கடந்த வார ஜூனியர் விகடனில் ஸ்டாலினுக்கு சபரீசன் மகனா? மருமகனா? என்ற கேள்வியுடன் ஒரு செய்தித் கட்டுரை ஒன்று வந்துள்ளது. கலைஞர் தன் மகன் ஸ்டாலினைத் தான் வளர்த்தாரே ஒழிய மருமகன் முரசொலி செல்வத்தை வளர்க்கவில்லை. வாரிசு அரசியல் கூடாது என்பதில் நான் எப்போதுமே தெளிவாக இருக்கிறேன்.
வைகோ வேண்டுமென்றால் இன்று மாறி இருக்கலாம்! திடீரென்று ஸ்டாலின் வீட்டிற்கு மருமகனாக வந்து வேதாளம் புகுந்த கதையாக எல்லாவற்றையும் முருங்கை மரத்தில் ஏற்றி விட்டார் சபரீசன் . பல காலம் திமுகவில் உழைத்த பலரையும் அவர் வெளியேற்றி விட்டார். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவன் அடியேன்தான். என்னுடைய உழைப்பு மிக அதிகமாக இருந்தது.ஈழத்தமிழர் விவகாரத்தில் திமுக மீது இருந்த பழியைத்தீர்த்தது! மட்டுமல்லாமல் ஜெயலலிதா ஆட்சியில் கலைஞர் கைது விவகாரத்தில் கனிமொழி சொந்த விவகாரம் என இன்னும் பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் உதவியாக இருந்தேன்.
நேற்று வந்த மனிதர் யாரென்றே தெரியாமல் திமுகவுக்குள் சபரீசன் வந்தார்! ஜமீன்தார் போல் நடந்து கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட ஆரம்பித்து விட்டார்! ஸ்டாலின் வாரிசு அரசியலை விரும்புகிறவர்கள் என்றால் அவர்கள் உதயநிதிக்குத் தான் அனைத்து உரிமைகளையும் கொடுத்து கொண்டு வந்திருக்க வேண்டும்.! அதை விட்டுவிட்டு நேற்று வந்த சபரீசன் திமுகவில் யார்? அவரைத் தூக்கி வைத்துத் தலைகால் தெரியாமல் கொண்டாடினார் ஸ்டாலின்! இன்றைக்கு அதற்கான தண்டனையை அனுபவிக்கிறார்!
சபரீசன் நன்றாக சம்பாதித்துக் கொண்டார் என்று தகவல் ஆனால் நடத்தையில் பதினான்காம் லூயி மன்னன் போல அவருடைய அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது! Pen நிறுவனம், ஊரில் சைக்கிள் மிதித்தவருக்கு வித விதமான கார்கள் , கோடி. கணக்கில் விலையான வாச்சிகள், G square முதலீடுகளில், சொத்துக்களை வெளி நாடுகளில் என்று தகவல்…அதன் விளைவுகளை தான் இப்போது திமுக அனுபவிக்கிறது.திமிர் பிடித்த பேச்சு இவரைத் திமுகவை விட்டுக் கழித்துக் கட்டினால் தான் திமுகவிற்கு மறுவாழ்வு!

No comments:
Post a Comment