Friday, July 16, 2021

#பிரஜா_சோசலிசக்_கட்சி_சம்யுக்த_சோசலிசக்_கட்சி_PSP_SSP

#பிரஜா_சோசலிசக்_கட்சி_சம்யுக்த_சோசலிசக்_கட்சி_PSP_SSP
———————————————————-
நாடு விடுதலை பெற்ற பின் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், #ஜெயபிரகாஷ்_நாராயணன், #ஆச்சார்ய_நரேந்திர_தேவ் போன்றோர்களால்உருவாக்கப்பட்டதுதான் சோசலிசக் கட்சி.

தமிழ்நாட்டிலும் சோஷலிசக் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். குடிசை சின்னம், ஆலமர சின்னம் தேர்தல் சின்னமாக இருந்தது.
தமிழ்நாட்டில் ஈரோடு நல்லசிவம், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற கட்சி தலைவராக இருந்த பட்டுக்கோட்டை ஏ.ஆர்.மாரிமுத்து சோசலிச கட்சியிலிருந்துதான் காங்கிரஸில் இணைந்தார்.பூதலூர் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் எம்எல்சியாக இருந்த ஆறுமுகம் சாமியும் சோசியலிஸ்டாக இருந்தார்.இப்படி பல சோசலிஸ்டுகள் அன்றைக்கு தமிழகத்தில் இருந்தது போட்டியிட்டது. சிலர் சட்டமன்ற உறுப்பினர்களாக சென்றார்கள். சோசலிஸ்ட் என்பது ஒரு கவனிக்கப்பட வேண்டிய அரசியல் இயக்கமாக இந்திய அரசியலில் இருந்தது.







கம்யூனிஸ்ட்டுகள் போல எல்லோருக்கும் எல்லாம் சோசலிசம் வேண்டுமென்ற நிலையில், அந்த இயக்கம் நிறுவப்பட்டன. அதைப்பார்த்துதான் பண்டிதர் நேரு கூட காங்கிரஸ் கட்சி சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்று தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்தினார்.
சென்னை ஆவடியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் இந்தத் தீர்மானம் முதன்மை பெற்றது.
சோசலிசம்  என்ற அடிப்படையில்தான் ரஷ்யாவில் உள்ள திட்டத்தின்படி ஐந்தாண்டு திட்டங்கள் கூட இந்தியாவில் கொண்டுவரப்பட்டன.

இப்படி ஒரு சோசலிஸ்ட் பற்றி இன்றைக்கு அடையாளம் தெரியாமல், இந்திய வரலாற்றில் இன்றைய நிலை இருக்கின்றது. பலர்  சோசலிஸ்ட் கட்சிகள் எங்கே இருக்கின்றது என்று கேட்கின்ற நிலையில், கேள்விகளை எழுப்புகின்றனர்.

பலருக்கு சமூக வலைத்தளங்களில் கடந்த 20 ஆண்டுகள்தான் நடந்த இந்திய அரசு, தமிழக அரசியலை பற்றி தெரிந்து கொள்கிறார்களே தவிர அதற்கு முன் நடந்தது என்ன, எப்படி, அதனுடைய தொடர்ச்சியாக இன்றைய நிலை என்ன, அதன் நீட்சி என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இன்றைக்கு இருக்கின்ற தலைவர்கள் இன்றைக்கு இருக்கிற நிலையைப் பற்றி பேசுகின்றார்களே ஒழிய, இதனுடைய முன்னோட்டம் எப்படி இருந்தது அதனுடைய தொடர்ச்சி தானே இன்றைய அரசியல் என்பதை யாரும் புரிந்து கொள்ளவும் இல்லை. அதை தெரிந்துகொள்ள தயாராகவும் இல்லை என்ற நிலையில் இருக்கிறார்கள்.

இந்தவகையில் சோசலிஸ்ட் கட்சியைப் பற்றி சிலவற்றை சொல்ல வேண்டும். சோசலிஸ்ட் கட்சி மக்கள் செல்வாக்குப் பெற்ற அப்பழுக்கற்ற கட்சியாக அன்றைக்கு அமைந்தது.
தீவிரமாக நேருவையும் காங்கிரசையும் சோசலிஸ்ட் கட்சி எதிர்த்தது. இதில் இருந்த அத்தனை தரவுகளும் நாட்டின் விடுதலை போராட்டத்திற்குச் சிறை சென்றவர்கள். 

