#கறுப்பு_ஜுலை_கலவரம்_1983.
———————————————————
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
கறுப்பு ஜுலை கலவரம் 83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளதாக கூறுவர்
கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துக்கள் என அனைத்தையும் அழிக்கும் செயற்படாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.
ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு (ஜூலையில்) நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.
Black July - 38 years ago rampaging xenophobic Sinhala mobs burned, looted, gang raped and murdered over 3,000 innocent Tamils. This pogrom, part of Sri Lanka’s structural genocide against it’s Tamil nation internally displaced over 250,000 and Tamil fleeing the country. It was impulse that led to a surge in the growth of the Tamil diaspora across the world, now as large the number of Tamils in Sri Lanka.
No comments:
Post a Comment