Thursday, August 6, 2026

ஏராளமான சமூக ஊடகங்கள் உலகெங்கும் பரபரப்பாக இயங்குகின்றன!

 ஏராளமான சமூக ஊடகங்கள் உலகெங்கும் பரபரப்பாக இயங்குகின்றன! நாள் ஒன்றுக்கும் செய்திகள் மாறி மாறித் தொழில் நுட்ப மின்னணுப் பாய்ச்சலின் மூலம் பரவலான செய்திகள் வினாடிக்கொரு தரம் நம்மை வந்து அடைகின்றன. ஆனால் இப்படியான சமூக ஊடகங்கள் தோன்றாத அந்தக் காலத்தில் எங்கோ மூலையில் உள்ள மணிப்பூரில் 5757 நாள் உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளாவின் பெயரையே இந்த உலகமும் நாடும் மறந்து போய்விட்டது!ஆனால் டெல்லியில் சோனம் வாங்சுக் 24 நாட்கள் உண்ணவிரதம் இருந்தது உலக அளவில் பிரபலமாகிறது! அதற்கு முற்றிலும் இந்த சமூக ஊடகங்களின் சாகசங்கள் தான் காரணம் என்கிறேன்.

இன்னும் பலவான ட்விட்டர் இன்ஸ்டாகிராம் முகப்புத்தகம் வாட்ஸ் அப் குரூப்கள் மற்றும் பல்வேறு தகவல் செய்தி ஸ்தாபனங்கள் அதன் ஊடாக இந்தியாவிற்கு எதிராகப்பல வகையான சதிவலைகள் பின்னப்படும் காலத்தில்தான் எல்லா வகையினங்களையும் எதிர்கொண்டு இந்தியா தன் பாதுகாப்பைத் தீவிர வலிமையுடன் மேற்கொண்டு வருகிறது.! இந்த #ஜென்சி அரைகுறைகள் இந்தச் செய்திகளை எல்லாம் நம்பிக்கொண்டு கையில் செல்போன் வந்து விட்டால் புரட்சி வந்து விடும் என்பது போல வெறும் கூச்சல் போட்டுவிட்டு வீட்டுக்குச் செல்கிறார்கள். ஏதாவது வரலாறு அதன் பின்புலம் மண் நாடு தேசியம் எது குறித்தும் எந்த அறிவும் இல்லை. வரலாறு மற்றும் புவியியல் தேவையற்றது என்கிறார்கள. இவர்கள் ஏதோ பொழுது போக்காக போராட்டங்களே நடத்தினார்கள். நடனங்கள் மற்றும் கடுமையாக ஏசுவது என காலத்தை கடத்தினார்கள் மீண்டும் வலிமையான பாரதம்தான் இவற்றையெல்லாம் சரி செய்யும்! #Genz



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC