Monday, July 12, 2021

*கவனித்தது, கடந்தது, வாசித்தது, உணர்ந்தது, பகிர்ந்தது*

*கவனித்தது, கடந்தது, வாசித்தது, உணர்ந்தது, பகிர்ந்தது*

எல்லாவற்றை பற்றியும் ஒரு கருத்து சொல்ல வேண்டும் என அவசியமில்லை...
இவை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் 
நீங்கள் இப்படி எழுதலாமா... 
உங்கள் பார்வை/ கருத்து இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை....
இப்படி பின்னூட்டங்களுக்கு, inbox செய்திகள் .....
உங்கள் பார்வை ரசனை க்கு ஏற்றது போல எழுத வேண்டும் என்றால் அதை நீங்கள் தான் எழுத வேண்டும்.. 
நானல்ல…..
சுயத்தோடு இருத்தலே உயிரோடு இருத்தல்,சுதந்தரமானதுகூட!
•••••
என் கடந்த காலத்தின் சரிவுகளிலிருந்து எழுந்து நின்ற காரணங்களில் ஒன்றாக  நான் நம்புவது யாரையும் வீழ்த்த எண்ணாமை. எனக்குக் கடுந் துன்பந் தந்தவர்கள்,அவமானப்படுத்தியவர்களைக்கூட. தள்ளிவிட்டவர்கள் முன்பு எழுந்து நிற்பதையே எனக்கான தனித்துவமாகக் கருதினேன்.  வீழ்த்தியவர்களுக்கு வென்று காட்டவேண்டும் என்றும் எண்ணினேனில்லை. அவர்களைக் கடந்து வர வேண்டும் என்றே எண்ணினேன். விலகிப் போனவர்களைப் பற்றி எந்த வருத்தமும் இல்லை. சிலர் ஒட்டவும் முடியாமல் விலகவும் முடியாமல் மதில் மேல் பூனைகளாக இருப்பார்கள். அவர்களையும்   தொந்தரவு செய்வதில்லை. அவர்களின் மனம் தெரிந்துவிட்டபின்பும் அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவேன். மேலும் சிலர் கண்காணிப்பதற்காகவே  இருப்பார்கள். இவர்கள் என்னைக் கண்காணிப்பது நான் விழ நேரும்போது கைபிடித்துத் தூக்கிவிடுவதற்கு அல்ல, ஏறி மிதித்துப் புதைப்பதற்கு. என்னைக் கண்காணிக்காமல் உங்களைக் கண்காணித்தால் நீங்கள் வளர்வீர்கள் என்று சொல்ல நினைப்பேன், ஆனாலும் சொல்வதில்லை. ஏனென்றால் அதனை அவர்களே அறிவார்கள்.  அவர்கள் வளர விரும்புகிறவர்களில்லை. அடுத்தவர்களின் வளர்ச்சியை விரும்பாதவர்கள். அதற்காகவே இயற்கையால் நேர்ந்துவிடப்பட்டவர்கள்.  

என் இந்த நிலைப்பாடுகள் தனித்துவமானது அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் இவற்றைச் செயல்படுத்துவது கடினம். பலர் இதனைச் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அல்லது முயற்சிக்காமல் இருக்கிறார்கள். பலர் எப்போதும் அடுத்தவர் வீட்டு ஜன்னலையே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் தன் வீட்டில் படியும் தூசியைத் தட்டிவிடுவதிலும் நேரம் செலவிடுவதில்லை. இவர்களால் ஒருபோதும் எதையும் மாற்றியமைக்க முடியாது. முக்கியமாக, இன்றுள்ள நிலையிலிருந்து தங்கள் வாழ்வை எந்த வகையிலும் மாற்றியமைக்க இவர்களால் முடியாது. எந்நேரமும் பிறரை பற்றியே எண்ணிக் கொண்டிருந்து வளர்க்கும் வன்ம உணர்வுகள் தன்னை விடுவிப்பதற்கு எந்த வழியிலும் துணைபுரியாது. 

நான் இங்கு குறிப்பிடுபவை மிகவும் எளிமையானவை. எளிமையானது என்பதே அதை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது. 
வாழ்க்கையை மாற்றியமைக்க  குறிப்பிடத்தக்க அளவில் முதலில் உங்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும். உங்களை உள்நோக்கிப் பார்க்க வேண்டும். நீங்கள் யாராக இருக்கிறீர்கள்? யாரில் ஏன் வன்மமும் வெறுப்பும் கோபமும் பொறாமையும்? எண்ணங்களை இருள் குகைபோலாக்கிப் பிடித்து வைத்திருக்கும் இவை தேவைதானா? இங்கு நாம் யாருமே தூய்மையானவர்களோ, நூறு வீதம் குற்றமோ, குறைபாடுகள் கொண்டிராதவர்களோ இல்லை. குற்றங்களைக் களைந்து குறைபாடுகளைத் திருத்திக் கொள்ளக் கொள்ள எண்ணங்கள் சீராகும். பயம் நீங்கும். அவநம்பிக்கை நீங்கும். மனம் வலிமை பெறும். எல்லாம் நாமும், நம் எண்ணங்களும்தான்…..

“We’ve all got both light and dark inside us. What matters is the part we choose to act on...that’s who we really are.”
― J.K. Rowling.
#ksrpost
12-7-2021.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...