Friday, August 21, 2026

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

 தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

We are eagerly awaiting whoever comes to the leader's house, towards the leader. #nainarnagendran #tamilnadubjp

அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்ற இயற்பெயருடைய மகான் அரவிந்தரின் 154வது பிறந்தநாள் இன்று .

 அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்ற இயற்பெயருடைய மகான் அரவிந்தரின் 154வது பிறந்தநாள் இன்று .இந்தியாவுக்கு ஆக-15ல் சுதந்திரம் கிடைக்கும் என முன்பே கணித்து கூறியவர்.




சரித்திரத்தை கொண்டாடும் நிகழ்வில் முன்னுரிமை ! நல்ல மாநிலம்!!

 சரித்திரத்தை கொண்டாடும் நிகழ்வில் முன்னுரிமை ! நல்ல மாநிலம்!!




இந்திய தேசிய சுதந்திர நாள் விடுதலை நாளினைக் கொண்டாடும் வகையில் எனது வீட்டில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய போது....

 இந்திய தேசிய சுதந்திர நாள் விடுதலை நாளினைக் கொண்டாடும் வகையில் எனது வீட்டில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய போது....

உலகமெல்லாம் வாழும் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்! On the occasion of celebrating Indian Independence Day, when I hoisted the Indian national flag at my home.... Warm Independence Day wishes to Indians all over the world!




Today is our Indian Independence Day!

 Today is our Indian Independence Day!

On this same day, when I read the English Hindu newspaper (Madras edition)that was released on 15-8-1947 this morning... இன்று நமது இந்திய விடுதல் நாள்! இதே நாளில் , 15-8-1947 இல் வெளியான ஆங்கில இந்து நாளேட்டை (சென்னை பதிப்பு) இன்று காலை படித்து போது….. #lndependeceday #august15 #indiaindependence #ksrpost #ksradhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் 15-8-2026

ஜோசப் விஜய் அரசுக்கு @CMOTamilnadu தகை சால் தமிழர் விருதுக்கு திரு பழ. நெடுமாறன் அவர்கள் கண்ணில் பட வில்லையா⁉️

 ஜோசப் விஜய் அரசுக்கு

தகை சால் தமிழர் விருதுக்கு திரு பழ. நெடுமாறன் அவர்கள் கண்ணில் பட வில்லையா⁉️

உத்தமர் ஒருவர்!

உத்தமர் ஒருவர்!

மோடியை விமர்சனம் செய்ய தகுதி வேணும் பப்பு கிட்ட யார்னா சொல்லி புரிய வைங்கடா!





இன்னும் இப்படியான படங்கள் ⁉️

 இன்னும் இப்படியான படங்கள் ⁉️




"உன்னை சந்தித்தது ஒரு சாதாரண தருணம்...

 "உன்னை சந்தித்தது ஒரு சாதாரண தருணம்...

ஆனால், உன்னை நினைத்துக்கொண்டிருப்பது என் வாழ்க்கையின் அழகான பழக்கமாகிவிட்டது. சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் வருவதில்லை... நம் வாழ்க்கையாகவே மாறிவிடுகிறார்கள்." ✨

ஆண்டாள் தமிழை ஆண்டாள்!

 ஆண்டாள் தமிழை ஆண்டாள்!

