Sunday, July 25, 2021

#தமிழகத்தில்_மதுவிலக்கு

#தமிழகத்தில்_மதுவிலக்கு
———————————————————-
நன்றாக நினைவிருக்கின்றது, 1970-71கால கட்டங்களில் கிராமங்களில் குளக்கரை ஓரம் சின்னப் பந்தல் போட்டு கள்ளுக்கடை சாராயக்கடை என்று சுண்ணாம்பால் தகரத்தில் எழுதிய பலகை உண்டு. இவை கலைஞர் ஆட்சி கால கட்டத்தில் திறக்கபட்டன.

மூதறிஞர் ராஜாஜி அன்றைக்கு கடும் மழையில் குடையை பிடித்து கொண்டு கோபாலபுரத்தில் உள்ள அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் வீட்டுக்கு வந்து மது விலக்கை பின்பற்றுங்கள். கள், சாராயக் கடைகள் வேண்டாம் என்று வலியுறுத்தினார். தலைவர் கலைஞர் அதை கேட்டுக் கொண்டு, மூதறிஞர் ராஜாஜியினுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்க்கு கவலை படுகிறேன் என்றார். காமராஜரும் அன்று மதுக்கடைகள கூடாது

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் பெருகியும், ஸ்பிரட்டை குடித்தும் பல உயிர்களை இழந்துள்ளோம் அதற்காக அதை ஒழுங்கு படுத்தும் வகையில் கள்- சராய கடைகள் திறக்கின்றோம் என்ற விளக்கத்தை கொடுத்தார். பல இளைஞர்கள் அன்றைக்கு கள்ளச் சாராயம் குடித்து மாண்டனர். மேலும் புதுச்சேரி சென்று மது பாட்டில்களை கடத்தியும் வந்தனர். காவல் துறைக்கும்
இதில் பெரும் பணியாக அன்று இருந்தது.

இப்படிதான் அன்றைக்கு கள்ளச் சாராய கடைகள் திறக்கப்பட்டன. நான் சொல்வது 1970,71 கால கட்டங்கள். கலைஞர் ஆட்சியில் முதறிஞர் ராஜாஜியின் விருப்பத்தின் படி மது விலக்கு கொண்டு வந்து கள்ளுச் சாராயக் கடைகளை மூடியது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருகின்றார் 1981ல் கள்ளுக் கடையும் 1983ல் இந்தியாவில் செய்த வெளிநாட்டு மதுவகைகளைIMFL டாஸ்மார்க் மூலமாக விற்பனைக்கு கொண்டுவந்தார். இதுதான் தமிழகத்தில் மதுவைக் கொண்டுவந்த கடந்த கால நிகழ்வுகள்.

எனக்குத் தெரிந்த மங்களான நினைவுகளில் 1950-60 கட்டங்களில் தீயிந்து போன பேட்டரி செல்கள், ஊமத்தங்காய், கருப்பட்டி போன்ற பொருள்களை கொண்டு கள்ளச் சாராயம் காய்ச்சி சட்டத்திற்கு விரோதமாக விற்றனர். இது குறித்து பல ஆயிரக்கணக்கான வழக்குகள் காவல் துறையினர் தொடுத்தனர். இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சொந்த ஊர்களுக்கு வரும் போது ரம் பாட்டில் என்ற மது வகைகளை கொண்டுவருவார்கள். அந்த பாட்டில்களை பெறுவதற்கு அந்த இராணுவ வீரர்களின் வீடுகளுக்கு நடையாக நடந்துசெல்வது கேளிக்கையாக இருந்தது.
ரம் பாட்டில்களை இளைஞர்கள் அதிகமாக் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுத்தும் வாங்குவதுண்டு. அதிகபட்சம் இரண்டு பத்துரூபாய் தாள்களாக இருவது ரூபாய் கொடுத்து வங்குவது பெரிய தொகையாக அன்று இருந்தது.அதை மில்லடரி குதிரை சரக்கு என கிராமத்தில் என கூறுவது உண்டு

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
25-7-2021.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...