Tuesday, August 25, 2026

#சோனியா காந்தியின் கொ….முகம்!

#சோனியா காந்தியின் கொ….முகம்!
இன்று டெல்லியில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றிய போது வந்தே மாதரம் பாடல் முழுமையாக இசைக்கப்பட்டது! அந்த நேரத்தில் சோனியா காந்தியின் முகம் போன போக்கைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது! ஏதோ அவர் வீட்டில் அவரது சொத்தைக் கொள்ளை அடித்துச் சென்று விட்டது மாதிரி அவ்வளவு வெறுப்பைக் காட்டினார்!
இந்த அம்மையாருக்கு இந்தியாவினுடைய தொன்மம் நாகரீகம் அதனுடைய ஆன்மா பல்லாயிரக் கணக்கான வருடங்களாக பாரத தேசம் என்கிற பெயரில் உலகத்திற்கெலாம் தத்துவம் மற்றும் உயிரியல் ஆன்மாவையும் வழங்கிய இந்த மாபெரும் நாட்டைப் பற்றி அவருக்கு என்ன தெரிந்திருக்கிறது? அதன் மீது என்ன மரியாதை இருக்கிறது!?
வந்தே மாதரம் இசைக்கும்போது இவ்வளவு கொடூரமாகவா அவர் முகம் போவது? அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூட அந்த நேரத்தில் அமைதியாக அதற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது சோனியாவுக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை! எப்படிக் காங்கிரசை அந்நிய நாட்டுக்காரர்கள் தொடங்கினார்களோ அன்னிபெசன்ட் அம்மையார் அதில் இடம்பெற்றாரோ அப்படியான உன்னதமான காங்கிரஸை சோனியா காந்தி தனது தலையிட்டால் தனது வெறுப்பு மனத்தால் ஒரு வழியாக அதன் கதையை முடித்து விடுவார் என்று நான் சொல்லவில்லை அன்றைக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த வைகோ கோபால்சாமி சொன்னார்! அப்படித்தான் இன்றைய காங்கிரஸின் நிலைமை இருக்கிறது!

May be an image of temple and text that says "15-08-2026 15-08 2026 தமிழ் Janain !I 山 STOP STOP இதுவா தேசப்பற்று? காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் பாடல் பாடியபோது து பாதியில் நிறுத்துமாறு சைகை காட்டிய சோனியா சோனியா, ராகுல் மற்றும் கார்கே பாதியில் நிறுத்துமாறு சைகை காட்டியதால் சர்ச்சை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 வரிகள் மட்டுமே பாடப்பட்டதாக தகவல் தேசிய சின்னங்களை தொடர்ந்து அவமதிப்பதால், காங்கிர சை மக்கள் நிராகரித்துள்ளதாக பாஜக விமர்சனம் OOfK ©fR/TAMILJANAMMEWS TATA PLAY -1570 airtel-797 TCCL-59 59 K-37 (GTPL-84 53"

No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்புப் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், அப்பிரிவின் இன்று சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.

  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்புப் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், அப்பிரிவின் இன்று சென்னை கமலாலயத்...