#ராம்_மனோகர்_லோகியோ சொல்வார் உயிரிழப்பு இல்லாத வன்முறை ஏற்கவேண்டும் என்று சொன்ன கருத்தை பலரும் எதிர்த்தனர். அதைப்போல் சோசலிஸ்ட்டைச் சேர்ந்த லோகியோவைத் தவிர மற்றவர்களெல்
லாம் மொழிக் கொள்கையில், எல்லா மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன்,  ஆச்சாரியார் நரேந்திரதேவ், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் கூட சோசியலிஸ்ட்யாக இருந்தவர்தான்.

சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாம், மொழிக் கொள்கையில் எல்லா மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும், எல்லா கலாச்சாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் இருந்தார்கள்.
இப்படியான சோசலிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் ஜனதா கட்சியில் இணைந்தது. மொரார்ஜி தலைமையில் பிரதமராக இருந்தபோது, இந்திராவை எதிர்த்து போட்டியிட்ட ராஜநாராயணன் சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்.
முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், நிதீஷ்குமார், ராம் விலாஸ் பஸ்வான் போன்ற பலர் சோஷலிஸ்ட் கட்சியில் கடைசி தாக்கமாக இன்றைய இன்றைய கட்டத்தில் இருந்தவர்கள்.

சோஷலிஸ்ட் கட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு, பிரதமர் நேரு துணைப் பிரதமர் பொறுப்பை தருகிறேன் என்றார். ஜெ.பி. அதை மறுத்துவிட்டு சோஷலிஸ்ட் இயக்கத்தை நிறுவினார்.

ஆச்சார்ய நரேந்திர தேவ், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் குரு. அவரும் சோசலிஸ்ட் கட்சியை முன்னெடுத்தவர். அவர் ஈரோட்டில் தான் மறைந்தார். எனவே அவர் பெயரில்தான் ஈரோடு அரசினர் பயணியர் விடுதியை நரேந்திரதேவ் விடுதி என்று பெயரிடப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட நேர்மையான ஒரு அரசியல் தலைவர் ஆச்சார்ய நரேந்திர தேவ். ஆச்சார்ய கிருபளானி, ராம் மனோகர் போன்றவர்களெல்லாம் அற்புதமான தலைவர்கள், கொள்கையான தலைவர்கள்.

1951 தேர்தலில் பிரஜா சோசலிஸ்ட் என்ற கட்சியை அமைத்து தேர்தல் களத்தில் போட்டியிட்டவர்கள்.
1951-52 கட்ட தேர்தல் தேர்தல் நெருங்கிவிட்டதால் மற்ற கொள்கை ரீதியான விஷயங்களை பின்னால் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று, ஒரே கட்சி, ஒரே கொள்கை, நேர்மையான ஆட்சி என்று அறிவித்து பிஎஸ்பி அந்தத் தேர்தலைச் சந்தித்தது.
ஜெபி தலைமையில் பெரும் செல்வாக்கு உள்ள அந்த தலைவர்கள் பிரஜா சோசலிஸ்ட் தலைவர்கள். 1951-52 தேர்தலில் 11 சதவீத வாக்குகள் பெற்றார்கள். 12 இடங்களில் பல தொகுதியில் 2-ம் இடம் பெற்றார்கள். அதே கட்டத்தில் காங்கிரஸ் 46 சதவீத வாக்குகள் பெற்றன. ஜனசங்கம் வாக்குகள் பெற்ற மூன்று சதவீத வாக்குகள் பெற்று 3 இடங்களைப் பெற்றது. இவை நாடாளுமன்றத் தேர்தலில் நடந்த விஷயமாகும்.

ஜெபி அரசியலைத் துறந்து சர்வோதயா இயக்கத்தில் சேர்ந்தார். அதன்பின் 1955இல் பிஎஸ்பி உடைந்து லோகியோ தலைமையில் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி என பெயரிட்டு புதிய கட்சியைத் துவங்கினார்.

