Sunday, December 15, 2019

நதியாக ஒடிக்கொண்டு இருக்கிறேன்.....

வாழ்க்கை முழுக்க இறைந்து கிடக்கின்றன வரமும் சாபமும் தேர்வு  மட்டும் நமதாக...!!
****
நதியாக  ஒடிக்கொண்டு இருக்கிறேன்......
****
உடைத்து அரைத்து சக்கையாக்கி வீசியெறிந்தவர்க்கும் தன்  கண்ணீரையும் சுவையாக்கித்  தித்திப்பு தருவது கரும்பு.
**** 
என்னுள் வதையோடு எரியும் அக்கினிதான்
என்னை அழிவில்லாமல் சாம்பலாக்காமல் வைத்துள்ளது. 
எவ்வளவு நன்றியற்ற துரோகங்கள் வேடிக்கை மனிதர்களை தாண்டி எரியும் நெருப்போடு இயங்குகின்றேன்.

*****
எந்த நிலையிலும் நான் உயிர்க் கொண்டு முளைக்கும் தாவரம்
ஏனெனில் என் வேரின் பிடிமானம் எந்த ரணங்களையும் தாங்கும் இயற்கையின் அருட்கொடை.

****
இத்தனை துயரமா, வேதனையா? இதனை சுமப்போமா? என்று மனதையும் தோளையும் கேட்டேன்.
உன் அற்ப துயரத்தை வீசியெறி. 
நடை கட்டு போகலாம் என்றது மன உறுதி.

****
என்னிடம் எதுவுமில்லை.
என் மனம் கொடுக்கும் தைரியத்திற்குள்
அனைத்தும் உள்ளது.

****

- கே. எஸ். இராதாகிருஷ்ணன்
15.12.2019

#ksrposts


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...