********************************** உலகத்தில் எல்லாமே இறைவனுடைய இயக்கம். ஆண் – பெண் உறவு இதற்கு விதிவிலக்கல்ல. அந்தச் சுவை மிகைப்படப் போயினும் தவறில்லை. அது ஞானியை இறைவனிடமும், நல்ல மனிதனை மனைவியிடமும் சேர்க்கிறது. அந்த வகையில் பிரபந்தம் காட்டும் திரு மொழிகள் அளவிட முடியாத உணர்ச்சிக் களஞ்சியங்கள். நாச்சியார் திருமொழியில் பல தமிழ் வார்த்தைகள் எனக்கு வியப்பளித்தன. ஆண்டாள் என்றொரு பெண்பாற் பிறப்பு இல்லை என்றும், அது பெரியாழ்வார் தமக்கே கற்பித்துக்கொண்ட பெண்மை என்றும் சிலர் கூறுவர். ஆனால், வடக்கே ஒரு மீராபாயை பார்க்கும் தமிழனுக்கு தெற்கே ஓர் ஆண்டாளும் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வரும். அது எப்படியாயினும், நமக்கு கிடைத்திருப்பது ஓர் அரிய கலைச் செல்வம். நானும் என்னை காதலியாக்கிக்கொண்டு, கண்ணனை நினைத்து உருகியிருக்கிறேன். கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல… -என்றும், கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே என்றும், இசைக்காக ஏதேதோ புலம்பியிருக்கிறேன். ஆனால், `இசை மங்கலம்’, `சொல் மங்கலம்’. `பொருள் மங்கலத்’தோடு புதுத் தமிழ் சொற்களை தூக்கிப் போட்டு பந்தாடியிருக்கும் நாச்சியார் திருமொழி, எனது சிறுமையை எண்ணி எண்ணி என்னை வெட்கப்படவே வைத்தது. அந்தச் சீர்மல்கும் ஆயர்பாடிச் செல்வச் சிறுமியரைக் கூர்வேல் கொடுந்தொழிலனிடம் – நந்தகோபாலன் குமரனிடம் – ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கத்திடம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தானிடம் அழைத்துச் செல்வது, தமிழில் அற்புதமான பாவைக் கூத்து. `நாம் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்’ என்கிறார் நாச்சியார். `அவன் ஓங்கி உலகளந்த உத்தமன்.’ ஆகா; எவ்வளவு அற்புதமான உருவகம்? அங்கு நீங்காத செல்வமாக நிற்பன எவை தெரியுமா? வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற்பெரும் பசுக்களாம்! பசுவுக்கு `வள்ளல்’என்ற பட்டத்தை, பக்தியின்றி எது சூட்டும்? ஓர் உருவகத்தை கேளுங்கள். அதுவும் விஞ்ஞான உண்மை. மழை பெய்வதை நாச்சியார் கூறுகிறார்: ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்துப் பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய்! … கடலிலே புகுந்து நீரை எடுத்து, ஊழி முதல்வன் உருவம் போல் உடம்பு கருத்து மேகமாகி, அந்தப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, சங்குபோல் முழங்கி, வில்லிலிருந்து பொழிந்த அம்பு மழைபோல் மழை பெய்யக் கோருகிறார் நாச்சியார். அந்தக் கண்ணன், மாயன், வடமதுரை மைந்தன்! `வீங்கு நீர் இலங்கை’என்றானே கம்பன், இங்கே நாச்சியார் `தூயபெருநீர் யமுனைத் துறைவன்’என்கிறார். தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனே- எவ்வளவு புதிய சொல்லாட்சி! அதோ வருகிறான் கண்ணன். தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமன் மகளே, மணிக்கதவம் தாள் திறவாய்; மாமீர்! ஏ, மாமிமார்களே; அவளை எழுப்பீரோ! நாற்றத் துழாய்முடி நாராயணன் வந்திருக்கிறான்! நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியன் அவன். குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! சிற்றாதே – நீ அசையாதே, பேசாதே, நீ செல்லப் பெண்டாட்டி! வார்த்தை வந்து விழுகிறதே நாச்சியாருக்கு! புள்ளினம் புலம்புகிறது. நீ குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் பள்ளிக்கிடத்தியோ! அடப்பாவி! உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்புதடி! எல்லே! (இது பாண்டி நாட்டு வழக்கு) இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! ஐயோ, இதென்ன; கண்ணனும் தூங்குகிறானோ? அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்! அம்மா, யசோதா! கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம்பெருமாட்டி! உன் மகனுக்கு கொஞ்சம் சொல்லம்மா. ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனல்லவா! அவனை அருத்தித்து வந்திருக்கிறோம். ஏ, கண்ணா! ராசலீலை மறந்தாயா! குத்துவிளக்கெரியக் கோட்டிக்கால் கட்டிலின் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி, கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்! அடியம்மா, நப்பின்னை! நீ உன் மணவாளனை விட்டு எந்த நேரமும் எழுந்துவர மாட்டாயா? எந்த நேரமும் பிரிவு பொறுக்க மாட்டாயா? நல்லது! இது தத்துவமல்ல; தகவுடையதுதான்! ஏ, கப்பல் (நடுக்கம்) தவிர்க்கும் கலியே! வெப்பம் கொடுக்கும் விமலா! நாங்கள் ஆற்றாது வந்துன் அடி பணிகின்றோம். எழுந்து வா! கிண்கிணியாய்! செய்ய தாமரை பூப்போல உனது செங்கண் சிறுகச் சிறுக எங்கள் மேல் விழிக்காதோ! அன்று இந்த உலகை அளந்தாயே! சென்று தென்னிலங்கை வென்றாயே!

