Friday, July 28, 2023

*செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக அதிமுக தொடர்ந்த கோவாரண்டோ வழக்கு!* *ஆளுநர் தரப்பு மற்றும் திமுகஅரசு தரப்பு என ஆகிய இருதரப்புக்கும் அட்வகேட்ஜெனரல் ஒருவரே வாதிடுவது வேடிக்கை* #*Highcourt of judicature,Madras*. #*quowarranto*



—————————————
சிறை கைதியாக உள்ள செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அமைச்சராக பதவி வகிக்கிறார் என நீதிமன்றம் விளக்கம் கேட்டு அவர் பதவி வகிக்க தடைவிதிக்க வேண்டும்.இந்த வழக்கு இன்று  தலைமை நீதிபதி அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாம் என்பதற்கான தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார்.

சிறையிலிருப்பவர் அமைச்சராக நீடிக்க முடியுமா? என்பது குறித்த முதல் வழக்கு இது. அவர் அமைச்சராக சம்பளம் மட்டுமல்ல பல சலுகைகளையும்  அலவன்ஸ்களையும் பெறுகிறார். துறையே இல்லாத அமைச்சருக்கு எதற்காக பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக செலவிட வேண்டும்? அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என  நீதிமன்றம் தலையிடலாம் என்பதற்கு ஏராளமான முன்உதாரண தீர்ப்புகள் உள்ளது.

ஆளுநர் தரப்பு மற்றும் திமுக அரசு தரப்பு என ஆகிய இருதரப்புக்கும்  அட்வகேட்ஜெனரல் ஒருவரே வாதிடுவது வேடிக்கை. சட்டமுரண்..

முல்லை பெரியாறு, செண்பகவல்லி அணைக்கட்டு மற்றும் நதி நீர் வழக்கில்;
எனது வழக்கில் தமிழக அரசு- கேரள அரசுக்கு இடையே சிக்கல். 1984 இரு அரசுக்கு தமிழக அட்வகேட்ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி ஆஜார் ஆன போது சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி நயினார்
சுந்தரம் இதை ஏற்றுகொள்ள முடியாது என
உத்தரவுவிட்டார். பின் நிலைமை மறியது.
@mkstalin @CMOTamilnadu 

#செந்தில்பாலாஜி_கோவாரண்டோ
#Highcourt of judicature Madras.
#*quowarranto*

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-7-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...