Wednesday, December 18, 2019

#இந்திய_இலங்கை_ஒப்பந்தம் #அசாம்_மாணவர்கள்_பிரச்சனை #பஞ்சாப்_பிரச்சினை



———————————————-
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த பொழுது போஃபர்ஸ் ஆயுத பேர ஊழல், போபால் யூனியன் கார்பைட் விஷ வாயு பிரச்சினை என பல பிரச்சினைகளை எதிர்க்கட்சியினர்;வி.பி.சிங் போன்றோர் அவரை எதிர்த்து போராடிய காலம். அந்த நிலையில் அதை திசை திருப்ப வேண்டும் என்ற சூழலில் அசாமில் போராடிய மாணவர்களை அழைத்துப் பேசி அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது. அதே போல பஞ்சாபில் காலிஸ்தான பிரச்சினை பேசி தீர்ப்பது, இலங்கையில் தமிழர்கள் பிரச்சினையை முடிவு கட்டுவது என்று ராஜீவ் காந்தி இவற்றையெல்லாம் கையில் எடுத்து ஒப்பந்தங்களை நிறைவேற்ற நெருக்கடியான சூழ்நிலையில் அவசரமான முடிவுகளை மேற்கொண்டார்.










இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கின்றது.




இவ்வொப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபை பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் செயல்படாமல் போனது.

ஒப்பந்தம்
இந்தியக் குடியரசின் பிரதம மந்திரி திரு.ராஜிவ்காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி திரு.ஜே,ஆர் ஜயவர்தனவும் 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி கொழும்பில் சந்தித்தார்கள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை ஆதரித்துத் தீவிரப்படுத்தி மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் அதன் விளைவான வன்செயல்களுக்கும் தீர்வு காண வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தையும் இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு, நழன்புரி நடவடிக்கைகள், சுபீட்சம் ஆகியவற்றை உணர்ந்தும்,

இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பின்வரும் உடன்படிக்கையை இந்தத் தினத்தில் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
1. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காக்க விரும்பி,

2. இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோரைக் கொண்ட பல்லின, பன்மொழி சமூகங்கள் வாழும் நாடு என்பதை உணர்ந்து,

3. மிகக் கவனமாகப் பேணிக் காப்பாற்ற வேண்டிய தனித்தனிக் கலாசாரம்,மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதையும்,

4. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வசிப்பிடங்கள் என்பதையும் அங்கீகரித்து,

5. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சகல பிரஜைகளும் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் சுபீட்சத்துடன் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் பல இன, பல மொழி பேசும் பல மதங்களைக் கடைப்பிடிக்கும் தன்மையைப் பேணி,

பின்வரும் உடன்பாட்டிற்குவருகிறோம்:

1. இலங்கை அரசாங்கம் அருகருகேயுள்ள மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாகச் சேர்த்துக் கொள்ளக்கருதும் கீழ் விவரிக்கப்பட்டவாறு வடக்கு, கிழக்கு என்று அவற்றைப் பிரிக்கும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது என்றும்,

2. மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் திகதியில் இருந்து 3இல் தெரிவிக்கப்பட்டவாறு சர்வஜன வாக்குரிமை நடத்துவது திகதி வரையான காலப்பகுதி இடைக்காலப்பகுதியென்று கருதப்படும். 8ம் வாசகத்திற்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தற்போதுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாண சபையை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகாக இருக்கும். இத்தகைய அலகில் ஓர் ஆளுநர், ஒரு முத்லமைச்சர், ஓர் அமைச்சரவை ஆகியன செயற்படும்.
(படங்கள்)
1. இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு  கையெழத்து யான ஒப்பந்தம்.
2. அசாம் மாணவர்களிடையே ஒப்பந்தத்தை இறுதி படுத்திய போது....

3. காலிஸ்தான்-பஞ்சாப் பிரச்சினை அனந்தப்பூர் சாகிப் தீர்மானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை இறுதி படுத்திய போது...

https://peacemaker.un.org/sites/peacemaker.un.org/files/IN_850724_MoUSettlementPunjab.pdf

https://peacemaker.un.org/sites/peacemaker.un.org/files/IN%20LK_870729_Indo-Lanka%20Accord.pdf

https://peacemaker.un.org/sites/peacemaker.un.org/files/IN_850815_Assam%20Accord.pdf.

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
18-12-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...