கன்றை எறிந்தாயே! சகடம் உதைத்தாயே! குன்றை குடையாக எடுத்தாயே!

 கன்றை எறிந்தாயே! சகடம் உதைத்தாயே! குன்றை குடையாக எடுத்தாயே!

மாலே மணிவண்ணா! கோல விளக்கே, கொடியே, விதானமே! ஆலிலையில் துயில் கொள்ளும் ஐயா! கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! எழுந்துவர மாட்டாயா? சூடகமும், தோள்வளையும், தோடும், செவிப்பூவும், பாடகமும் மற்றும் பல்வேறு நகைகளும் நாம் அணிவோம். ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிந்துவரக் கூடியிருந்து உண்போம். ஆகா! சோற்றையே மூடுகிற அளவுக்கு நெய்யாம்! அதை அள்ளி உண்ணும்போதும் முழங்கை வழியாக வழியுமாம்! மேலும் சொல்கிறார் நாச்சியார்: குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! அறியாத பிள்ளைகள் அழைக்கிறோம்; கோபப்படாதே! வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா, எழுந்து வா! வா வா! நாச்சியாருக்குப் பெருக்கெடுத்த காதல் நமக்கும் பெருக்கெடுக்கிறது. அவர் காதல் மட்டுமா கொண்டார்; கடிமணமும் செய்து பார்த்தார். வாரணம் வந்ததாம்; பூரண பொற்குடம் வந்ததாம்; தோரணம் நாட்டினார்களாம்; வாழை, கமுகு தொங்கவிட்ட பந்தலாம்; இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருக்கிறார்களாம்; நாச்சியார் மந்திரக் கோடிப் பட்டு உடுத்தி வந்தாராம்; மாயவன் மணமாலை சூட்டினானாம்! நான்கு திசையிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்தார்களாம்; பார்ப்பனப் பெரியவர்கள் பல்லாண்டு பாடினார்களாம். கதிர் போன்று ஒளிவிடும் தீபத்தை, கலசத்தோடு ஏந்தியபடி, சதிரிள மங்கையர் வந்து எதிர்கொண்டார்களாம்; மத்தளம் கொட்டினார்களாம்; சங்குகள் வரிசையாக நின்று ஊதினவாம். முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பந்தலில், மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றினானாம்! அவன் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணையல்லவா! அவன் நன்மையுடையவன் அல்லவா! ஆகவே, செம்மையுடைய திருக்கையால் பாதம் பற்றி அம்மி மிதிக்க வைத்தானாம்! அவன் எப்படி? ஏ, வெண் சங்கே; நீ சொல்! அவன் வாய் இதழில் கற்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ? அந்தத் திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? ஏ, சங்கே, பெரும் சங்கே! வலம்புரிச் சங்கே! பாஞ்ச சன்னியமே! அவன் இதழ்ச் சுவையை எனக்குச் சொல்ல மாட்டாயா! ஏ, மேகங்காள்! விண்ணில் மேலாப்பு விரித்தாற் போன்ற மேகங்காள்! மாமுத்த நீர் சொரியும் மாமுகில்காள்! களங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள்! மதயானை போலெழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வைத்து வாழும் மேகங்காள்! எனக்குப் பதியாகி, என் கதியாக அவன் கருதவில்லையா! ஒரு பெண் கொடியை வதைசெய்தால், இவ்வைகயகத்தார் மதிப்பாரா? நாச்சியார் துடிக்கிறார்; நாமும் துடிக்கிறோம்! நாச்சியார் உருகுகிறார்; நாமும் உருகுகிறோம்! நாச்சியார் கெஞ்சுகிறார்; நாமும் கெஞ்சுகிறோம்! நாச்சியார் கொஞ்சுகிறார்; தமிழும் கொஞ்சுகிறது! கவியரசர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" - இரண்டாம் பாகத்திலிருந்து..

தேசிய கீதத்தை அவமதித்த திரு. ராகுல் காந்திக்குக் கண்டனம்!

 தேசிய கீதத்தை அவமதித்த திரு. ராகுல் காந்திக்குக் கண்டனம்!

