#*லாக்மி*#*LAKME*
#*நேரு* #*Nehru*
#*இந்திரா காந்தி* #*Indira gandhi*
#*டாடா* #*Tata*
————————————
கடந்த 1949-ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் டாடா குழுமத்திடம் இருந்து 49 சதவீத பங்குகளை அரசு கையகப்படுத்தியது. ஜே.ஆர்.டி. டாடா விமானப் போக்குவரத்து துறையை மிகவும் நேசித்தார். அவரே ஒரு உரிமம் பெற்ற விமானி ஆவார். அதனால், அரசின் தலையீட்டிற்கு எதிரான தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார்.
டாடா ஏர் இந்தியாவை ஒரு சர்வதேச பிராண்டாக மாற்ற ஜே.ஆர்.டி. டாடா விரும்பினார். ஆனால், அன்றைய அரசு நிர்வாகத்தின் கீழ் அது முடியாத ஒன்றாகிவிட்டது. ஏர் இந்தியா பங்குதாரர்களும், மற்ற பயனாளிகளும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று அவர் கருதினார். முடிவில், 1953-ம் ஆண்டு ஏர் இந்தியா நாட்டுமையாக்கப்பட்டது. இது ஜே.ஆர்.டி. டாடாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அந்த நேரத்தில், இந்தியா அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சர்வதேச அளவில் மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா கொடுத்திருந்த கடனின் அளவு உச்சம் தொட்டது. இதனால், டாலரின் மதிப்பும் அதிகரித்தது. அதனால், அந்நிய செலாவணியை கட்டுக்குள் வைத்திருக்க, அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஏனெனில், பெரும்பாலான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தியோர் பெண்களாகவே இருந்தனர்.
பிரதமரின் இல்லத்திற்கே சென்று பெண்கள் அமைப்பினர் பலரும் தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.
நேருவின் மகளான இந்திராகாந்தி அதனை செவிமடுத்தார். அவரே தனது தந்தையிடம் சென்று இதுவிஷயத்தில் ஏதாவது செய்யுமாறு வலியுறுத்தினார்.
ஒருமுறை, பிரதமர் நேரு அவரது அலுவலகத்திற்குச் செல்லும் போது வழிமறித்த பெண்கள் சிலர், இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களால் உங்களுக்கு என்ன பிரச்னை? என்று கேள்வி எழுப்பினர்.
நேருவின் தனிச் செயலாளர் எம்.ஓ.மாத்தாயிடம் இந்த பிரச்னையை கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மாத்தாய் அந்த பெண்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்திரா அதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, 'அது விஷயத்தில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?' என்றார் மாத்தாய். அதற்கு இந்திரா, அதுபோன்ற பொருட்களை இந்திய நிறுவனங்கள் எதுவும் தயாரிக்கவில்லை என்று பதில் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, டாடா நிறுவனத்தின் டெல்லி பிரதிநிதியை அணுகிய மாத்தாய், அழகுசாதன நிறுவனம் ஒன்றை தொடங்க டாடா குழுமம் பரிசீலிக்க வேண்டும் என்றும், அதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
(Picture-Jawaharlal Nehru and his daughter Indira Priyadarshini on board the British navy ship HMS Albion to watch a display of flying air craft.)
No comments:
Post a Comment