—————————————
ஜூலை 18: தமிழ்நாடு நாள். சரி , மகிழ்ச்சி.
ஆனா;
’’நவம்பர் 1, தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று அறிவித்து உள்ளது மிக்க மகிழ்ச்சிதான். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைய எல்லை களோடு அமைந்த தமிழகம் 1956 நவம்பர் 1 ஆம் தேதி சென்னை மாகாணமாக என்று அமைந்தது. மெட்ராஸ் ராஜ்தானி (madras presidency) துவக்கத்தில் அழைக்கப்பட்டது. ஆந்திரா, ஒரிசா எல்லை வரை தெற்கே திருநெல்வேலி மாவட்டம் வரை அமைந்தத்து அன்றைக்கு அமைந்திருந்தது மெட்ராஸ் ராஜ்தானி. மொழிவாரியாக மாநிலங்கள் அதன் எல்லைகளை வரையறுக்க அன்றைய பிரதமர் நேரு குழு ஒன்றை அமைத்தார். அதன் அறிக்கைகளை பெற்று கேரளத்தில் தேவிகுளம், பீர்மேடு போன்ற சில பகுதிகளும், இன்றைய கர்நாடகத்தில் கொல்லேகால் போன்ற சில பகுதிகளும், ஆந்திரா வில் திருப்பதி, சித்தூர், நெல்லூர், காளஹஸ்தி போன்ற பகுதிகளும் நாம் இழந்து இன்றைய எல்லைகள் அமைந்த தமிழகம் நவம்பர் 1 1956ல் அமைந்தது.
தியாகசீலர் ம.பொ.சி., மங்களக்கிழார், விநாயகம் போன்றோர் பலரின் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். தென்முனை குமரியை பி.எஸ்.மணி, நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக் போன்றோருடைய தியாகமும், மார்த்தாண்டம் புதுக்கடையில் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 11 தியாகிகளின் ரத்தத்தில் தமிழகத்தோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத் தால் செங்கோட்டை கிடைத்தது. ஆனால் நம்மோடு இணையவேண்டிய தென்மலை,நெடு மாங்காடு, நெய்யாற்றங்கரை ஆகியப் பகுதிகளை தர மறுத்தனர். தமிழர்கள் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு சென்றுவிட்டன. 1956 நவம்பர் 1ம் தேதி உதயமான கேரளம் “நவ கேரளம்” என்று கொண்டாடுகிறது.
கர்நாடகம் “அகண்ட கர்நாடகம்” என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் “விசால ஆந்திரம்” என்று ராஜ்ய விழாவாக கொண்டாடுகின்றது. மகாராஷ்டிரம் “சம்யுக்த மகாராஷ்டிரம்”, குஜராத் “மகா குஜராத்” என்று நவம்பர் 1ம் தேதியை மகிழ்ச்சிப் பெறுக்கோடு வரவேற்கின்றது. ஆனால் நாம் இந்நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதா? அல்லது இழந்த பகுதிகளுக்காக வருந்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? என்று சொல்ல முடியவில்லை.
#TamilNaduDay | #TamilNadu
#தமிழகம்
#KSR_Post
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்.
18-7-2023
No comments:
Post a Comment