Tuesday, August 4, 2026

ஈழத் தமிழர் பிரச்சனையில் அன்றைக்கு அங்கு நடந்த ரணமான அனைத்திற்கும் சோனியா குடும்பத்தினர் (காங்கிரஸ்தான்) காரணம் என்று ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார் வைகோ!

ஈழத் தமிழர் பிரச்சனையில் அன்றைக்கு அங்கு நடந்த ரணமான அனைத்திற்கும் சோனியா குடும்பத்தினர் (காங்கிரஸ்தான்) காரணம் என்று ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார் வைகோ! தான் நாடாளுமன்றத்திற்குச் சென்ற முதல்நாளில் இருந்து இன்று வரை அவர் பேசிய நாடாளுமன்றப் பேச்சுகளைத் தொகுத்து அதை நூலாக கொண்டு வந்திருக்கிறார் வைகோ! அதை வெளியிடுவதற்கு அவர் முதலில் துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை அழைத்து இருந்தார். அவர் வரவில்லை! வைகோவின் நாடாளுமன்றப் பேச்சுக்கள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா, டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல்வர் ஜோசப் விஜயும் உறுதியளித்த பின்பும் வர மறுத்து விட்டார். அந்த நூலை வெளியிட காங்கிரஸ் சார்பில் இருந்து ராகுல் காந்தி இருவருடனும் ப சிதம்பரத்தையும் அழைத்துள்ளார்! உண்மையில் அந்த நாடாளுமன்ற பேச்சுச் தொகுப்பில் ராஜீவ் காந்தி காலத்தில் நடந்த போர்பஸ் ஊழல் வழக்கு (ஆயுத பேர ஊழல் ) போபால் கார்பைடு விஷ வாயு மரணங்கள் குறித்துக் காங்கிரஸையும் அதற்கு காரணமான ராஜீவ் -சோனியா குடும்பத்தையும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதேபோல ஈழத்தமிழர் விவகாரத்தில் எடுத்த தவறான நடவடிக்கைகள் குறித்து சோனியா காந்தியையும் ராகுலையும் கடுமையாக பேசித் தாக்கியுள்ளார்! இப்படியாக 70% காங்கிரஸ் கட்சியின் அக்கால நடவடிக்கைகள் மீது எதிர்வினைகள் விமர்சனமாகவே அந்த தொகுப்பு வைகோவால் நிறைக்கப்பட்டு இருக்கிறது! அந்த வகையில் அவர் எழுதி இருப்பதெல்லாம் உண்மைதானே! அந்த வகையில் இந்த நூலை காங்கிரஸ்காரர்களை வைத்து வெளியிட வைப்பதன் மூலம் அத்தனை தவறுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டதற்கு சாட்சியாக தான் பேசிய நாடாளுமன்ற பேச்சுக்கள் அடங்கிய இத் தொகுப்பை சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டது வைகோவின் புத்திசாலித்தனம்தான்! இன்றைக்கு காங்கிரஸில் உள்ள அறிவு ஜீவிகளுக்கு என்ன தான் தெரியும்! அந்த நூலில் உள்ள எதுவும் புரியாது? காங்கிரசுக்கு எதிராகவே அதிகப் பேச்சுகள் அடங்கிய அந்த தொகுப்பை ஈழத் தமிழர் பிரச்சினையிலும் போர்பஸ் ஊழலிலும் தவறுகள் செய்த காங்கிரஸ்காரர்களே ஆமாம் அப்படித்தான் நடந்தது என அனைத்தையும் ஒப்புக்கொண்டு ஒருவேளை இந்த நூலை வெளியிட்டுச் சாப விமோசனம் பெறுகிறார்களோ என்னவோ! நல்லது நடக்கட்டும்! Vaiko has made the Sonia family (that's the Congress) admit that they were responsible for everything that happened there back then in the Eelam Tamil issue! From the very first day he entered Parliament up to today, Vaiko has compiled all his parliamentary speeches into a book! To release it, he first invited Deputy Speaker of the Rajya Sabha, CP Radhakrishnan. He didn't come! The book release event for Vaiko's parliamentary speeches is taking place in Delhi. Rahul Gandhi and Akhilesh Yadav are participating in this event. Even after Chief Minister Joseph Vijay assured he would come, he refused. To release that book, Rahul Gandhi has been invited on behalf of the Congress, along with two others, P Chidambaram! In fact, in that compilation of parliamentary speeches, he has sharply criticized the Congress and the Rajiv-Sonia family responsible for it over the Bofors corruption case (arms deal scandal) that happened during Rajiv Gandhi's time, as well as the Bhopal Carbide gas deaths. Similarly, regarding the wrong actions taken in the Eelam Tamil matter, he has spoken harshly and attacked Sonia Gandhi and Rahul! In this way, 70% of that compilation by Vaiko is filled with reactions and criticisms against the Congress party's actions of that time! Everything he has written in that vein is indeed true! In that context, by having Congress people release this book, he has cleverly used this compilation of his parliamentary speeches as evidence that they themselves have admitted to all those mistakes—it's Vaiko's sheer intelligence! What do the so-called intellectuals in Congress today even know! Does nothing in that book make sense to them? That compilation, which contains mostly speeches against the Congress, is being released by the very Congress folks who made mistakes in the Eelam Tamil issue and the Bofors scandal—saying "Yes, that's exactly what happened," and perhaps through releasing this book, they're seeking atonement! Who knows! May good things happen!

No comments:

Post a Comment

ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)

ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)