Tuesday, August 4, 2026

#காவேரி நீர்-#மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்.

#காவேரி நீர்-#மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம். இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டேன். கர்நாடக அரசு கட்டப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிற மேகேதாட் அணை தமிழ்நாட்டுக்கு ஒரு மாபெரும் அபாயம்! அதனால் தமிழக தஞ்சை டெல்டாப் பகுதி விவசாயிகளும் முற்றிலுமாகப் பாதிக்கப்படுவார்கள். குறுவைப் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் குடிநீருக்கும் தட்டுப்பாடு வந்துவிடும் என்பதை மனதில் கொண்டு அதற்கு எதிர்ப்பைக்காட்டும் விதமாக மேகேதாட் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தஞ்சை விவசாயிகளோடு இன்று மாலை தமிழக பாஜக தலைவர் மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடந்த நிலையில் அதில் கலந்து கொள்வதன் பொருட்டு தஞ்சாவூருக்கு என்னால் செல்ல இயலவில்லை.


ImageImage

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...