Tuesday, August 25, 2026

இந்த காக்ரோச் பார்டியின் தலைவர் தானாகச் சென்று ஒரு பள்ளியில் ஆய்வு நடத்துகிறார்.

 இந்த காக்ரோச் பார்டியின் தலைவர் தானாகச் சென்று ஒரு பள்ளியில் ஆய்வு நடத்துகிறார். ஒருஅரசு பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தும் அளவிற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள். இவர் என்ன தேர்தலில் நின்று ஜெயித்து வந்த மக்கள் பிரதிநிதியா இல்லை ஒரு அமைச்சரா! இல்லை அரசு அதிகாரியா?

ஒரு கட்சி அரசியல் செய்கிறவர்கள் மக்களிடையே சென்று அவர்களுக்கான உதவிகளைச் செய்து பொதுப்பணிகள் மூலம் அவர்கள் நன்மதிப்பைப் பெற்று தேர்தலில் நின்று பதவிக்கு வந்த பிறகு செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் குறுக்கு வழியில் போய் இப்படி அதிகாரத்தை கையில் எடுத்துக் குழப்பி வருவது எந்த வகையில் நியாயம்! இது அரசியல் அமைப்பையும் நிர்வாகத்தையும் குளறுபடி செய்வதோடு வேண்டுமென்றே இது மாதிரிச் செய்வதன் மூலம் ஏற்கனவே வீணாகிப் போய்க் கொண்டிருக்கிற இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான எந்த ஒழுங்குமற்ற தந்திரங்களாக வன்முறைகளாகத்தான் தெரிகிறது! அனு தினமும் ஊடக வெளிச்சம் பெற வேண்டும். அந்த ஊடகங்களோ தங்களது தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும் இதற்காக ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் குளிர் காயலாம் என்று தான் நினைக்கிறார்கள். டெல்லியில் ஜந்தர் மந்திரில் நடந்த போராட்டத்தில் இளைஞர்களின் இடையே மதுபோதையும் போதைப் பொருளும் புழங்கியதாகப் பத்திரிக்கைச் செய்திகள் சொல்கின்றன! இரண்டு மூன்று நான்கு பேராக கூடி குஜாலாக வேறு இருந்துள்ளார்கள்! குடியும் கூத்துமாகப் பொது வெளியில் நின்று பொறுப்பற்ற முறையில் இருந்துவிட்டு அதற்குப் போராட்டம் என்று பெயர் சொல்கிறார்கள்! இந்த காக்ரோச் பார்ட்டி தலைவர் என உத்தமரா! எத்தனையோ பேர் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ்நாள் முழுக்க மக்களிடையே பணி செய்து எந்தப் பதவியும் பெறாமலே விடை பெற்றுப் போய்விட்ட நாடு இது! இன்னும் நேர்மையான பலர் முழு நாள் வாழ்வையும் இழந்து பதவிக்காக நிற்காமல் மக்கள் பணி செய்தும் வருகிறார்கள்! அமைதியாக போய்க்கொண்டிருக்கும் நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் இருக்க ஊடகங்கள் ட்விட்டர்கள் என்று பல்வேறு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இவர்கள் இந்த அழிச்சாட்டியத்தைச் செய்து வருகிறார்கள். இவர்களெல்லாம் நாட்டுக்காக என்ன பெரிய தியாகம் செய்துவிட்டார்கள்? இப்படிச் செய்பவர்களைச் சகித்துக் கொண்டே இருந்தால் இந்த வன்முறையைப் பொறுத்துக் கொண்டே இருந்தால் நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் தான் போகும்! இது சம்பந்தமாக யாரையும் குறை சொல்ல முடியாது! நாட்டின் உயரிய பதவியில் உள்ள பிரதமரின் தாயையே பழித்து பேசுகிறான்கள்!
இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? ஊர் குருவி பருந்தாக முடியாது! நாட்டின் இறையாண்மை உள்ள 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவை இந்த சில்லறைத் தனங்களால் மதிப்புக் குறைத்து விட முடியாது! ஆளில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை போல இந்த கூட்டம் அரசியல் ஒரு முகம் காண ஒரு காலத்திலும் முடியாது! இவ்வாறு தொடர்ந்து இவர்கள் போராட்டம் என்கிற பெயரில் அடிக்கும் கூத்துகள் தொடருமேயானால் நாட்டிற்கும் குடிமக்களுக்கும் ஆபத்தான முறையில் தான் அது முடியும் என்று சொல்ல வேண்டி இருக்கிறது!
மக்களின் அன்றாட வாழ்க்கையை இப்படிப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்! நாகரிகம் உள்ளவர்கள் நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!
Just look at the body language of Abhijeet Dipke!! #Cockroach
What is his designation?
Is he an MP? Is he an MLA?
Is he a CM or PM?
No, he is allegedly a college dropout from Boston!!
I will shave my head if he visits government schools in Tamilnadu with the same attitude. Is it possible to every citizen ⁉️





No comments:

Post a Comment

https://youtu.be/fXTne0II-0w?si=bSaawb4a47xu9qYL

  https://youtu.be/fXTne0II-0w?si=bSaawb4a47xu9qYL