Faceboo
ஐநா சபையிடம் இன்றைய இலங்கைச் சிங்கள அரசாங்கம் உலகமெங்கும் வாழும் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அழைத்துக் கொள்வது பிறகு அவர்களுக்குத் தேவையான வாழ்வு உறுதியை அளிப்பது என்கிற முறையில் உத்தரவாதம் அளித்துள்ளது. என்னை பொறுத்தவரை அது ஒரு மிக நல்ல செயல்.
ஏனென்றால் இங்கே உள்ள திமுகவோ அதிமுகவோ இன்னும் பல அரசியல் கட்சிகளோ இலங்கை குறித்த தேசிய இனப் பிரச்சனைகள் பற்றி எதுவுமே புரியாமலே தொடர்ந்து பேசிக்கொண்டும் நடந்து கொண்டும் வருகிறார்கள். . அங்கு தமிழர்கள் மக்கள் தொகை குறந்து விட்டது. மேலும் ஜனத்தொகையில் கூடதல் படுத்த வேண்டும். இது அவசியம்! அவசரமான அரசியல் பணி ஆகும்.
இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாகத் தாயகத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் ஈழ அகதிகள் (இலங்கைத் தமிழ் அகதிகள்) ஆவர். தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் சுமார் 58,000-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வருகையும் வரலாறும்:
•1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் போர் தீவிரமடைந்தபோது இலட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திற்கு வந்தனர்.
•
•ஐக்கிய நாடுகள் மற்றும் அரசு ஏற்பாடுகள் மூலம் பலர் நாடு திரும்பினாலும், பத்தாயிரக்கணக்கான மக்கள் இன்னும் தமிழக முகாம்களிலும் வெளியேவும் வாழ்ந்து வருகின்றனர்.
•
•தமிழக அரசு இவர்களுக்கு முகாம்களில் தங்குமிடம், கல்வி, இலவச அரிசி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
.முகாம்களில் வசிப்பவர்கள் தவிர, முகாமுக்கு வெளியே காவல்துறை அனுமதியுடன் வசிப்பவர்களும் உள்ளனர்.
தற்போதைய நிலை:
•இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
•இதனிடையே, விரும்பியவர்கள் சொந்த ஊர் திரும்பத் தேவையான ஆவண உதவிகள் மற்றும் புதிய வழிமுறைகள் குறித்து அரசும் ஐ.நா. அமைப்புகளும் பேசி வருகின்றன.இது நல்லதல்ல….
•
ஆனால் இன்றைய இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் எண்ணிக்கைவெகுவாகச் சரிந்து வருகிறது. ஏற்கனவே தமிழர்கள் அங்கு வாழும் தங்களின் உரிமைப் பிரச்சனைகளுக்காக நீண்ட காலம் போராடியும் வருகிறார்கள்! தங்களுக்கான தேசிய இன சுய நிர்ணய உரிமைகள் தன்னுரிமைகள் போன்றவற்றிற்காக ஈழத்தந்தை செல்வா காலத்தில் இருந்து ஆயுதம் தாங்கி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அன்புச் சகோதரர் தேசிய தலைவர் பி… வரை இந்தப் போராட்டம் நீடித்தது அப்படியான போராட்டங்களுக்குத் தமிழர்கள் தொடர்ந்து புலம்பெயர்ந்து கொண்டிருப்பதன் மூலமும் உயிர் பிழைக்க அகதிகளாக்கப்படுவதன் மூலமும் அந்த உரிமைப்போராட்டங்கள் அர்த்தம் இழந்தும் விடக்கூடாது அல்லவா? பல இலங்கை வாழ் தமிழர்கள் தாயகம் திரும்பவும் விருப்பப்படுகிறார்கள் !
அப்படியான நிலையில் இலங்கைத்தமிழர்களை மீண்டும் தாயகத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கான தேசிய உரிமைகளை வழங்குவதன் மூலம் அந்த போராட்டங்களுக்கான அர்த்தமும் ஒரு வீச்சும் வீரியமும் கிடைக்கும் என்பதுதான் இதில் முக்கியமானது. இலங்கையில் ஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் இஸ்லாமியர்களுடைய எண்ணிக்கை கூடி வருகிறது. இவற்றையெல்லாம் யோசிக்காமல் இங்கே இருக்கக்கூடிய தமிழ்நாட்டுத்தலைவர்கள் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உட்பட நாங்கள் இங்கே இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்போம் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே புலம்பெயர்பவர்களாலும் அகதிகளாகப் பல்வேறு நாடுகளில் அவர்கள் குடியேறிவருவதாலும் வழியில் இறந்து விடுவதாலும் இலங்கையில் தமிழர்கள் இறுதியில் வாழ்ந்து வந்த அடையாளத்தை இழந்து போய்விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. அந்த வகையில் இலங்கையின் பூர்வீகத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனை என்னைப் பொறுத்தளவில் மட்டுமல்ல உலக பார்வையிலும் முக்கியமானதாகப் படுகிறது! தமிழர்கள் நாளடைவில் மிகச் சிறுபான்மையினராக அங்கே ஆகி விடுவார்கள் என்பதுதான் கவலைக்குரியது ! ஒரு காலத்தில் மலையகத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சிங்களர்களுக்கு இணையாகத் தமிழர்கள் நிறைந்து இருந்தார்கள். அவர்களையெல்லாம் திரும்ப அழைத்து இலங்கையில் அவர்களுக்கான சுயநிர்ணய தேசிய உரிமைகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் ஏற்கனவே 30 வருடங்களாக மேலாக நடந்த போராட்டங்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் என்று தான் நான் இதைக் கூறுகிறேன். இதை இலங்கை தமிழர்களுக்கான நல்வாழ்வு என்ற முறையில் நான் வரவேற்கிறேன். அங்கு தமிழர்கள் மக்கள் தொகை குறந்து விட கூடாது.


No comments:
Post a Comment