//கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசவேண்டியதை, கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேச வேண்டியதை எல்லாம் , நேரத்தை ஓட்டுவதற்கு சட்டமன்றத்தில் தவெக அமைச்சர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார்...
காவிரி விவகாரம் பற்றியோ, மேகதாது பிரச்சினை பற்றியோ அவர் சட்டமன்றத்தில் பேசி யாராவது பார்த்திருக்கிறோமா..?! நீரில்லாமல் அல்லாடும் டெல்டா விவசாயிகள் பற்றியோ, தண்ணீர் தராத கர்நாடக அரசுக்கு எதிராக ஏதாவாது பேசியிருக்கிறாரா இந்த அமைச்சர்...?!//
1.தலைவரை அருண்ராஜ் அடிக்கடி வந்து பார்ப்பார். ரகசியமாக வந்து பார்ப்பதற்கு பதிலாக, ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரடியாக உங்களை பார்க்கிறேன் என்று கூறினார். அவரின் மாமனார், மாமியார் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ஏற்கவில்லை. ஆனால் எங்கள் தலைவர், தைரியமாக ராஜினாமா செய்யச் சொன்னார்..!
2.ஆதவ் அர்ஜுனாவை எனக்கு கண்டிப்பாக
வேண்டும் என்று தலைவரிடம் கேட்டு
வாங்கினேன். உங்களுடன் நிறைய நாள் அவர்
இருந்தார். ஒரு புத்தகம் வெளியிட்டதால், அவரை
விட்டார்கள். நாங்கள் அழைத்துக் கொண்டோம்.
3.சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அவர் ஒரு தொகுதி கேட்டார், முடியாது என்று கூறினேன். அந்த தொகுதி தான் வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் 30 ஆண்டுகளாக இருக்கிறார் என்று கூறினேன். உடனே தலைவரிடம் சென்று, நான் அந்த தொகுதியில் நிற்கவில்லை என்றார். நீங்கள் விரும்பும் தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் தலைவர். எனக்கு வேண்டாம், என் மகனுக்கு சீட் கொடுங்கள் என்று கூறினார்.
4. செங்கோட்டையன் அண்ணன் வந்த போது, சீனியர் வருகிறாரே என நினைத்தேன். வந்தார், தலைவருக்கு அவரை மிகவும் பிடிக்கும். எனது தொகுதியை எனக்கு கொடுப்பீர்களா என தலைவரிடம் கேட்டார். ஏன் என்னிடம் கேட்கிறீர்கள், அது உங்கள் தொகுதி என முதல்வர் கூறினார். நீங்கள் கொடுக்கும் தொகுதியில் நிற்கிறேன் என பணிவோடு கூறினார்
5. நிதியமைச்சர் மரியவில்சன் வரும் போது, முடி வளர்த்து வந்தார். தேர்தலில் நிற்கவேண்டும் என்றால் இந்த முடியை வெட்ட வேண்டும் என்றேன். ஒரு வாரம் கழித்து முடி வெட்டி வந்தார். கண்டிப்பாக நீங்கள் எம்எல்ஏ ஆகிவிடுவீர்கள் என்று கூறினேன்.
6. துணை சபாநாயகராக இருக்கும் ரவிசங்கரை நிற்க சொல்லும் போது, தன்னிடம் ரூ.75 ஆயிரம் தான் இருப்பதாக சொன்னார். நீ நில், நான் பார்த்துக் கொள்கிறேன் என முதல்வர் சொன்னார். இன்று அவர் துணை சபாநாயகராக இருக்கிறார்"
7. சர்க்கார் என்கிற படத்தில் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால், நீங்கள் தான் திரும்ப வந்திருப்பீர்கள். அது கிழித்ததால் தான் நீங்கள் இன்று ஆட்சியில் இல்லை
8. 32 ஆண்டுகளுக்கு முன் தலைவரின் தந்தை கஷ்டப்பட்டார், ஆனால், தங்கத் தட்டில் வைத்து தான் அவரது பெற்றோர் பார்த்துக் கொண்டார்...!
இவ்வளவும் நிர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த சட்டமன்றத்தில் பேசியது..
கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி ஏற்பட்டது. வேலையும் இல்ல, காரும் இல்ல. இன்று இரண்டையும் முதல்வர் கொடுத்துள்ளார். நான் ரயிலில் வருகிறேன், அங்கிருந்து ஆட்டோவில் பேரவைக்கு வரும்போது, ஒவ்வொரு முறையும் காவலர்கள் யார் என்று கேட்பார்கள்.
எம்.எல்.ஏ. எனக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்தாலும் நம்ப மாட்டார்கள்” எனத் தெரிவித்தார். பேரவைக்கு ஆட்டோவில் வருவதாக கூறிய தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனுக்கு சொந்தமாக கார் இருப்பது அம்பலமாகியுள்ளது. பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் தனது பிரமாணப் பத்திரத்திலேயே கார் இருப்பதாக காட்டியுள்ளார். விலை உயர்ந்த புத்தம் புது ரேஞ்ச் ரோவர் டிஃபெண்டர் காருடன் நிற்பது போல் சபரி ஐங்கரன் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.
இவ்வளவும் பேசி எதாவது பலன் இருக்கிறதா என்று பாருங்கள்..

No comments:
Post a Comment