கடந்த1972-79 வரை இந்தக் கட்சி தனியாக இருந்தது. லோகியோ யாருடனும் சமரசம் செய்து கொள்ளாத ஒரு தலைவராவார். அவருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் லோகியோ வாதிகள் என்று சொல்வார்கள். அந்த சிந்தனை ஓட்டத்தில்தான் 1980-களில் மண்டல கமிஷன் அரசியல் வந்தது.
1990 வரை முலாயம் சிங், லல்லு பிரசாத் யாதவ், லோகியோவினுடைய கொள்கைகளை நிலைநாட்டுவோம் என்று பேசினார்கள். இவர்கள் இந்த தாக்கத்தை கொண்டவர்கள்தான் உத்ரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இன்றுவரை பல அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.
லோகியோ மறைந்தார். பிஎஸ்பி, எஸ்எஸ்பி இரண்டும் இணைந்து சோசலிஸ்ட் கட்சி என்று பெயரிட்டு இயங்கியது. பின் அவசர நிலை காலம். இந்த லோகியோ வாதிகளும், சோசலிச வாதிகளும்சிறையில்அடைக்கப்பட்டனர்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனுடைய அமைதி புரட்சியின் விளைவாக, ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தலைமையிலான ஆட்சியில் லோகியோ சோஷலிஸ்ட்களும் அமைச்சரவையில் பங்கேற்றனர்.

அன்றைக்கு சோசலிஸ்ட் கட்சிக்கு ராஜநாராயணன், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மணிராம் போன்றோர் முக்கிய தலைவர்கள். அன்றைக்கு அவசரநிலை முடிந்து தேர்தல்களத்தில் ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்டுகள், லோக்தள் கட்சி, ஜனசக்தி கட்சி ஆகியன சேர்ந்து முறையாக ஜனதா கட்சி என்று உருவெடுத்து அன்றைக்கு ஆட்சி அமைத்தது. 

மொரார்ஜி தலைமையில் ஆட்சியில் இருந்தபோது பல பிரச்சனைகள். ராஜநாராயணனால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதற்கு துணையாக ஜார்ஜ் பெர்னாண்டஸ், மணி ராம் பக்ரி போன்றோரெல்லாம் அந்த ஆட்சி கவிழக் காரணமாக இருந்தனர்.
மணிராம் பக்ரிடம் கேள்விகேட்டபோது நாடாளுமன்ற பாதுகாவலர்களின் கையை கடித்து விட்டார். இப்படி கரடுமுரடானவர் மணிராம் பக்கிரியை சொல்வார்கள். அவர் நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர். அதே போல ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சிக்கு எதிரி என்று நானாஜி தேஷ்முக் குறிப்பிட்டதெல்லாம் சோஷலிஸ்ட் கடுமையாக கண்டித்தது.
நானாஜி தேஷ்முக்  ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி அளித்து , அவர்கள் மக்கள் பணியில் தான் இருக்கின்றனர், ஆட்சியிலோ அதிகாரத்திற்கோ வராதவர்கள் என்று தெளிவாக சொன்னார்.
இப்படியான சிக்கல்கள் அந்தக் காலத்தில் நடந்தது. அதேபோல இரட்டை உறுப்பினர் பிரச்சினைகளை ஜனதா கிளப்பினார்கள். ஆர்எஸ்எஸ்-ல் இருப்பவர்கள் ஜனதா கட்சியில் இருக்கக்கூடாது என்று. இப்படி எல்லாம் அந்தக் கட்டத்தில் சோஷலிஸ்ட்களுடைய  பிரச்சனையால் அன்றைக்கு ஜனதா ஆட்சி முடிந்தது. 
அதேபோல் சரண் சிங் உள்ளிட்டோர் சில பிரச்சினைகளை எடுத்து வைத்து, அன்றைக்கு மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்தது.. 

பிறகு சரண் சிங் அரசும் இந்திராகாந்தி தலைமையில் அதிமுக சேர்ந்து அமைந்து அதுவும் சில நாட்களே இருந்தன. அன்றைக்கு சரண்சிங், இந்திரா காந்தி என சேர்ந்து  ஆட்சி
அமைந்தது.அது பின்பு,சரியாக வரவில்லை. 
ஆர்எஸ்எஸ்யை கடுமையாக எதிர்க்கக்கூடிய நிலையில் ஜன சங்கம், ஜனதா கட்சியில் இருக்க முடியவில்லை. 
இதைக் குறித்தெல்லாம் அந்தக் காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்கள் வேதனைப் பட்டார்கள். அன்றைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் தினமணி ஏடுகளில் இப்படியெல்லாம் தேவையில்லாமல் ஜனதா கட்சியைப் பிளவு செய்தார்களே இவர்கள் ஜனநாயகத்தை வீழ்த்துகின்ற நபர்கள் என்றெல்லாம் அன்றைக்கு தலையங்கங்கள் வந்தன. 

அன்றைக்கு இந்திராகாந்தியை கைது செய்ய வேண்டுமென்று பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு அழுத்தம் கொடுத்த சரண்சிங், அதே இந்திராவோடு சேர்ந்து ஆட்சி அமைக்க தயாரானார். 

இப்படியெல்லாம் பல கோளாறுகள். நானாஜி தேஷ்முக் எவ்வளவோ இதை நடுநிலைமையிலிருந்து பேசி சமரசம் செய்ய வேண்டுமென்று நினைத்தாலும் ஜனதா கட்சி உடைந்துவிட்டது. 
சமாதான நடவடிக்கை எல்லாம் பயனளிக்கவில்லை. பல அரசியல் பிரமுகர்கள்  இடையில் புகுந்து அதை தடுத்து விட்டனர்.

கடந்த1977-ல் மக்களுடைய வாக்கும், நோக்கமும் நிறைவேறாமல் ஆகிவிட்டது. பெர்னாண்டஸ் அந்த நேரத்தில் ஜனதா கட்சியின் ஆட்சி உடைவதற்கு காரணமாக இருந்தார் என்று எல்லாம் செய்திகள் வந்தது.
பெர்னாண்டஸ் நீண்டகால அரசியலும், தியாகமும், நேர்மையும், தைரியமும் கொண்டவர். அப்படிப்பட்ட ஆளுமைகளை காண்பது அறியது தான். ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் பேச்சாற்றல் சான்று கொண்ட பெர்னாண்டஸ் எப்படி இப்படி ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டார் என்று இன்றைக்கு வரை அதற்கு பதில் தெரியவில்லை. 

சோஷலிஸ்டுகள் என்பது ஒரு முக்கியமான தாக்கமாக இந்திய அரசியலில் ஒரு 30 ஆண்டு காலம் இருந்ததை எவராலும் மறுக்க முடியாது. ஏன் தமிழகத்தில் கூட அது: முக்கிய ஒரு அமைப்பாக இயங்கியது எல்லாம் நாடறியும். 

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கும்பொழுது சோசலிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர் ஈரோடு நல்லசிவம் கடுமையாக சட்டமன்றத்தில் பேசியது, இன்றைக்கு ஆவணமாக இருக்கிறது. அதைப்போல் காவேரி பிரச்சினையில் நல்லசிவம் சட்ட மன்றத்தில் பேசியது இன்றைக்கும் தெளிவாக இருக்கின்றது. 
இதையெல்லாம் தமிழகத்திலுள்ள சோஷலிஸ்டுகள் அன்று இயக்கிய விதமே வித்தியாசமாக இருந்தது. அந்த இயக்கம் காணாமல் போனது இந்திய ஜனநாயகத்துக்குப் பெரும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது என்பதை இன்றைக்கு உள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

சோஷலிஸ்டுகள் யார், என்ன, இயக்கத்தின் வரலாறு என்ன என்று என்பதை தேடிப்பிடித்து படியுங்கள் அதற்குப் பிறகு உங்களுக்கு ஒரு தெளிவான சிந்தனை வரும் என்பதைச் சொல்வதற்குத்தான் இந்தப் பதிவு.
சில கேள்விகள், விடுதலை இந்தியாவில், அரசியலில் பல அவிழ்க்க முடியாத முடிச்சுகள் உள்ளன. ஏன் அப்படி நடந்தது காரணம் என்ன, பின்னணி என்ன இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் இன்றைக்கும் இருக்கின்றோம். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே சென்றார். காந்தி அந்தக் கட்டத்தில் என்ன சொன்னார், ஏன் பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது அதை தடுக்க கூட  முக்கிய தலைவர்கள் முயல வில்லை என்பதற்கும் விடை தெரியவில்லை. 

