Saturday, August 1, 2026

#சென்னைமெட்ரோரயில் ஆரம்பித்து ஏறத்தாழ 10 வருடங்களுக்க மேல் ஆகின்றன!

#சென்னைமெட்ரோரயில் ஆரம்பித்து ஏறத்தாழ 10 வருடங்களுக்க மேல் ஆகின்றன! சில குறிப்பிட்ட வழிகளுக்கு வேலை முடிந்தும் இன்னும் சில பகுதிகளில் வேலை தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது!. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இன்று தான் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.! தமிழக பாரதிய ஜனதாக் கட்சிச் தலைவர் மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவருடன் இணைந்து ஸ்பென்ஸர் எதிரே உள்ள அண்ணா சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமானம் மெட்ரோ நிலையம் வரை பயணித்தோம். அதனுடைய விரைவும் ஒவ்வொரு நிலையங்களாக அவை கடக்கும் மௌனமான பாங்கும் பயணித்தது போலவே இல்லாத சொகுசாகவும் திருப்தியாகவும் இருந்தது. விமானம் நிலையம் செல்ல சென்னையின் சாலை வழி வாகனத்தில் பயணித்தோம் என்றால் பலவிதமான இக்கட்டுகளைச் சந்தித்து போய்ச் சேரும் நேரம் கூடுதலாக இருக்கும்!. ஆனால் இந்த மெட்ரோ பயணம் மிகக் குறைவான நேரத்தில் எங்களைக் கொண்டு விமான நிலையத்தில் அந்த ரயில் எவ்வித பதட்டம் இல்லாமல் இறக்கி விட்டது. நகர மக்கள் தொகைக்கும் விரிவாக்கத்திற்கும் ஏற்றதான இந்த மெட்ரோ ரயில் உலகின் பல நாடுகளில் இயங்குவது போல நமது சென்னையிலும் இயங்குவது எவ்வளவு அத்தியாவசியமானது என்பதைப் புரிந்து கொள்ளவும் இந்தப் பயணம் வாய்ப்பாக அமைந்தது. சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL), சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதியளவில் திறந்த பின்னர், 2015 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதில் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளம் கொண்ட இரண்டு வண்ண வழித்தடங்கள் உள்ளன. சென்னை மெட்ரோ, தில்லி மெட்ரோ பெங்களூரு மெட்ரோ மற்றும் ஐதராபாத் மெட்ரோ ஆகியவற்றிற்கு பிறகு இந்தியாவில் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பாகும். சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் (CMRL), மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் சென்னை மெற்றோ உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நிலத்தடி மற்றும் உயர்ந்த நிலையங்களின் கலவையாகும். மேலும் நிலையான பாதையினைப் பயன்படுத்துகிறது. சேவைகள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாறுபடும். சேவையானது 06:00 முதல் 22:00 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்குகின்றன.. #chennaimetrorail





No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...