—————————————
இதுவரை 26 மாத திமுக ஆட்சியில்சுமார் 20 பேர் காவல் நிலையங்களில்சந்தேகமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தாண்டவன்குளத்தைச் சேர்ந்த
சத்தியவாணன் மரணம் ; (24.8.2021)
முதுகுளத்தூர் நீர்கோழியேந்தல் மணிகண்டன் காவல் மரணம்.
(6.10.2021)
தருமபுரி,அரூர் வட்டம், கோட்டப்பட்டி மாற்றுத் திறனாளி பிரபாகரன்
மரணம்; (12.1.2022)
திருநெல்வேலி, மேலப்பாளையம், ஆமீன்புரம் சுலைமான் காவல் மரணம்(5.2.2022)
சென்னை, பட்டினப்பாக்கம் விக்னேஷ் மரணம்; (10.42022)
திருவண்ணாமலை, தட்டரணை தங்கமணி மரணம்; (26.4.2022)
சென்னை கொடுங்கையூர், அலமாதி ராஜசேகர் மரணம்; (13.6.2022) -
சென்னை, ஆலப்பாக்கம் பாபு குறைவால் மரணம் (15.12.2022)
தொடர்ந்து, 15.07.2023 அன்று, மதுரை மாவட்டம், எம் கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். விசாரணைக்குப் பிறகு அதிகாலை வீடு திரும்பியவர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். போலீசார் தாக்கியதால்தான் வேடன் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள். இப்படி பட்டியல் உண்டு.
கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை முதலில், சி.பி.சி.ஐ.டி விசாரித்து, தற்போது சி.பி.ஐ விசாரித்தும வருகிறது. இதற்கு ஓடி சென்று குரல் கொடுத்த போராளிகள், திமுவினர் இன்று எங்கே?
#custodialdeaths_tamilnadu
#காவல்மரணங்கள்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
20-7-2023.
No comments:
Post a Comment