இப்படி பல விடயங்கள். அதேபோலவே சோஷலிஸ்ட் கட்சி ஏன் தொடர்ந்து இந்திய அரசியலில் இருக்க முடியவில்லை என்பதையும் அதற்கான விடைகளை காணமுடியவில்லை. விடை தெரியாத பல புதிர்கள் இந்திய அரசியலில்  பல உண்டு. தொடர்ந்து அதை நான் தொடர்ந்து பதிவு செய்வேன். அதற்கான காரண காரியங்கள் இன்று வரைக்கும் தெரியவில்லை. எத்தனையோ விஷயங்கள். அதன் முடிவுகள் என்ன, ஏன் அது காணாமல் போனது, ஏன் அதற்கான பதில்கள் தெரியவில்லை.

வெறும் வடபுலம் மட்டுமல்ல சோசலிச கட்சி இந்தியா முழுவதும்  இயங்கின. அந்த இயக்கம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.

சோசலிஸ்ட் கட்சி நல்ல இயக்கம். அதன் வரலாற்றையாவது பல பேர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்தப் பதிவு.

••••••••
Praja Socialist Party

The Praja Socialist Party, abbreviated as PSP, was an Indian political party.It was founded when the Socialist Party, led by Jayaprakash Narayan, Acharya Narendra Deva and Basawon Singh (Sinha), merged with the Kisan Mazdoor Praja Party led by J. B. Kripalani (former president of the Indian National Congress and a close associate of Jawaharlal Nehru).

Leader
Jayaprakash Narayan
Surendranath Dwivedy
Acharya Narendra Deva
Basawon Singh (Sinha)
Yugal Kishore Pathak
Hariprasad C.
J. B. Kripalani
Founded
September 1952; 68 years ago
Dissolved
1972
Succeeded by
Samyukta Socialist Party
Headquarters
18, Windsor Place, New Delhi
Ideology
Socialism
Political position
Left-wing
International affiliation
Asian Socialist Conference
Politics of India
Political parties
Elections
It led the cabinet under Pattom A. Thanu Pillai as chief minister of State of Travancore-Cochin from March 1954 to February 1955. A section led by Rammanohar Lohia broke from the party in 1955,[citation needed] resuming the name "Socialist Party".[citation needed]. It again came to power in the new state of Kerala under Pattom A. Thanu Pillai from February 1960 to September 1962. In 1960, Kripalani left the party and in 1964, Asoka Mehta joined Congress after his expulsion from the party.

Another section of the party, led by the trade union leader George Fernandes, broke off to become the Samyukta Socialist Party in 1969. In 1972, a section merged with Fernandes' party to become the Samyukta Socialist Party/Socialist Party once more, before becoming part of the Janata coalition following the Emergency in 1977.

In September 1952, the Kisan Mazdoor Praja Party merged with the Socialist Party with J. B. Kriplani as the chairman and Asoka Mehta as the general secretary.

At the party's first general election in 1957, the PSP won 10.41% of the total votes and 19 seats in the Lok Sabha.However, the party's vote share continued to decline over the next few elections. It won 6.81% of the total votes and 12 seats in the Lok Sabha in 1962,[6] 3.06% of the total votes and 13 seats in the Lok Sabha in 1967and only 1.04% of the total votes and only 2 seats in the Lok Sabha in 1971.
——————————-

Samyukta Socialist Part(United Socialist Party, SSP), was a political party in India from 1964 to 1972. SSP was formed through a split in the Praja Socialist Party (PSP) in 1964. In 1972, SSP was reunited with PSP, forming the Socialist Party

Samyukta Socialist Party

Leader
George Fernandes
Founded
1964
Dissolved
1972
Split from
Praja Socialist Party
Succeeded by
Samyukta Socialist Party/Socialist Party.

The General Secretary of the SSP from 1969 to 1971 was George Fernandes.

#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
16-07-2021.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...