Tuesday, August 4, 2026

#பவானிஆறு .

#பவானிஆறு . பவானி சாகர் அணையில் தொடங்கி பவானி மற்றும் குமாரபாளையத்தில் காவிரியில் கலக்கிறது . மற்ற ஆறுகளைவிட இது ஓடும் தூரம் மிகக் குறைவே . ஆனால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் பெரும்பாலான விவசாயம் இந்த ஆற்றின் பாசனத்தை நம்பியே இருக்கிறது . ஆடி 18 , ஆடிப்பெருக்கு நாளான இன்று பவானி ஆற்றின் பாசனப்பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டும் . அந்த கொண்டாட்டங்களில் பல முறை கலந்து கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன் அவ்வளவு நிறைவான விழாவினை வேறெங்கும் கண்டதில்லை , இருகரைகளைத் தொட்டு நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் உற்சாகம் கரை புரண்டு ஓடும். பவானி , காவிரியில் கலந்து தன் ஓட்டத்தை நிறைவு செய்யுமிடத்தில் நான் என் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தேன் . தற்போது என் மகன் , பவானி தன் ஓட்டத்தை தொடங்குமிடத்தில் தன் கல்லூரி வாழ்க்கையைத் துவங்குகிறான் . எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாரி வழங்கும் பவானித்தாயும் , எல்லோரையும் காக்கும் பண்ணாரி அம்மனும் அவனுக்கு அருள்வார்களாக.


Image

No comments:

Post a Comment

ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)

ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)