Thursday, July 8, 2021

#விருதுநகர்_மாவட்ட_பிரச்சனைகள்_சில….



———————————————————-
விருதுநகர் மாவட்டம்,வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமென்ட் ஆலை கடந்த ஆட்சியாளர்களால் பெரிதும் சீர்குலைக்கப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இந்த ஆலை முற்றிலும் செயலிழந்துள்ளது. அந்த ஆலையை புணரமைத்து மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.இப்பிரச்சனையில் உயர் நீதி மன்றத்தில்1984 முதல் இரு முறை 
ரிட் மனு தாக்கல் செய்தேன்.

ஶ்ரீவில்லிபுத்தூர்-மதுரை சாலையில் உள்ள கூட்டுறவு நூற்பாலை 1,500 -ல் தொழிலாளர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2003-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மூடப்பட்டது.மிகப்பெரிய கட்டடங்கள், நிறைய காலியிடம் பயன்பாடின்றி உள்ளது. மீண்டும் கூட்டுறவு நூற்பாலையை செயல்படுத்தலாம். அல்லது அங்கு பொருத்தமான தொழில் தொடங்கலாம். குறிப்பாக மாம்பழக் கூழ் தயாரித்தல் போன்ற தொழில் துவங்கலாம். 

விருதுநகர் - சாத்தூர் இடையே தொழிற்பேட்டை தொடங்க விரைவாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 

விருதுநகர் மாவட்டத்தில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவது தீப்பெட்டி,பட்டாசுத்தொழில், அச்சு தொழில். இந்த தொழில்கள் ஒவ்வொரு ஆண்டும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தீப்பெட்டி,பட்டாசுத்தொழில், மூல பொருட்கள் எளிதாக கிடைக்க வேண்டும்.பல மாநிலங்களில் திடீரென பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதால் உற்பத்தியான பட்டாசு தேங்கி கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிப்பதன் மூலமே பட்டாசு தொழிலைப் பாதுகாக்க முடியும்.

மாவட்டத்தில் மற்றுமொரு பிரதான தொழில் ஜவுளித் தொழில். பஞ்சாலைகள், விசைத்தறி, கைத்தறி, கார்மென்ட்ஸ் ஆகியவை உள்ளன. அதிகமான மின் கட்டணம் மற்றும் மத்திய அரசின் ஏற்றுமதிக் கொள்கைகளால் பஞ்சாலைகள் பல நெருக்கடியை சந்திக்கிறது.
இதனால், இராஜபாளையம் பகுதியில் பல ஆலைகள் மூடப்பட்டுள்ளது. பஞ்சாலை தொழில் பாதுகாப்பிற்கும், மேம்பாட்டிற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மலைத்தோட்ட விளைப்பொருட்கள் உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய்  உற்பத்தியில் கவனம் செலுத்தவேண்டும்.

ஆழகர் அணை திட்டம், அச்சன்கோவில்- பம்பை- வைப்பாறு
இணைப்பு

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே சென்பக தோப்பு காடு பாதுகாப்பு.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.07.2021.
#ksrposts

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...