Wednesday, March 9, 2016

குமரி மாவட்டம் பெருஞ்சாணி நீர் மின் நிலைய பிரச்சினை

கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி நீர் மின் நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் இயந்திரங்கள் பழுதுபட்டு மின் உற்பத்திக்கு பயன்படாமல் தண்ணீர் அணையிலிருந்து வீணாக வெளியேறுகிறது.  650 kw திறன் கொண்ட இரண்டு அலகுகள் வைத்து அதில் ஒரு அலகு மட்டும்தான் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது.  இதன் பராமரிப்பு பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கவனித்து வருகின்றது.  சீராக இயங்கிய முதல் அலகு பழுதுபட்ட பின் கவனிக்கப்படாமல் இருக்கின்றது.  மின் உற்பத்தியும் இல்லை. அணையில் உள்ள நீரும் வீணாக செல்கின்றது.  இதுவரை மின் நிலையத்திலிருந்து 1,01,32,892 மில்லியன் (1 மில்லியன் - 10 லட்சம்) யூனிட் மின்சாரம் இது வரை உற்பத்தி செய்துள்ளது.  அலகு ஒன்றில் பேரிங் என்ற பாகம் பழுதுபட்டதால் அதை பழுது நீக்கம் செய்யாமல் வீணாக காலம் கடத்துகின்றது அரசு.  இப்படியான சிக்கலான விஷயங்களால் எவ்வளவு நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைகள் உள்ளன என்பதை நினைத்தால் செயல்படாத அரசுகளை கொண்டு எப்படி நாடு செயல்படும் என்பதுதான் நமது வினா.

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன வசதி தரும் நெய்யாறு அணையும் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் இப்பிரச்சினையில் சிக்கல் ஏற்பட்டு தீர்வு எட்டமுடியாத நிலையில் உள்ளது.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...