Sunday, July 11, 2021

#பாரதிகள்

#பாரதிகள்
——————
இந்த வார காலச்சுவட்டில் பாரதியார் பற்றிய கட்டுரையை ய.மணிகண்டன் எழுதியிருந்தார். 
எத்தனை பாரதிகள் என்று; கவனிக்கப்பட்ட பாரதிகள் பெயர்களையும் எழுதியிருந்தார். நாவலர் சோம சுந்தரபாரதி பாரதி எட்டயபுரத்தில் பிறந்தவர். எட்டயபுரத்தில் இரண்டு பாரதிகள் உண்டு. பாரதியார் குடும்பத்தை நாவலர் சோமசுந்தர பாரதி நேசித்தது உண்டு. அவருடைய வீடு இன்றைக்கும் எட்டயபுரத்தில் இருக்கின்றது. அது திருமண மண்டபமாக ஆக்கப்பட்டு விட்டது. 

அதுபோல வரகவி சுப்ரமணி பாரதியும் முக்கியமானவர். கவி பாடுபவர். அவரும் பாரதியாரை நேசித்தவர். சாத்தூர் ரெ.விஸ்வநாத பாரதி என  ஒருவர் உண்டு. எங்கள் பக்கத்து ஊர்க்காரர். விஸ்வநாத பாரதிக்கும் எங்களுடைய பாட்டனாருக்கும் நல்ல தொடர்பு உண்டு. அவரைப்பற்றி மறைந்த சட்டமன்ற  முன்னாள் உறுப்பினர் சங்கரபாண்டியபுரம் சீனிவாச நாயக்கர் என்னுடைய நண்பர் விஸ்வநாத பாரதி சாத்தூரில் இருப்பார். சாத்தூர் மணிசங்கர் பவனில் உட்கார்ந்து நாங்கள் மாலை நேரங்களில்  அல்வா சாப்பிட்டுக் கொண்டு பேசுவோம்  என்று சீனி நாயக்கர்  என்னிடம் சொல்லியது உண்டு. 

சுத்தானந்த பாரதி அவரும் கவனிக்கப்பட்டவர். சேரன்மாதேவி வ.வே.சு ஐயர் நடத்திய ஆசிரமத்தில் சாரணர் இயக்கத்தை துவக்கியவர்.. 
இப்படி பாரதி என சொல்லப்பட்ட நாவலர் சோமசுந்தரபாரதி, வரகவி சுப்ரமணிய பாரதி, சாத்தூர் ரெ.விஸ்வநாதபாரதி சுத்தானந்த பாரதி என்பவர்களெல்லாம் கடந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய தளமானாலும் சரி, நாட்டில் விடுதலை தளமானாலும் சரி, பங்குபெற்றவர்கள். அவர்கள் பற்றி மணிகண்டன் எழுதியது கவனித்திற்குரியது. 

சுத்தானந்த பாரதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். தென்மாவட்டங்களில் தான் பாரதி என்று அழைத்தது உண்டு.

நந்தனார் சரித்திரம், பாடல்கள் எழுதிய
"கோபாலகிருஷ்ண பாரதியார்". ம் சிறந்த படைப்பாளர்..

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPostings
11-7-2021.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...