#ப_சிதம்பரம் இதெல்லாம் செஞ்சிருக்காரா..
2020ல் சிதம்பரத்தின் கைது அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியது என்றாலும், ப.சிதம்பரம் மீது யாருக்கும் பரிதாபமோ, கோபமோ ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு பதிலும் சொல்கிறார்கள்.... அதாவது, இதுவரை சொந்த மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ எந்த நல்லதும் செய்ததில்லை.. ஏன்? சொந்த கட்சிக்காரனுக்குக் கூட எதையும் செய்ததில்லையாம். இன்னும் ப.சிதம்பரம் மீது அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் எக்கச்சக்கம். உன்னதமான தருணத்தில் இலங்கை தமிழருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார். நிதி மந்திரியாக இருந்த போது பல ஊழல்களின் ஊற்றுக் கண்ணாக இருந்தார். நிலக்கரி, சுரேஷ் கல்மாடி ஊழல் , 2ஜி அலைக் கற்றை, இறக்குமதி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு 20,000 கோடி அரசு கடன் என்று அள்ளிக் கொடுத்திருக்கிறார். ஈழத் தமிழினப் படுகொலை மற்றும் முள்ளிவாய்க்கால் போர் உச்சத்தில் இருந்த 2009 காலக்கட்டத்தில், மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இலங்கைக்கு ராணுவ உதவிகள் மற்றும் ஆயுதங்களை வழங்கிய காங்கிரஸ் அரசுக்குத் துணையாக இருந்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்களை இந்தியா எதிர்க்கவோ அல்லது தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படவோ ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் அரசு முன்வரவில்லை. 2009 ஆம் ஆண்டு பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடி இன மக்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரை துவக்கி வைத்தார். ஏறக்குறைய 2 லட்சம் துருப்புகள் பழங்குடியின கிராமங்களை சூறையாடியும், தீவைத்தும், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து அடித்து விரட்டி அவர்களை உள் நாட்டிலேயே அகதிகளாக மாற்றியது. இன்று வரையிலும் பசுமை வேட்டை தொடர்கின்றது. வேதாந்தா குழுமத்தின் பணத்தை மனைவி மூலம் பெற்றவர். இவரது மனைவி வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகர். கணவர் நிதி மந்திரி. (வேதாந்தாவினுடையது ஸ்டெர்லைட் ஆலை மற்றும் பல நிலக்கரி சுரங்கங்கள்) 2013 பட்ஜெட்டில் விவசாய கடன் 40,000 கோடி ரூபாய் என அறிவித்து 90 நாட்களுக்குள் அதை விவசாயிகள் க்ளெய்ம் செய்ய வேண்டும் என்று கூறி 87வது நாள் அன்று வங்கிகளுக்கு லெட்டர் அனுப்பியவர், ஆக, பணம் பட்டுவாடா செய்யாமல் மீண்டும் கஜானாவிற்கே வந்து விட்டது. 2013 பட்ஜெட்டில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 6% வரி போட்டு விட்டு, நகை கடை அதிபர்கள் தங்கள் ஏழ்மை நிலையை எடுத்துரைத்ததும் அதை 2% ஆக மீண்டும் குறைத்தது.. தனது மகனின் வாசன் ஐகேர் கம்பெனிக்காக மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய, மூன்று மாதங்களுக்கு டாலர் விலையை செயற்கையாக குறைத்து அந்த இறக்குமதி முடிந்ததும் டாலர் விலையை 73 ரூபாய் வரை வளர விட்டு ரூபாய் மதிப்பை இழக்கச் செய்தது.. மிக மிக அதிகமாக தங்கத்தை தேவைக்கு மேல் தன் குஜராத்தி நண்பர்களுக்காக இறக்குமதி செய்து அந்நிய செலாவணி இருப்பை வெகுவாக குறைத்தது. இவரது நேரடி தலையீட்டில் நெய்வேலி மின் கம்பெனி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றது. கூடவே நட்சத்திர நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றது. ராபர்ட் வதேராவின் ஊழல் சொத்துக்கள் பற்றி கேட்டபோது அது தனிப்பட்ட நபரின் சொத்து. அதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொன்னவர் ப.சி. அப்துல் கலாமை இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் எதிர்த்தவர். பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல். நான்கே பத்திகளில்.. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஜூலை 2013 அன்று கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் கம்பெனிக்கு செபி ஆறு மாத வர்த்தகத் தடை விதிக்கிறது.. செப்டம்பர் 13 2013 இல் காங் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் இம்பீரியல் ஓட்டலில் நிரவ் மோடியின் நகைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.. அடுத்த நாள் 14 செப்டம்பர் 2013 அன்று அலகாபாத் வங்கி ரூ.1500 கோடிக்கான எல்.சி (கடன்) நிரவ் மோடியிடம் கொடுக்கப்படுகிறது. வங்கியின் இயக்குநர் தினேஷ் தூபே கடிதம் மூலம் எதிர்க்கிறார். எதிர்ப்பு புறக்கணிக்கப்படுகிறது. பிப்ரவரி 2014 அன்று எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் தினேஷ் தூபே பதவி நீக்கம் செய்யப்படுகிறார். அதில் கையெழுத்திட்டவர் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.. "எல்லைப் பாதுகாப்புப்படை, ரயில்வே பாதுகாப்புப்படை சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, மாநில அரசுகளைக் கேட்காமலேயே, மாநிலங்களுக்குள் நுழைந்து விசாரணை, கைது செய்யலாம் என திருத்தங்களைக் கொண்டு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் கம்பெனியான வேதாந்தாவிற்கு, சட்ட ஆலோசகராக, பிறகு இயக்குனராக, இருந்து ஆதரித்தது. தான் நிதியமைச்சர் ஆனதும், மனைவி நளினியை வேதாந்தாவின் சட்ட ஆலோசகராக ஆக்கியது.
Subscribe to:
Post Comments (Atom)
Yes… brutal killings
Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment