Sunday, July 9, 2023

இன்றைய அரசியல் × அறம்

#இன்றையஅரசியல் × #அறம் 
———————————————
அறமற்ற தற்போதைய அரசியலின் போக்கை தங்கள் நேர்காணல் தலைகீழாக மாற்றப்போகிறது என்று கனவு காணும் நபர்கள் மற்றும் அனைவருக்கும் புரிதல் வேண்டும். இன்றைய அரசியல் தன் குடும்பம் ரீதியான நலன், மதம்,சாதி, பணம், ஓட்டு காசுக்கு விற்பனை ஆகி விட்ட நிலையில், கொள்கை சார்ந்த நேர்மையான  மக்கள் நல களப்பணி அரசியல் தேவை இல்லை ஆகிவிட்டது.

அறம் சார்ந்த தமிழ் உலகு சசிகலா போன்ற ஊழல் குற்றவாளிகளை (குற்றம் உறுதி செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற) மையமாக வைத்து அரசியல் பேசுவதும், அரசியல் நடத்துவதும் சகிக்க முடியாத வண்ணம் இருக்கிறதே? என்ற போது, 90 வயது எட்டிய அனுபவமிக்க ஒரு தமிழக தலைவர் சொன்னது, 
ஆவேசம் வந்தவரைப் போல"எந்தக் காலத்துல நீங்க இருக்கீங்க? அறமாவது மண்ணாங்கட்டியாவது, எல்லாமே காசும், பணமும், தன் குடும்பம்,அதிகாரமும் தான் இங்கே. அரசியலில் அறத்தைத் தேடுவது முட்டாள்தனமானது" என்று சொன்னார்.
ஆமாம், உண்மைதான் உத்தமர் தேர்தலில்
போட்டியிட்டலாம் அவர் படம் போட்ட பெரிய ரூபா நோட்டு வந்தால்தான் காந்தியாரே வெற்றி பெற இங்கே முடியும் என்ற நிலை இன்று….

So,
Good people will leave in droves when self promotion is the only agenda put forward.

#இன்றையரசியல்
#PoliticsToday
#voteforsales
#Dynastypolitics 
#குடும்பஅரசியல்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
9-7-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...