Sunday, July 30, 2023

கவிஞர் நிர்மலா சுரேஷ் #நடிகை ஶ்ரீவித்யா

#கவிஞர்நிர்மலாசுரேஷ் 
#நடிகை ஶ்ரீவித்யா 






—————————————————————
இன்றைய தினமணியில், தமிழ்மணி கலாரசிகன் பகுதியில் ஆசிரியர்,  நண்பர் கே. வைத்தியநாதன் எனது நீண்டகால நண்பர்  கவிஞர் நிர்மலா சுரேஷின் கவிதை
பற்றி சிலேகித்து இருந்தார்.

நிமிர்ந்த தோற்றமும் - 
நேர்கொண்ட பார்வையும் - 
திமிர்ந்த கல்வித்தெரிவும் 
கொண்ட நிர்மலா சென்னைக்கு (சூன் 18, 1950 - மே 27, 2021)  வந்ததும் கம்பர் கழக விழாவில் தான் முதலில் பேசினார் .பட்டிமண்டபக் கொடி பட்டொளி வீசிப் பறந்த அந்த ஆண்டுகளில் அவர் பங்கு கொண்டார் .ஹைகூ கவிதையை முதலில் ஆராய்ந்த புலமையாளர் .மொழியும் வாழ்வும் அவர் எழுதிய அரிய நூலாகும் . திருச்சி ஹோலி கிராசு கல்லூரியில் பயின்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நிர்மலா சுரேஷை் 1979 முதல் சென்னை கேந்திர தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் 

பேரறிஞர் அண்ணாவின் திருச்சி நண்பராகப் பேராசிரியர் இருதயராஜ் திகழ்ந்தார் ,அவர் திருமகளாரான   நிர்மலா சுரேஷுக்கு இயல்பான இனப்பற்றும் எழுச்சியும் மிளிர்ந்ததால் சென்னைக்கு வந்து  அரசியலில் தலைப்பட்டார் . ஈழப்பிரச்சனையில் என்னோடு பயணித்தவர்.
பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தேன். திருவான்மீயூரில் 17 வது கிழக்கு தெரு என் வீட்டு அருகே சவூத் அவின்யூ அடுக்கு மாடி இல்லத்தில் இருந்தார். பின்இசிஆருக்கு சென்றார்.

மயிலை தொகுதியில் 1991 சட்டமன்றத்தேர்தலிலும் திமுக சார்பில் நின்றார் . வென்றாரில்லை .வாழ்வில் அவர் தொட்ட துறைகளில்   எழுவதும் விழுவதுமாக இருந்தார் !

பிறகு கனடாவில் குடியுரிமை பெற்றுச் சென்றார் .கனடாவில்  நிர்மலா சுரேஷ் மறைந்தார். மருத்துவ உதவிகளை ஜெயலலிதா செய்தார்.

எனக்கு பிரச்சனைகளை வரும்போது ஜெபம்
செய்து என்னை ஆதரிப்பார். இவையாவும் சுகமான சுமைகள் என தைரியம்  வார்த்தைகளில்  அன்பு காட்டுவார். எனது இரு நட்பு தோழிகள் நடிகை ஶ்ரீவித்யா, கவிஞர் நிர்மலா சுரேஷ் இன்னு வாழ்ந்து இருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் சென்று விட்டார்கள் என்ற துயரம் இப்பவும் நெஞ்சில்
உள்ளது.

#நடிகைஶ்ரீவித்யா
 #கவிஞர்_நிர்மலாசுரேஷ் 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-7-2023

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...