What the Congress could not accomplish in 60 years, the BJP has achieved in just 11. If that makes me an “andhbhakt,” then so be it.

 What the Congress could not accomplish in 60 years, the BJP has achieved in just 11. If that makes me an “andhbhakt,” then so be it.

A special thanks to HM Ji for his fearless leadership... What? Beautiful. Salute to these wowwn. Great initiative from the govt.

Embassy of Italy issued an official statement


about Rahul Gandhi ‘s misconduct இத்தாலி நாட்டு தூதரகம் ராகுலுக்கு கண்டனம்!



குமரி மாவட்டம்,

குமரி மாவட்டம், தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பே மது அருந்தியாதாக தகவல் வேதனை தருகிறது . 
கடந்த மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் பெற்றோர்களிடத்திலும் கல்வியாளர்களிடமும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கருமம்- கண்டாராவி… மாநில அரசு என்ன செய்கிறது ⁉️

வாழ்க்கை என்பது ஒரு கணிதச் சமன்பாடு.

 வாழ்க்கை என்பது ஒரு கணிதச் சமன்பாடு. அதிகபட்சப் பலனைப் பெற, எதிர்மறையானவற்றை நேர்மறையாக மாற்றுவது எப்படி என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஸ்நேகத்திற்கு என்னவென்று பெயர்..?

 ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஸ்நேகத்திற்கு என்னவென்று பெயர்..? முழு வேகத்தில் இயங்க அது ஏன் தயங்குகிறது..? ஒரு கூச்சமும் எட்டி நிற்கலாம் இயல்பில்லாத மரியாதையும் இவை தொடர்பான குழப்பமும் ஏன் வருகிறது..? ஆணும் பெண்ணும் ஸ்நேகம் எனக் கொண்டால் இடைவெளி ஏன் வருகிறது, ஆணூக்கொரு வேலி,பெண்ணுக்கொரு வேலி போட்டு இடையே இரண்டு கைகளையும் நீளம் நிலம் விட்டு, கண்ணாலும், சொல்லாலும் நட்பு பரிமாறி ஏதேனும் குறை வைத்து அந்த குறை நீக்க முடியாது உள்ளே புழுங்கி நட்பு விந்தி, விந்தி நடக்கும். நோய் பட்ட குதிரை போல் நிற்கும். அனேகமாய் எல்லா ஆண் பெண் நட்பும் உடைந்த மண்சுவா், கிழிந்த குடை, சிடுக்குத் தலைமுடி..

