Friday, August 21, 2026

#திருநெல்வேலி_நக்கல்

 #திருநெல்வேலி_நக்கல்

ஒரு ரெண்டுநாள் முன்னாடி ஒரு வேலையா ...... திருநெல்வேலி போனேன் அங்க சங்ஷன் லோகல் பஸ்சுல கண்டக்டர்கிட்ட "சார் ஒரு சமாதானபுரம் குடுங்க" ன்னு கேட்டேன். "எங்க ஊர்லே ஒரே ஒரு சமாதானபுரம் தான் இருக்கு, அதையும் உனக்கு குடுத்துட்டா அப்புறம் நாங்க என்னடே பண்றது?" ன்னு திருப்பி கேட்டார். (ஆகா... இன்னைக்கு சனி சடைபோட ஆரம்பிச்சிருச்சு, இன்னும் என்னனென்ன நடக்கப்போகுதோ?) "சார் சமாதானபுரம் போக ஒரு பயணச்சீட்டு குடுங்க" "ஓ........ அதுவா அப்படிக்கேளு , இந்தா" (இந்த ஊருக்காரனுக கிட்ட இனி வாயக்குடுத்து வாங்கிகட்டிக்க கூடாது). போயி ஒரு சீட்ல உட்கார்ந்தேன். நமக்கு அந்த ஊரு புதுசு, பக்கத்துல இருந்தவர்கிட்ட "சார் சமாதானபுரம் வந்தா சொல்லுங்க" ன்னு சொன்னேன். உடனே அவரு "சமாதானபுரம், சமாதானபுரம்" ன்னு நாலுவாட்டி சத்தமா சொன்னாரு. அப்புறம் என்னைய பாத்து "சார், நான் கூப்பிட்டு பாத்தேன்.. சமாதானபுரம் வரமாட்டேங்குது.. நீங்க வேணா ஒரு வாட்டி கூப்பிட்டு பாருங்க" ன்னு சொன்னாரு. (அடப்பாவிகளா.... வீட்டுலே யோசிச்சிட்டு வருவானுகளோ) "இல்லை சார் சமாதானபுரம் ஸ்டாப் வந்தா சொல்லுங்க. நான் அங்க இறங்கணும்" என்றேன்... விளக்கமாக. "உங்க போன் நம்பர் குடுங்க" "ஏன் சார்?" "இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன். நாளைக்கு அந்தப்பக்கம் போவேன். அப்ப சமாதானபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான்" நல்ல வருவீங்கலே... #திருநெல்வேலி #சமாதானபுரம் #லோக்கல்பாஷை #நக்கல் #நையாண்டி #tirunelveli



No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...