகு பீகாரில் மிக முக்கியமானகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
1967-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் மீதான காங்கிரஸின்ஏகபோகப் பிடி சரியத் தொடங்கிய பிறகு தேசிய அரசியலில்மேலும் பல துணை முதல்வர்கள் முளைத்தனர்.
பீகார்
பீகார் துணை முதல்வர் அனுக்ரா நாராயண் சின்ஹா 1957 ஆம்ஆண்டில் இறக்கும் வரை அப்பதவியில் இருந்தார். 1967 ஆம்ஆண்டில் மகாமாயா பிரசாத் சின்ஹா தலைமையிலானமாநிலத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தில் கர்பூரிதாக்கூர் பீகாரின் இரண்டாவது துணை முதல்வரானார்.இதையடுத்து, ஜக்தியோ பிரசாத், ராம் ஜெய்பால் சிங் யாதவ்ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர்.
பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, 2005ல் துணைமுதல்வராக பதவியேற்று, 13 ஆண்டுகள் பதவி வகித்தார்.அவரைத் தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வியாதவ் (இரண்டு முறை), பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் மற்றும்ரேணு தேவி ஆகியோர் இருந்தனர். தற்போது துணைமுதல்வராக தேஜஸ்வி யாதவ் இருக்கிறார்.
உத்தரப் பிரதேசம்
1967 ஆம் ஆண்டில் சவுத்ரி சரண் சிங்கை முதல்வராகக்கொண்டு ஆட்சிக்கு வந்த சம்யுக்தா விதாயக் தளம் (எஸ்.வி.டி) அரசாங்கத்தில் பாரதிய ஜன சங்கத்தைச் (பி.ஜே.எஸ்) சேர்ந்தராம் பிரகாஷ் குப்தா துணை முதல்வரானார்.
காங்கிரசின் முதல்வர் சந்திர பானு குப்தா தலைமையிலானஅரசாங்கத்தில் 1969 பிப்ரவரியில் கமலாபதி திரிபாதி துணைமுதல்வராக பதவியேற்றார். பின்னர் ராம் பிரகாஷ் குப்தாமற்றும் திரிபாதி இருவரும் தாங்களாகவேமுதல்வர்களானார்கள்.
பின்னர், 1979 ஆம் ஆண்டில் முதல்வர் பதவியை ராஜினாமாசெய்ய நிர்பந்திக்கப்பட்ட ராம் நரேஷ் யாதவ், பனாரசி தாஸின்கீழ் துணை முதல்வரானார். அவரோடு நரேன் சிங் என்றமற்றொரு துணை முதல்வரும் இருந்தார்.
2017-ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில், கேசவ்மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் துணைமுதல்வர்களாக பதவியேற்றனர். 2022-ஆம் ஆண்டு யோகிஅரசாங்கத்தில் மவுரியா துணைமுதல்வர் பதவியில்தொடர்ந்தார். பிரஜேஷ் பதக் இரண்டாவது துணை முதல்வராகஇருக்கிறார்.
மத்தியப் பிரதேசம்
ஜூலை 1967 இல் ஆட்சிக்கு வந்த கோவிந்த் நாராயண் சிங்தலைமையிலான எஸ்விடி அரசாங்கத்தில் பிஜேஎஸ்கட்சியைச் சேர்ந்த வீரேந்திர குமார் சக்லேச்சா துணைமுதல்வரானார்.
பின்னர் 1980 ஆம் ஆண்டில், பானு சோலங்கி முதல்வர்அர்ஜூன் சிங்கின் அரசாங்கத்தில் துணை முதல்வரானார்.திக்விஜய் சிங் முதல்வராக இருந்தபோது சுபாஷ் யாதவ் மற்றும்ஜமுனா தேவி ஆகியோர் அப்பதவியில் இருந்தனர்.
ஹரியானா
ஹரியானாவில் துணை முதல்வர்களின் பாரம்பரியம் ஒன்றுஉள்ளது. ரோத்தக்கைச் சேர்ந்த ஜாட் தலைவரான சவுத்ரி சந்த்ராம், ராவ் பிரேந்தர் சிங் தலைமையிலான குறுகிய காலஅரசாங்கத்தில் துணைமுதல்வர் பதவியை முதன்முதலில்வகித்தார்.
முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் சந்தர் மோகன் 2005 முதல் 2008 வரை பூபிந்தர் சிங் ஹூடாவின் காங்கிரஸ்அரசாங்கத்திலும், ஜனநாயக் ஜனதா கட்சித் தலைவர்துஷ்யந்த் சவுதாலா 2019 முதல் முதல்வர் மனோகர் லால்கட்டாரின் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
பஞ்சாப்
சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் 2009 முதல் 2017 வரை தனது தந்தை பிரகாஷ் சிங் பாதலின் துணைமுதல்வராக இருந்தார். சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் ஓம்பிரகாஷ் சோனி ஆகியோர் சரண்ஜித் சிங் சானியின் ஆறு மாதஅரசாங்கத்தில் துணை முதல்வர்களாக இருந்தனர்.
தமிழ்நாடு
தற்போதைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் 2009 ஆம்ஆண்டு மே 29 ஆம் தேதி தனது தந்தையும் திமுகதலைவருமான கருணாநிதியின் துணை முதல்வராகபதவியேற்றபோது தமிழகம் தனது முதல் துணைமுதலமைச்சரைக் கண்டது. அப்போது உள்ளாட்சித் துறைஅமைச்சராக இருந்தவர் ஸ்டாலின்.
முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை சரியத்தொடங்கியதால், அவரது பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்ளவேண்டி ஸ்டாலின் துணைமுதல்வராக நியமிக்கப்பட்டார்.
துணை பிரதமர்
இந்தியா பல துணைபிரதமர்களையும் கண்டுள்ளது. சர்தார்வல்லபாய் படேல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால்நேருவுக்கு அடுத்த படியில் இருந்தார். நேருவும் படேலும்அப்போது காங்கிரஸின் மிக உயர்ந்த தலைவர்களாகஇருந்தனர், மேலும் அவர்கள் கட்சிக்குள் இரண்டு வெவ்வேறுசிந்தனை ஓட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும்பார்க்கப்பட்டனர்.
மொரார்ஜி தேசாய், சரண் சிங், சவுத்ரி தேவி லால் மற்றும் லால்கிருஷ்ண அத்வானி ஆகியோர் துணைப்பிரதமர்களாகஇருந்தனர்.
1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங்கின் அரசாங்கத்தில் தேவிலால்துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டதை எதிர்த்துநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கே.எம்.சர்மா வெர்சஸ் தேவிலால் (1990) வழக்கில், உச்சநீதிமன்றம் தேவிலாலின் நியமனத்தை உறுதி செய்தது/ “எதிர்மனுதாரர் எண் 1 (லால்) அமைச்சரவையின் மற்றஉறுப்பினர்களைப் போலவே ஒரு அமைச்சர் மட்டுமே என்றுகற்றறிந்த அட்டர்னி ஜெனரல் கூறிய தெளிவானஅறிக்கையைக் கருத்தில் கொண்டு... அவரை துணைப்பிரதமராகக் கொள்வதால் அவருக்குப் பிரதமரின்அதிகாரத்தையும் வழங்கப்படவில்லை".
மொத்தத்தில், துணை முதல்வர் பதவி குறித்துஅரசியலமைப்பில் தெளிவான விதிகள் இல்லை என்றாலும், அரசியல் சூழ்நிலைகள் துணை முதல்வர் தேவையைதீர்மானிக்கின்றன. இதுதான் இந்திய அரசில் நடைமுறையில்இருந்து வருகிறது.
இங்கிலாந்து, இஸ்ரேல், நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளில்அரசியல் சாசனம் இல்லை. இருப்பினும் அவற்றின் சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை அமைப்புகள் வழிவழியானமரபுகளாலும் மற்றும் நடைமுறைகளாலும்நிர்வகிக்கப்படுகின்றன.
இந்தியர்களாகிய நாம் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றஜனநாயகத்தைப் பின்பற்றி வருகிறோம். எனவே, துணைமுதல்வர் பதவி குறித்து அரசியலமைப்பில் தெளிவான விதிகள்இல்லை என்றாலும், துணை முதல்வர் மற்றும் துணைபிரதமரின் தேவையை அரசியல் சூழ்நிலைகள்தீர்மானிக்கின்றன. அந்த வகையில், நம் நாட்டின் சட்டம், இங்கிலாந்து மாதிரியை ஒத்திருக்கிறது.
நேரு- படேல் காலத்திலிருந்தே, 'துணை'யை நியமிக்கும்நடைமுறை நடைமுறையில் இருந்து வருகிறது.
- அரசியலார்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#K_S_Radhakrishnan
25-7-2023