#ஜனநாயகம்_எங்கேபோகிறது

 #ஜனநாயகம்_எங்கேபோகிறது

"#Quovadis" ——————————————————— நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் அரைகுறை ஆட்கள் விவரம் தெரியாதவர்கள் வரலாறு தெரியாதவர்கள் நாடாளுமன்றத்தில், சட்ட மன்றத்தில் பேசுகிற பேச்சால் எந்த நடைமுறையும் சாத்தியம் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. தென்னாட்டுக்கு ஏதோ பிரதமர் பதவியே கிடைக்கவில்லை என்பது மாதிரிப் பிதற்றுகிறார்கள். நரசிம்ம ராவ் யார்?தேவகவுடா யார்?கர்நாடகத்துக்காரர்! அது போக ஜி.கருப்பையா மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பைத் தடுத்தது யார்? வாய்ப்பு இருந்தும் கிங்மேக்கர் என்று சொல்லக்கூடிய காமராஜர் தான் இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கினார்! அவர் நினைத்திருந்தால் பிரதமராகியிருக்க முடியாதா? அவர் தென் மாநிலத்துக்காரர் இல்லையா? அன்றைக்கு அவரின் செல்வாக்கு காங்கிரசில் எவ்வளவு இருந்தது என்று யாருக்கும் தெரியாதா? அவர் நினைத்திருந்தால் நிஜலிங்கப்பாவையோ, நீலம் சஞ்சிவி ரெட்டியோ , சி சுப்பிரமணியத்தையோ கொண்டு வந்திருக்க முடியாதா? அது மட்டுமல்லாமல் கரப்பான் பூச்சிக்காரர்களும் தென் மாநிலத்தவர்களும் நீட் வேண்டாம் என்று மறுக்கிறார்கள். நீட்டுக்கான அனுமதியை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்து குடியரசுத் தலைவர் அனுமதி பெற்றுத்தான் அமல்படுத்தப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்! எதையும் புரியாமல் பேசக்கூடாது சட்ட விதிமுறைகள் இருக்கின்றன அதற்கான ஒழுங்குகள் இருக்கின்றன! மனம் போன போக்கில் அவற்றை விமர்சித்து விட்டு அல்லது பொழுதுபோக்காக போராட்டம் நடத்தி விட்டுப் பொது அமைதியை குலைத்ததைத் தவிர இவர்கள் வேறு என்ன செய்தார்கள்? இம் மாதிரியான போராட்டங்கள் எப்பொழுதும் வரலாற்றில் வெற்றி பெற்றதாகவே இல்லை! தூண்டப்பட்டதாகவும் தற்காலிகமானதாகவும் பின்னணிச் சதிகள் நிரம்பியதாகவும் தான் இருக்கிறது! இந்தப் போராட்டத்தை மதித்து பிரதமர் மோடி அவர்கள் இவர்கள் அனைவரும் நமது பிள்ளைகள்! அவர்களுக்குச் சிரமம் வந்துவிடக் கூடாது! என்று இறங்கி வந்து அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து அதற்கான ஏற்பாடுகளைக் குறிப்பாக நீட் தேர்வை முறைப்படுத்துவது குறித்து அதற்கான கறார் விதிகளைக் கொண்டு வரத் திட்டமிட்டு இருக்கிறார்! இனிமேல் நீட்கேள்வித்தாள் கணினி முறையில் தான் நடக்கும் என்று திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதெல்லாம் அறிந்து அறிவார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும்!மோடியைத் திட்டுவது அவர்கள் அம்மா பற்றிப்போகிற போக்கில் பேசுவதெல்லாம் பொறுப்பற்றவர்களின் அடாவடித்தனமான செயல்! தனது பேச்சில் மோடி மிகத் தெளிவாகச் சொல்கிறார் நான் இதையெல்லாம் கடந்து போகத்தான் வேண்டும்! இதற்கு அப்பாலும் சர்வதேச நன்மதிப்புகளைப் பெறவும் இந்தியப் பொருளாதாரத்தின் சுயநிர்ணய உரிமைகளைத் தக்க வைக்கவும் அயராது நான் பாடுபட வேண்டி இருக்கிறது! என்று பக்குவமாகச் சொல்லித்தான் செயல்படுகிறார்! எருதுநோய் காக்கைகளுக்குத் தெரியுமா என்ன ? எதோ பாராளுமன்றத்திற்கு வந்துவிட்டு மேலும் கீழும் பார்த்துவிட்டு அவர்கள் உணவைத் தின்றுவிட்டு வீடுகளுக்குப்போய்ச் சேர்ந்து விடுகிறார்கள். அன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில் லோகியாவோ மசானி பிலுமோடி வாஜ்பாய் பேசினாலோ அல்லது அவர்கள் பேசினாலோ எந்தக் கண்ணியக் குறைவுமில்லாமல் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததுதான் வரலாறு.! அதையெல்லாம் அன்று காங்கிரஸ் ரசித்துக் கேட்டது! இப்படி எல்லாம் எதையாவது பேசிவிட்டு யாரும் ஓடிப் போகவில்லை!. பதவியில் இருப்பவர்களைப் போடா வாடா என்று பேசுவது! நேற்று சட்டமன்றத்தில் ஒரு பெண் உறுப்பினர் சபாநாயகரிடம் மன்மத வணக்கம் என்றெல்லாம் அபத்தமாகப் பேசுகிறார்! எந்தச் சபை நாகரிகமும் இல்லாத இந்தக் கூட்டங்களால் நாட்டுக்கு என்ன நன்மை விளையும்! ஏதோ 100 நாட்கள் வேலைக்கு போகிறவர்கள் போல சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் போய் வரும் இவர்களால் என்ன உருப்படியான காரியம் நடக்கப் போகிறது. இவர்களால் நாட்டின் எதிர்காலம் கவலைக்குரியதாகவே மாறி வருகிறது. மத வாதம், தமிழில் பேச தெரியா தமிழக நிதி அமைச்சர்….என்ற நிலையில் என்ன சொல்ல….⁉️ #tamilnadupolitis #parliament #TamilNaduAssembly #தமிழகஅரசியல் #cjp #TVKGovernment #JantarMantar #ksrpost #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட்




தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...