*சமீப காலமாக, அமெரிக்காவிலும் கனடாவிலும் காலிஸ்தானுக்கு ஆதரவாகச் சிலர் தங்கள் சுய விளம்பரம் பெறவே எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்*.
—————————————
சமீப காலமாக, அமெரிக்காவிலும் கனடாவிலும் காலிஸ்தானுக்கு ஆதரவாகச் சீக்கியர்கள் நடத்தும் போராட்டங்கள் கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது. அத்தகைய இயக்கம் தேவையற்றது மற்றும் உறுதியான அடித்தளம் இல்லை என்பது தான் எனது கருத்து. இதற்குப் பதிலடியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் சான்பிரான்சிஸ்கோவில் பேரணி நடத்தியுள்ளனர்.
நான் ஏன் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறேன் ஆனால் காலிஸ்தானை ஆதரிக்கவில்லை என்று எனது நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இவை இரண்டும் வெவ்வேறு பிரச்சினைகள் என்பதில் பதில் இருக்கிறது. இந்தியாவில் சீக்கியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படவில்லை. ஒவ்வொரு சூழ்நிலையின் சூழலையும் நுணுக்கங்களையும் புரிந்துகொள்வது முக்கியம். தமிழ் ஈழத்திற்கான ஆதரவு நியாயமானதாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் ஈழ தமிழர்களைப் போலப் பிரச்சனைகளை எதிர்கொள்ளாததால் காலிஸ்தான் இயக்கத்திற்கு வலுவான ஏற்றுக் கொள்ளும் படியான காரணங்கள் இல்லை என்பதே நிதர்சனம். சீக்கியர்கள் எல்லோரும் இப்படி
தேவையற்ற இந்த பிரச்சனையை கிளப்பவில்லை. சீக்கியர்கள் சகல உரிமைகளை கொண்ட மக்களாக உள்ளனர் . திட்டமிட்டு சிலர் தங்களின் சுய விளம்பரம் பெறவே இதை எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
In recent times, protests led by Sikhs advocating for Khalistan have gained attention in America and Canada. However, it is important to recognize that such a movement is unnecessary and lacks a solid foundation. In response, individuals of Indian origin organized a rally in San Francisco to provide a fitting reply. A few of my friends questioned why I support Tamil Elam but not Khalistan?
The answer lies in the fact that these are two distinct issues. Unlike the Tamil Elam movement, Sikhs in India have not been treated as second-grade citizens. It is crucial to understand the context and nuances of each situation. While support for Tamil Elam may stem from legitimate concerns, the Khalistan movement lacks a strong basis as Sikhs in India do not face systemic problems. They are equals enjoying all due rights here.
#கேஎஸ்ஆர்பேஸ்ட்
#ksrpost
16-7-2023.
No comments:
Post a Comment