Friday, July 7, 2023

#மதுரை வைத்தியநாதஐயர் #மதுரை ஆலயபிரவேசம்

ஜூலை, 1939 ஆம் ஆண்டு 8ஆம் தேதியில் அப்போது கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த  பட்டியல் இன சகோதரர்கள் நாடார் சகோதரர்களுடன்  பக்தி உணர்வோடு மதுரை மீனாட்சி அம்மன்-சொக்கநாதர் ஆலயத்தில் மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையில் பிரவேசித்தனர்.

 கடும் எதிர்ப்பை மீறி மதுரை வைத்தியநாத ஐயர் நடத்த,
ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ஸ்ரீ ராஜாஜி, ஸ்ரீ வைத்தியநாதஐயர், ஸ்ரீ என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். 










அதற்கு தேவர் அவர்கள் "என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள், மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலயபிரவேசம் செய்யும் போது அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் மக்கள் தருவார்கள். அன்னை மீனாட்சியை வணங்கி வர அவர்களது பாதுகாப்புக்கு நான் உதவியும்,உத்தரவாதம் தருகிறேன் என்றார்.ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு….

ஆங்கில ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் போக மறுப்பு இருந்தது.சட்டத்தின் படி
தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவிலைத் திறந்துவிட்டால், இந்து சமய அறநிலையச் சட்டங்களின்படி கோவில் அலுவலர்களும், அர்ச்சகர்களும், அறங்காவலர்களும், பிறரும் தண்டிக்கப்படுவார்கள் என அன்றைய நிலை….

மதுரை மீனாட்சி ஆலயப்பிரவேசம் பற்றி பேசும் பொழுது வைத்தியநாத அய்யர் பற்றி மட்டும் பேசுகிறோம் . அப்பொழுது மீனாட்சி அம்மன் கோயிலின் நிர்வாக அதிகாரியாக  இருந்த ஆர். சேஷாச்சலம் நாயுடு என்ற ஆர்.எஸ். நாயுடு கோயிலுக்குள் அனைத்து ஏற்பாடுகள் செய்து அனைவரும் ஆலயத்திற்குள் தரிசனம் செய்ய ஏற்பட்டு செய்துள்ளார் .



இராஜாஜி அவர்கள் அன்றைய‌ ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபுவிடம் கூறி 1935-ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் 88வது பிரிவின்படி அவசரப் சட்டத்தை வெளியிடச் செய்தார். 
அதன்படி தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபடலாம் என…..

அதன் பின்பே தமிழகமெங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைவு மற்றும் வழிபாட்டு உரிமை எனும் நிலை வந்தது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள்  திரு வைத்தியநாத ஐயர் தலைமையில். ஸ்ரீ கக்கன்ஜி. ஸ்ரீ எல்.என். கோபாலசாமி, ஸ்ரீ முருகானந்தம், ஸ்ரீமுத்து, ஸ்ரீவி.எஸ்.சின்னையா, ஸ்ரீ வி.ஆர். பூவலிங்கம் முதலிய  தலைவர்களும், விருதுநகர்  ஸ்ரீ எஸ்.எஸ். சண்முக நாடார் என்ற நாடார் மற்றும் சிலரும்  கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டனர். 

 இந்த நிகழ்வை குறித்து 22-7-1939 ஹரிஜன் இதழில் மகாத்மா காந்தி........

இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்களின் முயற்சி. இதில் அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் அவரது சக தொண்டர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

 8-7-1939 நம் சுதந்திரப் போராட்டத்தில் மறக்க முடியாத நாள். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் இச்சம்பவம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. சுதந்திரப் போராட்ட வீரர் வைத்தியநாத ஐயரை போற்றியது. 



No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...